முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சட்டம் நீதி மின்துறை அமைச்சர் கூற்று திமுக தலைவர் கைது MISA வுக்கா? இல்லை USHA வுக்கா? விவாதம் தீவிரம்!

திமுக தலைவர் கைது MISA வுக்கா? இல்லை USHA வுக்கா? சட்டம் நீதி மின்துறை அமைச்சர் CTR.நிர்மல் குமார் பேசிய கசமுசா விவாதம் உண்மை நிலை என்ன?வன்மத்தைக் காட்ட வீடியோ வெர்ஷன்..



விளக்குவதற்கு எக்ஸ் தளத்தில் லெட்டர்ஸ் வெர்ஷன்.    தமிழ்நாடு சட்டசபையில்  சட்டம் நீதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல்குமார், அவசரகால நிலை எனும் Emergency கால 'மிசா' (MISA) சட்டம் மற்றும் திமுக தலைவர் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கைது குறித்துப் பேசிய கருத்துக்களில் அவர் மிசா கைதி அல்ல என்ற வாதம்: அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட மிசா காலக்கட்டத்தில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டாரே தவிர, அவர் மிசா சட்டத்தின் கீழ் அதிகாரப்பூர்வமாகக் கைது செய்யப்படவில்லை,









அதற்கான எந்தவொரு அரசுப் பதிவுகளோ அல்லது குறிப்புகளோ இல்லை. மேலும்  மிசா காலக்கட்டத்தில் அரசியல் காரணங்கள் மட்டுமின்றி திருட்டு, வழிப்பறி மற்றும் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்குகளிலும் பலர் கைது செய்யப்பட்டனர். மு.க.ஸ்டாலின் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசிய குற்றச்சாட்டின் கீழ் தான் கைது செய்யப்பட்டதாகக் குறிப்புகள் உள்ளனவே தவிர, மிசா சட்டத்தில் கைதாகவில்லை என அமைச்சர் நிர்மல்குமாரின் இந்த ஆக்ரோஷமான பேச்சைக் கேட்டு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து கூச்சலிட்டனர்.












அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கை முன்பு கூடி அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால், அவர்களை அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும், திமுகவில் இரண்டாம் மூன்றாம் நிலைத் தலைவர்கள்  அமைச்சரின் இந்தக் கருத்துக்களைச் சட்டப் பூர்வமற்றவை மற்றும் தரம் தாழ்ந்தவை என்று கடுமையாக விமர்சித்துள்ளனர், அதனால இது குறித்து சில சட்டரீதியில் ஆய்வுகள் தேவை,.






இந்திய அரசியலமைப்பின் 39 வது திருத்தச் சட்டமாக 9 வது அட்டவணையில் சேர்க்கப்பட்ட மிசா (MISA) எனும் உள் நாட்டுப் பாதுகாப்பு பராமரிப்புச் சட்டம் (Maintainence of Internal Security Act) 1975-1977 ஆம் ஆண்டு இந்தியாவில் கொண்டுவரப்பட்ட அவசரநிலை பிரகடனம் (Emergency)   மிசா சட்டக் கைது 1976-ஆம் ஆண்டு அவசரநிலை (Emergency) பிரகடனப்படுத்தப்பட்ட போது, வித்யாசாகரன்  சென்னை மத்திய சிறையின் கண்காணிப்பாளர் எனும் Jail Superintendent ஆகப் பணியாற்றியவர், கே. வித்யாசாகரனின் தந்தை குழந்தைவேலு முதலியார் சென்னை பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளையின் தலைவர் தேர்தலில் போட்டியிட்டபோது, திமுக அவருக்கு எதிராக மற்றொரு வேட்பாளரை நிறுத்தியது. அந்தத் தேர்தலில் திமுக ஆதரவு பெற்றவர் வென்றதால், ஏற்பட்ட அரசியல் கோபத்தை மனதில் வைத்து வித்யாசாகரன் சிறையில் மிசா கைதிகளைப் பழிவாங்கினார் என்ற குற்றச்சாட்டு உள்ளதென்றாலும். அவசரநிலை முடிவுக்கு வந்த பிறகு, சிறையில் நடந்த அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க நீதிபதி இஸ்மாயில் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. 1976 பிப்ரவரி 2 ஆம் தேதி அன்று இரவு சிறையில் மிசா கைதிகள் பயங்கரமாகத் தாக்கப்பட்ட சம்பவத்தில், கண்காணிப்பாளர் வித்யாசாகரன், ஜெயிலர் கஃயூம், மற்றும் வார்டன்கள் நேரடியாகத் தொடர்புடையவர்கள் என இந்தக் கமிஷன் விசாரணையில் குற்றச்சாட்டுகளும் எழுந்தன. 





சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகளை ஒடுக்குவதிலும், அவர்களுக்கு நெருக்கடி கொடுப்பதிலும் இவர் தீவிரமாகச் செயல்பட்டதாகக் கூறப்பட்டது. சிறைக் கண்காணிப்பாளர் வித்யாசாகரனின் மகள் உஷா என்பவரைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார் என்பது முற்றிலும் தவறா? உண்மையா என்பதை திமுக தான் உரிய சான்றுகளின் படி விளக்கம் தரவேண்டும், அல்லது அமைச்சர் அந்த ஆதாரத்தை வெளியிட வேண்டும்,




"விஞ்ஞானப் பூர்வ ஊழல் முதல் கொலைக் குற்றவாளிகளைக் காப்பாற்றிய வரலாறு வரை" - மிசா போலி பிம்பத்தை கிழிக்கும் ஆதாரங்கள்; சட்டப்பேரவையில் தவெகவின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திமுக திணறல்! ஏற்பட்டதை மக்களே பார்த்தனர்,

 "தியாகத்தின் திருவுருவங்கள்" மற்றும் "மிசா காலத்து தியாகிகள்" என்று தங்களை மார்தட்டிக் கொள்ளும் திமுகவின் வரலாற்றை பின்னோக்கித் தோண்டிப் பார்த்தால், அங்கே தெரிவது  ஊழல்களும், அதிகார துஷ்பிரயோகங்களும், கொலைக் குற்றவாளிகளைக் காப்பாற்றிய கறைபடிந்த பின்னணியும் மட்டுமே. சமீபத்தில் சட்டப்பேரவையில் தவெக எம்.எல்.ஏக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் போன திமுகவின் போலி தியாக முகமூடியை கிழிக்கும் வகையில், ஆய்வு ஆதாரங்களுடன் கூடிய உண்மையான வரலாறு எனப் பார்த்தால் 





1976 ஜனவரி 31 ஆம் தேதி அன்று, ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் காரணமாக கலைஞர் மு.கருணாநிதியின் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கலைஞர் மு.கருணாநிதி ஆட்சியில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க மத்திய அரசால் நீதிபதி ரஞ்சித் சிங் சர்க்காரியா தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் விசாரித்த புகார்கள் ஒவ்வொன்றும் திமுகவின் ஊழல் எவ்வளவு திட்டமிட்டு, சாதுரியமாக அரங்கேற்றப்பட்டது என்பதை நிரூபித்தன. இதனால் தான் அன்றே இது "விஞ்ஞானப் பூர்வ ஊழல்" என்று பேசப்பட்டது.



