தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில், லண்டனில் ரூபாய் .11,000 கோடி மதிப்பிலான புதிய தொழில் முதலீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக கிரேட் பிரிட்டன் லண்டன் நகர் சென்றுள்ள நிலையில், இன்று இந்த முக்கிய ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டுள்ளது. Samvardhana Motherson International Limited.முதலீட்டுத் தொகை: ரூபாய் .11,000 கோடி. வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி மற்றும் தளவாட வசதி ஆகிய பிரிவுகளில் இந்த முதலீடு செய்யப்படவுள்ளது. இந்தப் புதிய திட்டங்களின் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 7,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். இந்த ஒப்பந்தத்தில் தமிழ்நாடு வழிகாட்டுதல் துறையின் நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப் மற்றும் சம்வர்தனா நிறுவனத்தின் பிரிவுத் தலைவர் பேரி பெயிண்டர் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
இங்கிலாந்து, இலண்டன் நகரில் இன்று (14.09.2026), சம்வர்தனா Motherson International Ltd., நிறுவனம் அதன் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து, வழிகாட்டி நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் சுமார் ரூபாய் .11,000 கோடி முதலீட்டில், வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, கூட்டிணைப்பு மற்றும் தளவாட வசதிகள் ஆகிய துறைகளில் சுமார் 7,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் குழுமத்தின் உலகளாவிய சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்புத் துறைத் தலைவர் பாரி பெயிண்டர் மற்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப், இ.ஆ.ப. ஆகியோர் கையெழுத்திட்டு, ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், இங்கிலாந்து நாட்டிற்கான இந்தியத் தூதர் குமரன் பெரியசாமி, IFS, நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு சி. ஜோசப் விஜய் மேற்கொண்டுள்ள இந்த முதல் வெளிநாட்டுப் பயணம், மாநிலத்தின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையத்தை (GCC) அமைப்பதற்கு ஏதுவாக, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம், ஏர்ன்ஸ்ட் & யங் (Ernst & Young) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. சுமார் 1,000 கோடி ரூபாய் முதலீட்டையும், 2,000-க்கும் மேற்பட்ட உயர் மதிப்புடைய புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் வகையில் அமையவுள்ள இந்த மையம், சென்னையில் உள்ள மவுண்ட் பூந்தமல்லி சாலையில் புதிதாக அறிவிக்கப்பட்ட 'GCC காரிடார்' (GCC corridor) பகுதியில் அமைக்கப்படவுள்ளது
ஸ்வீடனைச் சேர்ந்த சிக்மா டெக்னாலஜி குரூப், தமிழ்நாட்டில் எம்பெடட் சிஸ்டம்ஸ், மின்மயமாக்கல் மற்றும் தொழில்துறை டிஜிட்டல்மயமாக்கல் ஆகிய துறைகளில் 600 உயர் மதிப்பு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், திருச்சிராப்பள்ளி மற்றும் சென்னையில் உள்ள தனது உலகளாவிய திறன் மையங்களை, தனது இந்திய நிறுவனமான ஸ்ரியா சொல்யூஷன்ஸ் மூலம் விரிவாக்குவதற்கு உறுதியளித்து, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் முன்னிலையில், சிக்மா டெக்னாலஜி குரூப் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் கார்ல்சன் மற்றும் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், தலைமை நிர்வாக அதிகாரி, ஸ்ரியா (Sigma AB Pvt Ltd-இன் ஒரு பகுதி)மற்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப், IAS ஆகியோருக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், இங்கிலாந்து நாட்டிற்கான இந்தியத் தூதர் குமரன் பெரியசாமி, IFS, நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்இலண்டனில் இன்று 14.09.2026 அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் தீரஜ் ஹிந்துஜா, ஃபினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் பிரகாஷ் பி. சாப்ரியா, இயக்குநர் ரீட்டா ஹிந்துஜா சாப்ரியா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் உடன் சந்திப்பில், ஆகஸ்ட் 2026-ல் நடைபெற்ற 'வெற்றி' (VETTRI) தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது மேற்கொள்ளப்பட்ட ரூபாய் . 2,500 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) அடிப்படையில் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள், தமிழ்நாட்டில் ஹிந்துஜா குழும முதலீடுகளின் முன்னேற்றம் குறித்து ஹிந்துஜா தமிழ்நாடு முதலமைச்சரிடம் விளக்கினார். தமிழ்நாட்டில் தொடர்ந்து முதலீடு செய்வதிலும், வணிகத்தை விரிவுபடுத்துவதிலும் ஹிந்துஜா குழுமத்திற்கு உள்ள உறுதிப்பாட்டை விளக்கியதோடு, தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில், குறிப்பாகக் காற்றாலை மின்சக்தித் துறையில் முதலீடுகளை மேலும் அதிகரிப்பதில் இக்குழுவினர் ஆர்வம் தெரிவித்தனர்.
