மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் நியமன அறங்காவர்கள் எதிர் இந்து சமய அறநிலையத்துறை வழக்கில் உத்தரவு
மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் செப்டம்பர் 17, 2026 அன்று நடைபெறும் நிலையில்,
சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை வழங்கிய முக்கியத் தீர்ப்பு கும்பாபிஷேக விழாவின் போது சமஸ்கிருத வேத மந்திரங்களுடன் சேர்த்து, தமிழ் பக்திநெறி நூல்களான திருமுறைகளையும் (தேவாரம், திருவாசகம்) பாட வேண்டும் எனத் தொடரப்பட்ட வழக்கில்
நீதிமன்றம் வழங்கிய உத்தரவு கும்பாபிஷேகத்தின் முக்கிய சடங்குகளின் போது, சமஸ்கிருத வேத பாராயணத்திற்கு இணையாக தமிழ் திருமுறை ஓதுவார்களையும் அனுமதிக்க வேண்டும் என் உத்தரவிட்டதன்
மூலம் தமிழ் சைவ பக்தி மரபிற்கு கும்பாபிஷேகத்தில் உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது அது குழந்தையான திருஞானசம்பந்தர் அருள் பெற்ற ஸ்தலம் ஆகவே உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்து சமய அறநிலையத்துறை தரப்பு கும்பாபிஷேக அழைப்பிதழில் 2038 வரை பதவியில் உள்ள கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்களின் பெயர்கள் விடுபட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்,
இந்து சமய அறநிலையத்துறைக்கு (HR&CE) உயர் நீதிமன்றம் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. "ஆலயம் என்பது மக்கள் அமைதி தேடி வரும் இடம். அப்படிப்பட்ட புனிதமான இடத்தில் இந்து சமய அறநிலையத்துறை அரசியல் செய்வது துரதிர்ஷ்டவசமானது. வழிபாட்டுத் ஸ்தலங்களில் அரசியல் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று நீதிபதி கடுமையாகக் குறிப்பிட்டுள்ளார். இனிவரும் காலங்களில் வழிபாட்டுத் ஸ்தலங்களில் எந்தவித அரசியலும் நடைபெறக் கூடாது என்றும்,
விதிமுறைகளின்படி மட்டுமே கோயில்கள் செயல்பட வேண்டும் என்றும் அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. (ஏற்கனவே 3,000 அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டு விட்டதால், மீண்டும் அச்சிடுவது சாத்தியமில்லை என்ற துறையின் வாதமும் பதிவாகியுள்ளது). கோயில் நிர்வாகத்தில் மாநில அரசின் தலையீடு மற்றும் புனரமைப்புப் பணிகள் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்குகளிலும் நீதிமன்றம் மிகத் தெளிவான எல்லையை வகுத்துள்ளது. "மேம்பாடு என்ற பெயரில் தர்மத்தையோ, சட்டத்தையோ அல்லது அரசியலமைப்புச் சட்ட வரம்புகளையோ மீற முடியாது" எனக் கூறி, அது தொடர்பான அரசாணையை (G.O. Ms. No.135) நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ஒழுங்குபடுத்தும் அதிகாரம் என்பது ஒட்டுமொத்தமாக ஒரு அமைப்பைக் கையகப்படுத்துவது ஆகாது எனத் தெரிவித்து, எதிர்காலப் புனரமைப்புகள் சட்ட வரம்பிற்குள் நடப்பதை உறுதி செய்ய விரிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. கும்பாபிஷேகத்திற்கான 90 சதவீதத்துக்கும் அதிகமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், செப்டம்பர் 6-ஆம் தேதி முதல் முதற்கட்ட பூர்வாங்க வழிபாட்டுச் சடங்குகள் துவங்க உள்ளன ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் வழக்கில் சமீபத்தில் வெளியான தீர்ப்பை நாம் முழுவதும் தந்துள்ள நிலையில் படியுங்கள்.