சென்னைக்கு வீராணத்திலிருந்து குடிநீர் கொண்டு வரும் திட்டத்திற்கான டெண்டரை, தங்களுக்கு வேண்டிய சத்தியநாராயணா பிரதர்ஸ் நிறுவனத்திற்கு ஒதுக்க கலைஞர் மு.கருணாநிதி கடுமையான அழுத்தம் கொடுத்தார். இந்த ஊழலில் கலைஞர் மு.கருணாநிதியின் நிழலாக இருந்த அவரது மனச்சாட்சி உறவினர் முரசொலி மாறனின் பங்கு மிக முக்கியமானது. சத்தியநாராயணா பிரதர்ஸ் நிறுவனத்தின் புருஷோத்தமனுடன் மாறன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். டெண்டருக்கு கைமாறாக, முரசொலி அலுவலகக் கட்டிடம் கட்ட ரூபாய் .52,000 மதிப்புள்ள கட்டுமானப் பொருட்களை புருஷோத்தமன் இலவசமாக வழங்கினார். மேலும், அந்த நிறுவனத்திடமிருந்து ஏழு தவணைகளாக மொத்தம் ரூபாய் .29 லட்சம் லஞ்சப் பணம், கலைஞர் மு.கருணாநிதிக்கு கைமாறியது சர்க்காரியா ஆணையத்தால் கண்டுபிடிக்கப்பட்டது.



 அன்றைய விவசாயத் துறை அமைச்சர் அன்பில் தர்மலிங்கம். இவரது காலத்தில் விவசாய நிலங்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஹெலிகாப்டர் காற்றில் பறந்து சென்றதைத் தவிர, பூச்சிகள் எதுவும் சாகவில்லை. ஆனால், ரூபாய் .10 லட்சம் மதிப்புள்ள பூச்சி மருந்து தெளிக்கப்பட்டுவிட்டதாக கணக்கு காட்டி பெரும் தொகையை மோசடி செய்தனர்.

 அன்றைய காலகட்டத்தில் ரேஷன் சர்க்கரை மூட்டைகள் மாயமான போது, சர்க்கரை முழுவதையும் எறும்பு தின்றுவிட்டதாகவும், சணல் சாக்குகளை கறையான் அரித்துவிட்டதாகவும் வினோதமான விளக்கங்களைக் கூறி ஊழலை மூடிமறைத்தனர்.   1971 ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று, மாணிக்கம் என்பவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் அனைவரும் அன்றைய அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தின் நெருங்கிய உறவினர்கள் A2 பழனியாண்டி சோழகர் - அமைச்சரின் சொந்த மாமனார்; A3 வீரையன் - சின்ன மாமனார்; A4 ஐய பிள்ளை - மாமியார்; A1 கருத்த பாபு - மாமியாரின் தம்பி. தன் உறவினர்களைக் காப்பாற்ற அமைச்சர் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தினார். அப்போதிருந்த இவர்கள் அரசே குற்றவாளிகளுக்கு ஆதரவாக நின்று, வழக்கைத் திசைதிருப்பி, A1 மீது மட்டும் பழியைப் போட்டு மற்ற மூவரையும் விடுவித்தது. பின்னாளில் A1 கருத்த பாபுவும் விடுவிக்கப்பட்டான்



தற்போது திமுக தலைவராக உள்ள மு. க.ஸ்டாலின் மிசா கைதியா? 

ஷா கமிஷனில் மு. க.ஸ்டாலின் பெயர் இல்லை: மிசா (MISA) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விசாரிக்க அமைக்கப்பட்ட அதிகாரப்பூர்வ ஷா கமிஷன் (Shah Commission) அறிக்கையில், மு. க.ஸ்டாலினின் பெயரே இல்லை

சிட்டி பாபுவின் 'மர்ம' சிறைக்குறிப்புகள்: உயிருக்கு ஆபத்தான நிலையில், பிப்ரவரி 2 ஆம் தேதி அன்று மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிட்டி பாபு, பிப்ரவரி 4 ஆம் தேதி அன்று இறப்பதற்கு இடைப்பட்ட அந்த மரணப் போராட்ட இடைவெளியில் எவ்வாறு விரிவான "சிறைக் குறிப்புகளை" எழுத முடியும்? மேலும், உயிரைக் கொடுத்து மு. க.ஸ்டாலினைக் காப்பாற்றிய தியாகி எனக் கூறும் சிட்டி பாபுவின் குடும்பத்திற்கு இன்றுவரை திமுகவில் எந்தவொரு தகுதியான பதவியோ அல்லது அங்கீகாரமோ வழங்கப்படவில்லை.