மேலும், தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் வணிக வாகனங்களின் ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்தும், வாகன உற்பத்தித் துறைக்கான ஏற்றுமதி மையமாக தமிழ்நாட்டின் பங்கை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இச்சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது.
இந்நிகழ்வின்போது இங்கிலாந்து நாட்டிற்கான இந்தியத் தூதர் குமரன் பெரியசாமி, IFS, நிதி மணி திரிபாதி, இ.ஆ.ப., Minister (Economic), High Commission of India , London மற்றும் தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.முதல் கட்டமாக முதல்வர் வெளிநாடு சென்று முதலீடுகளை ஈர்க்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றிய அறிக்கை வெளிவந்துள்ளது, இதை காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசியல் எதிர்ப்பு நிலையில் எதிர் கட்சிகள் தவறுகளை ஆய்வு செய்யும் முன்னரே நாமே செய்தால் நல்லது என்பதால்
முன்னர் மோதர்சன் சுமி சிஸ்டம்ஸ் லிமிடெட் என அறியப்பட்ட சம்வர்தனா மோதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் (SAMIL), இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு முன்னணி உலகளாவிய வாகன உதிரிபாகங்கள் உற்பத்தியாளர்கள் ஆகும்.
Samvardhana Motherson International Ltd. (SAMIL) , மாருதி சுசுகி, டாடா, ஹூண்டாய், மெர்சிடிஸ் மற்றும் ஃபோர்டு போன்ற உலகின் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய வாகன அசல் உபகரண உற்பத்தியாளர்களுக்கும் (OEM) ஒரு முழுமையான அமைப்புத் தீர்வுகள் வழங்குநராகச் செயல்பட்டு, மிகவும் பன்முகப்படுத்தப்பட்ட,"மதிப்புக் கூட்டப்பட்ட" வணிக மாதிரியில் இயங்குகிற நிறுவனம் 43 நாடுகளில் பரவியுள்ள 400-க்கும் மேற்பட்ட வசதிகளைக் கொண்டுள்ளது
தமிழ்நாட்டில் சுமார் ரூபாய் .11,000 கோடி முதலீட்டில், வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, கூட்டிணைப்பு மற்றும் தளவாட வசதிகள் ஆகிய துறைகளில் சுமார் 7,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அவர்களிடம் அவ்வளவு பணம் முதலீடு உள்ளதா என்றால் இருக்கிறது
Authorized Share Capital ரூபாய் 1,230 crore
Market Capitalization ரூபாய் 1,73,500 crore ($18.1B USD) பங்குச் சந்தைகளில் புழக்கத்தில் உள்ள நிறுவனத்தின் பங்குகளின் ஒட்டுமொத்த தற்போதைய சந்தை மதிப்பு.
இந்தியாவின் வாகன உதிரிபாகங்கள் துறையில் Samvardhana Motherson International Ltd. (SAMIL) மறுக்க முடியாத சந்தை முன்னணியில் உள்ளது
மார்ச் மாதம் 2026-இல் முடிவடையும் நிதியாண்டில், இந்த நிறுவனம் ரூபாய் 1,26,103.67 கோடி என்ற வரலாறு காணாத வருவாயைப் பதிவு செய்துள்ளது. இது உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் முழுவதும் அதன் ஆழமான சந்தை ஊடுருவலைப் பிரதிபலிக்கிறது.
நிறுவனத்தின் பிரம்மாண்டமான ஆர்டர் பட்டியல், உலகளாவிய பேரியல் பொருளாதார மந்தநிலைகளுக்கு எதிரான அதன் மிக வலிமையான பாதுகாப்பாகத் திகழ்வதோடு, அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளுக்கு உறுதியான வருவாய் தெரிவுநிலையையும் வழங்குகிறது
இதன் தலைமையகம் பாரத நாட்டில் தான் உள்ளது இது ஒரு இந்திய கம்பெனி - நிறுவனத்தின் முதன்மை பெருநிறுவனத் தலைமை அலுவலகம் மற்றும் நிர்வாக மையம் உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் அமைந்துள்ளது.
அதன் முகவரி Plot No. 1, Sector 127, Noida - Greater Noida Expressway, Noida, Uttar Pradesh, 201301.
டெல்லி அருகில் இருக்கும் கம்பெனி உடன் கையெழுத்து இட லண்டன் போக வேண்டிய அவசியம் என்ன என்கிற கேள்வியை சிலர் எழத்தான் செய்வார்கள் அதற்கு பதில் லண்டன் தான் சிறப்பாக பரிசோதனை மையம்
சிறப்பான பொருளாதார வலு உள்ள ஒரு கம்பெனி கூட முதல்வர் சி. ஜோசப் விஜய் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு இருக்கிறார், கடந்த ஆட்சி போல போலியாக விளம்பரம் செய்ய வில்லை,






_4602.jpg)



கருத்துகள்