இதுவரை HR&CE அமைச்சர் மற்றும் ஊழியர்கள், விசாரணையின் போது பெஞ்சில் இருந்து வாய்மொழி கருத்துக்களில் (பல ஊடக நிறுவனங்களால் தெரிவிக்கப்பட்டது) மற்றும் எழுத்துப்பூர்வ தீர்ப்பில் குறைந்த அளவிற்கு உயர் நீதிமன்றத்தால் தணிக்கை செய்யப்பட்டவர்கள்
மூன்று பெண் அறங்காவலர்களும் சட்டம் மற்றும் அனைத்து தீர்ப்புகளின் கீழ் தங்கள் உரிமைகளுக்காக எழுந்து நின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இரண்டு ஆண் அறங்காவலர்களும் உடனடியாக நீதிமன்றத்தில் தங்கள் உரிமைகளை விட்டுக்கொடுத்து, உறுதியாக நின்ற பெண்களால் தங்கள் உரிமைகளை மீட்டெடுத்தனர். அவர்களைப் பற்றி எவ்வளவு குறைவாகக் கூறுகிறதோ அவ்வளவு சிறந்தது.மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழுவின் உறுப்பினர் டி. சுப்புலட்சுமி. செப்டம்பர் 17, 2026 அன்று நடைபெறவுள்ள கும்பாபிஷேக விழாவிற்கான அதிகாரப்பூர்வ அழைப்பிதழில், முறைப்படி நியமிக்கப்பட்ட அறங்காவலர்களின் பெயர்கள் முற்றிலும் தவிர்க்கப்பட்டு, "கோவில் நிர்வாகம்" என்று மட்டும் அச்சிடப்பட்டிருந்தது. இதனை எதிர்த்தும், அறங்காவலர்களின் சட்டப்பூர்வ கடமைகளை நிலைநாட்டவும் சுப்புலட்சுமி நீதிமன்றத்தை நாடினார் அதில் "கோவில் என்பது மக்கள் அமைதி தேடி வரும் இடம்; அங்கு இந்து சமய அறநிலையத்துறை அரசியல் செய்வது துரதிர்ஷ்டவசமானது" என நீதிபதி சாடினார். ஏற்கனவே 3,000 அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுவிட்டதால் தற்போதைக்கு அழைப்பிதழை மாற்ற முடியாது என்ற அரசின் வாதத்தை ஏற்ற நீதிமன்றம், அதற்கு மாற்றாக கும்பாபிஷேகத்திற்குப் பின் வைக்கப்படும் நிரந்தரக் கல்வெட்டுகளில் ஐந்து அறங்காவலர்களின் பெயர்களும் கட்டாயம் இடம்பெற வேண்டும் என உத்தரவிட்டது. ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழுவினர் இந்த வழக்கில் நீதிமன்றத்தால் தானாக முன்வந்து (Suo Motu) சேர்க்கப்பட்ட ஐந்து முக்கிய அறங்காவலர்கள் ருக்மிணி பழனிவேல் ராஜன் (அறங்காவலர் குழுத் தலைவர், டி. சுப்புலட்சுமி (வழக்குத் தொடர்ந்த அறங்காவலர் குழு உறுப்பினர்)எஸ். மீனா (அறங்காவலர் குழு உறுப்பினர்) பி.கே.எம். செல்லையா (அறங்காவலர் குழு உறுப்பினர்) எம். சீனிவாசன் (அறங்காவலர் குழு உறுப்பினர்) இந்த ஐந்து அறங்காவலர்களின் பதவிக்காலம் 2028 ஜனவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது) அறங்காவலர் பதவி என்பது வெறும் மரியாதைக்குரியது மட்டுமல்ல; அது இந்து சமய அறநிலையத்துறை சட்டம் பிரிவு 47-ன் கீழ் வழங்கப்பட்ட சட்டப்பூர்வமான நிர்வாகப் பொறுப்பு என்பதை நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆன்மீக வழிபாட்டுத் ஸ்தலங்களை அரசியல் மேடையாக மாற்றக் கூடாது என்றும், இனிவரும் காலங்களில் கோவில்கள் விதிமுறைகளின்படி மட்டுமே இயங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்றத் தீர்ப்பிற்கு முழுமையாகக் கட்டுப்பட்டு, உத்தரவுகள் அனைத்தும் முறையாகப் பின்பற்றப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ். ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை என்பது ஆலய நடைமுறை பின்பற்றியே பணி செய்ய வேண்டும், அவர்கள் ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள், உரிமையாளர்கள் அல்ல, " தென்னவன் மகிழ்அங் கயற்கண்ணி கோயில் திருப்பள்ளி யறையின் முன்பு.
சிங்கார அறைகட்டி அபிடேக மாதிச் சிறப்புகள் விழாப்பூசையும்
எந்நாளும் நடக்கவில் லாபுரக் கோயில் எழில் மண்டபமும்.
இதமாக வேகட்டி மதுரேசர் அம்மையுடன் இனிதாய் எழுந்தருளியே
வன்னஅபி டேகவகை பாவாடை வரிசையும் வளமையொடு கொண்டருளவே
வாகான செந்நெல்வகை வில்லா புரத்தையும் மாதர்முத் தம்மைபேரால்
நன்னயத் தொடுதலத் தார்கள்பா ரிசமாக நண்பினுட னேஉதவினான் ரங்கக்ருட்டினமுத்து வீரனருள் விசயரங்கச்சொக்க நாதேந்த்ரனே.".....இது நாயக்க மன்னர் திருப்பணி குறித்த பாடல் ஆலயத்தில் ஹிந்து அறநிலையத்துறை வரும் வருவாய் மட்டுமே நோக்கம் அல்வாமல் ஆலய வளர்ச்சிக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து பயன்டுத்த வேண்டும்










































கருத்துகள்