 அன்றைய சென்னை சென்ட்ரல் ஜெயில் கண்காணிப்பாளர் வித்யாசாகரன். அவரது மகளின் பெயர் உஷா, அப்போதய முதல்வர் மகன் என்ற அதிகாரத்தில், உஷாவிடம் சில்மிஷங்களில் ஈடுபட்டதாகக் பலவாறு கூறப்படுகிறது. 1976 ஜனவரி 31 ஆம் தேதி அன்று இரவு திமுக ஆட்சி கலைக்கப்பட்ட அடுத்த நாளே, பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி அன்று மு. க.ஸ்டாலினைத் தூக்கிக் கொண்டு போய் சிறையில் வைத்து வித்யாசாகரன் பழிதீர்த்துக் கொண்டதாக வரலாற்றுத் தகவல் பலரால் கூறப்படுகிறது. "தியாகத்தின் திருவுருவங்கள்" என்று பெருமையாகக் கூறும் திமுகவின் வரலாற்றில், சர்க்காரியா கமிஷன் கண்ட ஊழல்களும், "மிசா தியாகி" என்று சொல்லிக் கொள்ளும் மு.க.ஸ்டாலின், ஷா கமிஷன் அறிக்கையில் இடம்பெறவில்லை என்பதும், "உஷா" விவகாரத்தில் சிறை சென்றதாக வரலாற்று தகவல்கள் இருப்பதும், அவரது போலி பிம்பத்தை  சட்டப்பேரவையில் அமைச்சர் மற்றும் தவெக சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் "மிசா"வில் தற்போது திமுக, தலைரின் கறைபடிந்த வரலாற்றை மறைக்கவே முயல்கிறது.



இந்த வரலாற்று ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையில், திமுக தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். சர்க்காரியா கமிஷன் அறிக்கை மற்றும் ஜங்கமராஜபுரம் கொலை வழக்கு குறித்து எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பும். மிசா கைது குறித்து ஸ்டாலின் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ ஆவணங்கள் இருந்தால் வெளியிடப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெறும். இந்த விவகாரங்கள் அடுத்த கட்ட அரசியல் விவாதங்களில் முக்கிய பங்கு வகிக்கும்.திமுகவும் போராட்டம் நடத்தும்,அதே போல கடந்த காலத்தில் தமிழ் செய்தி வாசிப்பாளராக விளங்கிய பாத்திமா பாபுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடத்திச் சென்று மிரட்டினார் என்று பல ஆண்டுகளுக்கு மேலாக இந்த செய்தி உலவியது, அதாவது தூர்தர்ஷனில் பிரபல தமிழ் செய்தி வாசிப்பாளராக விளங்கிய பாத்திமா பாபுவை கடத்திச் சென்று முதல்வர் ஸ்டாலின் மிரட்டினார் எனக் கூறி பரவி வரும் செய்திகள் பின்பு வதந்தியே. அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று பாத்திமா பாபு 2018ஆம் ஆண்டு காவங்கடந்தே விளக்கமளித்துள்ளார். அதுபோல நீதிபதி இஸ்மாயில் கமிஷன் முன்னால் 17.7.1977 ஆம் தேதி அன்று மு.க.ஸ்டாலின் மனுதாரர்களின் இரண்டாவது பார்வையாளர் சாட்சியாக விசாரிக்கப்பட்டார். கமிஷன் அறிக்கையில் பக்கம் 40 ல் அன்றைய சிறைக் கண்காணிப்பாளர் வித்யாசாகர் 4.3.1976 ஆம் தேதியிட்ட கடிதத்தைத் தலைமைச் செயலாளருக்கு அனுப்பியதில் உள்ள சாராம்சம் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில், 3.3.1976 ஆம் தேதி அன்று தி.மு.க. தலைவர் கலைஞர் மு. கருணாநிதி , மிசா கைதியாக இருந்த மு.க.ஸ்டாலினை மத்திய சிறையில் நேர்காணல் கண்டதாகவும், அப்போது அவர்களுக்கிடையே நடைபெற்ற உரையாடலில்



