LPG முன்பதிவு விதிகள் மாற்றம், வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம்!
எல்பிஜி நிரப்பு முன்பதிவு இடைவெளி 45 நாட்களில் இருந்து 25 நாட்களாக குறைக்கப்பட்டது
இப்போது அடுத்த சமையல் ஏரிவாயு உருளை (சிலிண்டரை) 25 நாட்களுக்குப் பிறகு முன்பதிவு செய்யலாம்
கிராமப்புற LPG வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் இதற்கு முன் 45 நாள் இடைவெளியில் இருந்து மாற்றம்
கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறம் உட்பட அனைத்து உள்நாட்டு LPG வாடிக்கையாளர்களுக்கும் ஒரே மாதிரியான 25 நாள் விதியை
பெட்ரோலியத்துறை அமைச்சகம் இன்டர்-ரீஃபில் முன்பதிவு இடைவெளியைக் குறைக்க முடிவு செய்தது மத்திய அரசு எல்பிஜி (LPG) சிலிண்டர் முன்பதிவு விதிகளில் மிக முக்கியமான மாற்றத்தை அண்மையில் வெளியிட்டுள்ளது. புதிய உத்தரவின்படி, கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கான சிலிண்டர் முன்பதிவு இடைவெளி 45 நாட்களிலிருந்து 25 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது அமலுக்கு வந்துள்ள புதிய எல்பிஜி முன்பதிவு மற்றும் விநியோக விதிகள் படி சிலிண்டர் முன்பதிவு இடைவெளி குறைப்பு முன்னதாக நகர்ப்புறங்களில் 25 நாட்களும், கிராமப்புறங்களில் 45 நாட்களும் இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது. தற்போது, நாட்டின் எந்தப் பகுதியாக இருந்தாலும் (நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம்) அடுத்த சிலிண்டர் முன்பதிவு செய்ய 25 நாட்கள் கட்டாய இடைவெளி இருந்தால் போதும் என லைவ் மிண்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
சர்வதேச விநியோகத் தட்டுப்பாடு சீராகி, தற்போதைய சிலிண்டர் இருப்பு மற்றும் விநியோகம் திருப்திகரமாக இருப்பதால் இந்த நிபந்தனை தளர்த்தப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெலிவரி அங்கீகாரக் குறியீடு (DAC - OTP முறை)சிலிண்டர் விநியோகத்தில் முறைகேடுகளைத் தடுக்கவும், சரியான நுகர்வோரைச் சென்றடைவதை உறுதி செய்யவும் டெலிவரி ஆதென்டிகேஷன் கோடு (DAC) முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சிலிண்டர் உங்கள் வீட்டிற்கு விநியோகம் செய்யப்படும்போது, வாடிக்கையாளர் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் ஒன்-டைம் பாஸ்வேர்டை (OTP) டெலிவரி ஊழியரிடம் பகிர்ந்தால் மட்டுமே சிலிண்டர் வழங்கப்படும். இ-கேஒய்சி (e-KYC) கட்டாயம்சமையல் எரிவாயுக்கான மானியம் பெறுபவர்கள் (குறிப்பாக பிரதான் மந்திரி உஜ்வலா யோஜனா - PMUY பயனாளிகள்) தங்களது ஆதார் சார்ந்த e-KYC சரிபார்ப்பை முடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இதனைச் செய்யத் தவறினால் மானியம் தற்காலிகமாக நிறுத்தப்பட வாய்ப்பு பிஎன்ஜி (PNG) இணைப்புக்கான புதிய விதிவீடுகளுக்கு குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) இணைப்பு பெறும் வாடிக்கையாளர்கள், இணைப்பு பெற்ற 30 நாட்களுக்குள் தங்களுடைய பழைய எல்பிஜி (Indane, HP அல்லது Bharat Gas) இணைப்பைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும். காஸ் விநியோக நிலை சீரடைந்ததை அடுத்து மத்திய அரசு இந்த தளர்வை அறிவித்துள்ளது





கருத்துகள்