முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் மு. பிரதாப் வெளியிட்ட சுற்றறிக்கை அரசாணையாக மாறுமா?

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் மு. பிரதாப் அரசு அலுவலகங்களில் பணம் கொண்டு வரும் ஊழியர்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் -என தமிழ்நாட்டில் முன்னுதாரணமாக சுற்றறிக்கை!


சமீபத்தில் உயர்நீதிமன்ற வழக்கு ஒன்றில் அரசு ஊழியர்கள் எவ்வளவு பணம் பணி நேரத்தில் வைத்லிருக்கலாம் என பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்த நிலையில் இந்த சர்க்குலர் தற்போது பேசு பொருளாகிறது, 

"பணத்தைப் பதிவு செய்யத் தவறினால் ஊழல் குற்றச்சாட்டு" - உயர் நீதிமன்ற கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரின் இந்த அதிரடி நடவடிக்கை  சமீபத்தில் 38 அலுவலகங்களில் ரூபாய் .1.18 கோடி ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் ஞ்ச ஒழிப்புத் துறை பறிமுதல்; செய்த நிலையில் ஜூலை மாதம் மட்டும் 24 பேர் கைது - அதன் பின்னணியில் வெளியான இந்த சுற்றறிக்கை! தற்போது பேசு பொருளாகிறது,

 தமிழ்நாட்டிற்கே முன்னுதாரணமாக அமையும் வகையில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் மு. பிரதாப், ஐ.ஏ.எஸ்., அதிரடியான சுற்றறிக்கையௌ பிறப்பித்துள்ளார். அரசு அலுவலகங்களுக்கு வரும் ஊழியர்கள் தாங்கள் கொண்டு வரும் பணத்தின் மூலத்தையும் தொகையையும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்பதே இந்த சுற்றறிக்கையின் முக்கிய அம்சமாகும். சமீபகாலமாக லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) நடத்திய சோதனைகளில் கண்டறியப்பட்ட கோடிக்கணக்கான பண முறைகேடுகளின் பின்னணியில், மேலும் உயர் நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.



ஜூலை 27, 2026 அன்று வெளியிடப்பட்ட இந்த சுற்றறிக்கை, அரசு ஊழியர்கள் கையில் கொண்டு வரும் பணம் குறித்து தெளிவான பதிவேடு வைக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்குகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தனிப்பட்ட பணப் பதிவேடு (Personal Cash Register): ஒவ்வொரு அலுவலரும் தாங்கள் அலுவலகத்திற்கு கொண்டு வரும் பணத்தின் மூலத்தையும் தொகையையும் பதிவு செய்ய ஒரு தனிப்பட்ட பண பதிவேட்டை பராமரிக்க வேண்டும்.

 இந்தப் பதிவேடு ஒவ்வொரு நாளும் மேற்பார்வை அலுவலரால் பரிசீலிக்கப்பட்டு கையொப்பமிடப்பட வேண்டும். இதன் மூலம் பதிவு செய்யப்பட்ட பணம் உடனடியாக சரிபார்க்கப்படுகிறது அலுவலக பணிகளுக்கு மிகவும் அவசியமான சந்தர்ப்பங்களில் மட்டுமே அதிக அளவு பணத்தை எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 பணத்தை பதிவு செய்யத் தவறினால், அது கணக்கில் வராத பணமாக (unaccounted money) கருதப்பட்டு, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஊழியர்கள் பொறுப்பாவார்கள் என்று தெளிவாக எச்சரிக்கப்பட்டுள்ளது

இந்த சுற்றறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னதாக, தமிழ்நடு முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) நடத்திய அதிரடி சோதனைகளில் பெரும் பண முறைகேடுகள் கண்டறியப்பட்டன.

38 அலுவலகங்களில் சோதனை: சமீபத்திய மாநிலம் தழுவிய சோதனையில், 38 அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் ரூபாய் .1.18 கோடி கணக்கில் வராத பணம் மற்றும் சந்தேகத்திற்கிடமான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் கண்டுபிடிக்கப்பட்டன

கடந்த ஜூலை 1 முதல் 31 வரையிலான காலகட்டத்தில், ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை 24 அரசு ஊழியர்களை கைது செய்து, ரூபாய் .1.3 கோடிக்கும் மேற்பட்ட கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்துள்ளது.

ஜூலை மாதம் 17 ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையில், எல்லைச் சோதனைச் சாவடிகளில் ரூபாய் .9.87 லட்சம்கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

அரசு ஊழியர்கள் பணியின் போது கையில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம் என்பதற்கான ஒருங்கிணைந்த வழிகாட்டுதல் இல்லாத நிலையில், மதுரை கிளை உயர் நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி அவர்கள் தமிழ்நாடு அரசிடம் கேள்வி எழுப்பியிருந்தார். அதிக அளவு பணத்தை அலுவலகத்திற்கு கொண்டு வருவதன் அவசியத்தை அரசு நிர்ணயிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள இந்த சுற்றறிக்கை, அந்த கேள்விக்கான பதிலாகவும், ஊழலைத் தடுக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாகவும் அமைந்துள்ளது. மேலும், இது மற்ற மாவட்ட நிர்வாகங்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.  அரசு அலுவலகங்களில் ஊழலைத் தடுக்கும் வகையில் கன்னியாகுமரி கலெக்டர் வெளியிட்டுள்ள இந்த சுற்றறிக்கை ஒரு வரவேற்கத்தக்க நடவடிக்கை. பணப்பதிவேடு கட்டாயமாக்கப்பட்டிருப்பது, அலுவலகங்களுக்குள் நடக்கும் சந்தேகத்திற்கிடமான பணப் பரிவர்த்தனைகளை குறைக்க உதவும். கடந்த ஜூலை மாதம் மட்டும் 24 பேர் கைது செய்யப்பட்டு, ரூ.1.3 கோடி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், பணப்பதிவேடு கட்டாயமாக்கப்பட்டிருப்பது ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது. இருப்பினும், இந்த சுற்றறிக்கை முறையாக செயல்படுத்தப்படுமா, மேலும் இதை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொதுமக்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். ஒரு சுற்றறிக்கை மட்டும் போதாது; அதை செயல்படுத்தும் மனநிலையும், கண்காணிப்பும் அவசியம்.  கடந்த காலங்களில் பல சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டு, அவை மறந்து போன சம்பவங்கள் உண்டு. இந்த முறை அந்த வரலாறு திரும்பக் கூடாது. மேலும், இது போன்ற சுற்றறிக்கைகள் அனைத்து மாவட்டங்களுக்கும் பொதுவானதாக அமைய வேண்டும்.

புதிய சுற்றறிக்கையின் அடிப்படையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணப்பதிவேடுகள் பராமரிக்கப்பட உள்ளன. மேலும், இந்த சுற்றறிக்கையை மீறுபவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. உயர் நீதிமன்றம், இந்த சுற்றறிக்கையின் செயல்பாட்டை கண்காணித்து, தேவையான உத்தரவுகளை பிறப்பிக்கலாம். இந்த நடவடிக்கைகள், அரசு அலுவலகங்களில் ஊழலை குறைக்க உதவும். மற்ற மாவட்ட ஆட்சியர்களும் இதே போன்ற சுற்றறிக்கைகளை வெளியிட வாய்ப்புள்ளது. இனி இந்த சுற்றறிக்கை மேம்படுத்திய விபரங்களுடன் அரசாணையாக வெளிவந்தால் மட்டுமே சட்டப்பூர்வமாகச் செல்லும் அது செயல் வடிவம் பெறும், அது இப்போதா அல்லது நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புக்கு பின்பாகவா என்பதே எழுவினா.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...