மு.க. ஸ்டாலின் தன்னை யாரும் அடித்ததாகக் கூறவில்லை என்றும் எழுதியிருந்தார். நெருக்கடி நிலையை எதிர்த்து காந்திய சோசலிசவாதியான ஜெய பிரகாஷ் நாராயண் பெரும் கிளர்ச்சியை பீகாரில் நடத்தினார். பல்லாயிரக்கணக்கானோர் நாடுமுழுவதும் காவல் துறையினரால் கைது செய்யபட்டனர். தேசிய அளவில் முக்கிய அரசியல் தலைவர்களான ஜெயப் பிரகாஷ் நாராயண், ராஜ் நாராயண், மொரார்ஜி தேசாய், சரண் சிங், ஜிவத்ராம் கிருபாலனி, அடல் பிகாரி வாஜ்பாய், எல்.கே.அத்வானி, பொதுவுடமைக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோரும் ஜனதா, திமுக கம்யூனிஸட் உள்ளிட்ட பல கட்சிகள் கிளர்ச்சி செய்த மக்கள் தலைவர்களும் கைது செய்யபட்டு காங்கிரஸ் அரசால் சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் திமுக சிட்டிபாபு தனது டைரிக்குறிப்பில் சிறைக்கொடுமையை இப்படி விவரிக்கிறார்.

"கதவு திறந்தது. பலர் முன்னே செல்வது என்ற நிலை. காலம் கதவுகளை மூடப் போவதில்லை. அர்ச்சனைக்குக் கொண்டு வந்த அரசியல் மலர்கள் அல்லவா நாங்கள்? எனவே திரும்பிப் பார்த்தேன். தீர்மானமாக நானே கொட்டடியிலிருந்து வெளியே வந்தேன். என்னைப் பெயர் சொல்லி அழைத்தனர். எதிர்பார்த்த ஆள் அல்லவா நான்?

எனவே, ஒரு அடி எடுத்து வைப்பதற்குள் கன்னத்தில் வீழ்ந்த அறைகள். அடடா...

நிலைக்கண்ணாடி கல்பட்டு உடைந்து விழுந்தது போல எனக்குத் தோன்றியது. கண்கள் கணநேரம் காண்பதெல்லாம் காரிருள் போல் இருந்தது.

இரு கோடுகளுக்கு இடையில் தள்ளப்பட்ட எலி, ஆம். அவர்கள் அடித்ததும் அப்படித்தான். அவர்கள் அசந்தனர். நான் எலி அல்ல புலி என்பது அவர்களுக்குப் புரிந்திருக்கும். காரணம் அத்தனை அடிக்கும் நான் கீழே விழவில்லை. அவர்கள் என்னைப் பிடித்துத் தள்ளினார்கள். மதில் சுவர் மீது சட்டெனத் திரும்பிக் கொண்டேன்.

ஒரு காவலன் வயிற்றில் எட்டி உதைத்து விட்டான். சுவரின் மீது சாய்ந்து கீழே உட்கார நினைத்தேன். ஆனால் நீண்ட நெடுமரத்தை ஒரு மதயானை இடக்காலாலும் வலக்காலாலும் துதிக்கையாலும் வெறிபிடித்து உதைப்பது போல் என்னை உதைத்தனர்.

