கொள்ளையடிக்கும் தனியார் ஆம்னி பேருந்துகளும் கெஞ்சிப் பேசி சில்லறை பார்க்கும் போக்குவரத்து அலுவலர்களும் பாதிப்பில் மக்கள்
விநாயகர் சதுர்த்தி மற்றும் திருமணங்கள் வார இறுதி தொடர் விடுமுறையை ஒட்டி,
தமிழ்நாட்டில் தனியார் ஆம்னி பேருந்துகழின் கட்டணங்கள் 2 முதல் 3 மடங்கு வரை விமானம் போல கிடுகிடுவென விலை உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் வெளியூர்களில் தங்கி வேலை செய்பவர்களும், மாணவர்களும் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பக் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.ஆன்லைன் முன்பதிவு ரெட்பஸ் உள்ளிட்ட தளங்களின்படி பல்வேறு முக்கிய நகரங்களுக்கான தற்போதைய கட்டண விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:முக்கிய வழித்தடங்களின் பேருந்து கட்டண விவரம்சென்னை - கோயம்பத்தூர் ரூபாய் 6,154 வரை உயர்வு (வழக்கமான கட்டணத்தை விட மிக அதிகம்). பெங்களூரிலிருந்து கோயம்பத்தூர் செல்ல ரூபாய் 650 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூபாய் 3,200 ஆக மாறியுள்ளது.சென்னை - மதுரை: ரூபாய் 4,000 வரை வசூலிக்கப்படுகிறது.சென்னை - திருச்சிராப்பள்ளி: ரூபாய் 3,999 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை - திருநெல்வேலி: வழக்கமாக ரூபாய் 750 - ரூபாய் 1,000 ஆக இருந்த டிக்கெட், தற்போது ரூபாய் 2,000 முதல் ரூபாய் 3,000 வரை விற்கப்படுகிறது.சென்னை - கும்பகோணம்: ரூபாய் 3,179 வரை கட்டணம் உயர்ந்துள்ளது. அரசின் போக்குவரத்துத்துறை அதிரடி நடவடிக்கை என்பது செய்தி அளவில் தானே உள்ளது,இந்தக் கட்டணக் கொள்ளை மற்றும் பயணிகளின் புகார்களைத் தொடர்ந்து, தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது பெயரளவில் ஆனால் அதுவும் மீறப்படுகிறது :அதை தடுக்க இயழவில்லை 30 சிறப்பு குழுக்கள் அமைத்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதையும், போக்குவரத்து விதிமீறல்களையும் கண்காணிக்க மாநிலம் முழுவதும் 30 சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடும் நடவடிக்கை எச்சரிக்கையும் விடுத்தனர் ஆம்னி பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து உள்ளிட்ட கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது, ஆனால் அதுவும் மீறப்படட நிலையில் அரசு மீது இந்த ஊழல் வாதிகளுககு பயமில்லை, அதிரடி நடவடிக்கை எடுத்து இரண்டு பஸ்களின் பர்மிட்டை ரத்து செய்து வாகனங்களை வழக்கு பதிவு செய்து பறிமுதல் செய்யும் துணிவு போக்குவரத்து துறைககு வரவில்லை இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இந்தக் கட்டண உயர்வுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து, அரசு உடனடியாக கட்டண ஒழுங்குமுறைக் குழுவை அமைத்து இதனைக் கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்
போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் மின்னஞ்சல் முகவரி : mlasalemsouth[at]tn[dot]gov[dot]in மற்றும் தொலைபேசி எண் : 99421 98999 இதில் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் நேரில் புகார் செய்தால் தான் நடவடிக்கை வருமா என்பதை பார்க்க வேண்டும், இவர்கள் வழங்கும் லஞ்சம் தான் அவர்களின் துணிவுக்கும் கொள்ளையடிக்கவும் மக்கள் மீதோ அரசு மீதோ பயமில்லை, என்பதே பலர் கூறும் உண்மை. அதன் கரணமாக ரயில்களில் மக்கள் பயணம் அதிகரிக்கும் நிலை உள்ளது,









கருத்துகள்