இந்திய விமானப்படையின் ஓய்வு பெற்ற மூத்த அதிகாரி ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா
அயோத்தி ஸ்ரீ ராமர் கோயில் அறக்கட்டளையான ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா முதல் தலைமைச் செயல் அதிகாரி CEO வாக 2026 செப்டம்பர் 2 ஆம் தேதி இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ ராமர் கோயிலில் ஏற்பட்ட உண்டியல் காணிக்கை முறைகேடு புகார்களைத் தொடர்ந்து, நிர்வாகத்தை வெளிப்படைத்தன்மையுடன் நடத்த இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளாரர
இப்பதவிக்காக வந்த 5,500-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை முன்னாள் நீதிபதி பிரமோத் கோலி தலைமையிலான குழு பரிசீலித்து இவரைத் தேர்வு செய்தது. ராமர் கோயில் வளாகத்தின் நிதி மேலாண்மை, பாதுகாப்பு மற்றும் ஒட்டுமொத்த நிர்வாகச் செயல்பாடுகளை இவர் கவனிப்பார். இந்திய விமானப்படையின் மிக முக்கிய பிரிவான மேற்கு விமானப்படைப் பிரிவின் தளபதியாக (AOC-in-C, Western Air Command) பணியாற்றினார். எல்லையில் வான்வழி மேலாதிக்கத்தை நிலைநாட்டிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ (Operation Sindoor) நடவடிக்கையை முன்னின்று வழிநடத்தியவர்.
1986-ல் போர் விமானியாக (Fighter Pilot) இணைந்து, சுமார் 38 ஆண்டுகள் நாட்டுக்குச் சேவையாற்றி 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்றவர் 3,000 மணி நேரத்திற்கும் மேல் விமானங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர்.
இவரது சிறந்த சேவையைப் பாராட்டி இந்திய அரசு இவருக்கு சர்வோத்தம் யுத் சேவா பதக்கம் (SYSM), அதி விஷிஷ்ட் சேவா பதக்கம் (AVSM) மற்றும் விஷிஷ்ட் சேவா பதக்கம் (VSM) ஆகிய உயரிய ராணுவ விருதுகளை வழங்கியுள்ளது.









கருத்துகள்