அதே சித்ரவதைக்கு ஆளான ஆற்காடு வீராசாமி அப்படியே தரையில் நெடுமரமாகச் சாய்ந்துக் கிடந்தார். பேச்சும் மூச்சும் நின்று போனதா? ஆம். நினைவு இழந்திருந்தார்." என்பதே அவர் கூறியதாக உள்ள செய்தி மிசா காலத்தில் சிறையில் நடந்த கொடுமைகள் என்பது குறித்து விராசனை நடத்தப்பட்டது , அப்பொழுது அதை சாட்சிகளாக வேடிக்கை பார்த்தவர்களை அழைத்து கேட்டறிந்துள்ளனர் , அதில் ஸ்டாலினும் இருக்கிறார்  , அதாவது சம்பவத்தை வேடிக்கை பார்த்தவர் என்கிற அளவில் சாட்சி - witness என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது , victim என்று கூட குறிப்பிடவில்லை , அதுல என்ன கவனிக்கத்தக்க விஷயம்னா ஸ்டாலின் என்ன வழக்குகளுக்காக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார் என்பது கேள்வி , அதற்கு ஆவணங்கள் இல்லை அவை 1989 ஆம் ஆண்டு தி மு க ஆட்சிக்கு வந்த பொழுதே அழிக்கப்பட்டுவிட்டன , அப்பறம் சிட்டிபாபு டயரியில் ஸ்டாலின் பெயர் இருந்தது என்பதெல்லாம் ஆவணங்கள் அல்ல , மு. க.ஸ்டாலின் சிறைக்குச் சென்றார் என்பதை யாரும் மறுக்கவில்லை , மிசாவில் அந்தக் காலத்தில் அவர் வேறு காரணமாக சிறைக்குச் சென்றார் என்பதுதான் இங்கு விவாதம் , ஏன் சென்றார் என்பது மர்மம் , முரசொலி மூலபத்திரம் போல அது மர்மமாகவே இருக்கும் ஆனால் அதிகாரப்பூர்வமான ஷா கமிஷன் பதிவு :- ஆங்கிலத்தில் அதன் நேரடி மொழியாக்கம் இது ஷா கமிஷன், உள் பாதுகாப்புச் சட்டம் (மிசா) தொடர்பாக ஷா கமிஷன் அறிக்கையில் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயர் இடம் பெற்றுள்ளதா என்பது அரசியலில் நீண்ட காலமாக விவாதப் பொருளாகிறது.  பதிவேடுகளில் இருந்து எதிர்க்கட்சிகளின் கூற்று 1975-1977 அவசரநிலையின் போது அத்துமீறல்களை விசாரிக்க அமைக்கப்பட்ட ஷா கமிஷனால் தொகுக்கப்பட்ட உத்தியோகபூர்வ பதிவுகள் அல்லது பட்டியல்களில் எம்.கே. ஸ்டாலினின் பெயர் மிசா தடுப்புக்காவலில் இடம்பெறவில்லை என்று அரசியல் எதிரிகளும் விமர்சகர்களும் அடிக்கடி கூறி வருகின்றனர்.  அந்த காலகட்டத்தில் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறிப்பிட்ட சட்ட வகைப்பாடு குறித்து கேள்வி எழுப்ப விமர்சகர்கள் இந்தக் கருத்தைப் பயன்படுத்துகின்றனர், இது தமிழ்நாட்டின் அரசியல் பரிமாற்றங்கள் மற்றும் சட்டமன்ற விவாதங்களின் போது அடிக்கடி மீண்டும் வெளிப்படும் தலைப்பு. மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 1, 1976 இல் கைது செய்யப்பட்டார் என்றும், அவசரநிலைக் காலத்தில் சென்னை மத்தியச் சிறையில் கிட்டத்தட்ட 10 மாதங்கள் உடல் உபாதைகள் மற்றும் சிறைவாசம் அனுபவித்ததாகவும் திமுக மற்றும் அதன் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.  பரந்த ஆதரவாளர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்கள் பல்வேறு சட்ட விதிகளின் கீழ் (MISA உடன் DIR/DISIR விதிகள் உட்பட) அவசரநிலையின் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிடுகின்றனர், மேலும் ஒரு குறிப்பிட்ட கமிஷன் சுருக்கத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புறக்கணிப்பு அவரது காவலில் உள்ள சிறைவாசத்தின் யதார்த்தத்தை செல்லுபடியாகாது என்றும் வாதிடுகின்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...