குடி போதையில் அதிவேகமாக காரை இயக்கி விபத்தில் சிக்கி பலியான PSNA தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள்
கேரளா மாநிலம் திருச்சூர் அருகில் நிகழ்ந்த மோசமான சாலை விபத்தில் திண்டுக்கல் PSNA தனியார் பொறியியல் கல்லூரியின் மாணவர்களும் அவர்களது நண்பர்கள் உள்ளிட்ட 8 பேர் சமீபத்தில் உயிரிழந்தனர்.
விபத்தில் உயிரிழந்த மாணவர்களான சூர்யா திண்டுக்கல், யுவசஞ்சித் திண்டுக்கல், ஜோசுவா திண்டுக்கல், முரளி திண்டுக்கல், ஜீவா திண்டுக்கல், சந்தோஷ் மதுரை, பிரசன்னா மதுரை, விஸ்வா சேலம், ஆகியோர் தொடர் விடுமுறை என்பதால், அவர்களின் நண்பர் ஒருவர் புதிதாக வாங்கிய காரில் இந்த மாணவர்கள் தங்களது வீடுகளுக்குத் தெரிவிக்காமல் கேரளாவுக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். 2026 செப்டம்பர் 4-ஆம் தேதி நள்ளிரவு 11:42 மணி அளவில், திருச்சூர் மாவட்டம் கைப்பமங்கலம் பனம்பிக்குன்னு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்ற அந்தக் கார், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ஏற்றிய லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியதால் கார் முற்றிலும் நொறுங்கிய நிலையில், மீட்புக்குழுவினர் காரை வெட்டி எடுத்து 8 பேரின் உடல்களையும் மீட்டனர். இதுகுறித்து கேரளா மாநில காவல்துறை சிறப்புப் புலனாய்வுக் குழுவினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த தடுக்கப்பட்ட சாலையில் தடுப்புகளுக்கு இடையே நின்று கொண்டிருந்த லாரியின் மீது அதிவேகத்தில் சென்று மோதியிருக்கிறது மாணவர்கள் சென்ற கார். போதிய விளக்கு வெளிச்சம், உரிய வழிகாட்டிப் பலகைகள் இல்லாதது, அதி வேகமாக காரை செலுத்தியது, விதிகளை மீறி லாரியை சாலையில் நிறுத்தியிருந்தது என பல்வேறு விதி மீறல்கள், மற்றும் குறைபாடுகளே இந்த விபத்திற்கு காரணம். அதோடு இதில் சில மாணவர்களின் பெற்றோர்களுக்கு தங்களின் மகன்கள் வெளியூருக்கு சென்றதே தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும்
ஒரு வாகனத்தில் இவ்வளவு பேர் தான் செல்ல வேண்டும், இத்தனை சுமையை தான் அந்த வாகனம் தாங்கும் என்பதெல்லாம் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய விதி முறைகள். காப்பீடு உள்ளதா? உரிமம் உள்ளதா என்பதெயெல்லாம் உறுதி செய்ய வேண்டியது வாகன ஓட்டுனர்களின் கடமை. சமீப காலங்களில் எதிர் திசையில் வாகனங்களை செலுத்துவது, செல்லுலர் தொலைபேசியில் பேசிக்கொண்டே வாகனங்களை செலுத்துவது, அதி வேகமாக வாகனத்தை செலுத்துவது போன்ற விதி முறை மீறல்கள் அதிகளவில் காணப்படுவது விபத்துக்களை அதிகரிக்க செய்கிறது.
தங்கள் பிள்ளைகள் வசதியாகச் செல்ல வேண்டும் என்று பெற்றோர் நினைப்பதில் தவறில்லை, ஆனால், அவர்கள் பாதுகாப்பாகச் செல்கிறீர்களா என்பதை கண்காணிக்க வேண்டியது பெற்றோரின் கடமை.
அதே போல், சாலைகளை சீராக அமைப்பது, பராமரிப்பது, விதிமீறல்களை முறையாக கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பது என்பதெல்லாம் அரசின் கடமை. மக்கள் சட்டத்தை மதிக்க வேண்டிய அதே நேரத்தில், அவைகளை மீறும் போது உரிய நடவடிக்கை எடுப்பதன் மூலம் மட்டுமே இது போன்ற கொடூர சம்பவங்களை தவிர்க்க முடியும். அரசு பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தாலும் பொது மக்கள் அதை மதிக்காமல் அலட்சியப்படுத்துவதாலேயே பெரும்பாலான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எதிரில் வாகனம் வந்தால் பிரேக் பிடித்து நிறுத்தினால் கௌரவக் குறைவு எனும் மனநிலை சமீப காலமாக காணமுடிகிறது, அந்த மனநிலை வர காரணம், தாங்கள் தான் எநிலும் உயர்வானவர்கள் ன்ற தவறான மனநிலை கொண்ட நோயாளிகள் கூடியதால் வரும் திகழ்வு அதுவே பல விபத்துகளுக்கு காரணமாகிறது, கேரளாவில் திண்டுக்கல் மாணவர்கள் இறந்தது வேகம் மட்டும் அல்ல காரணம், குடி போதை மதுவும் ஒரு காரணம் இவர்கள் உடலை பிரேதப்பரிசோதனை
செய்த டாக்டர் ஹிதேஷ் சங்கர் தன் முகநூல் பதிவில், அனைவருமே மது குடித்து இருப்பதாக ஆய்வுகள் சொல்கிறது என்கிறார். டாக்டர் ஹிதேஷ் சங்கர் கேரளா மாநிலம் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மனையில் தடயவியல் துறைத் தலைவராகப் பணியாற்றும் முன்னணி தடயவியல் அறுவை சிகிச்சை நிபுணர், திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி தடயவியல் துறைத் தலைவர். பல முக்கிய மற்றும் பரபரப்பான வழக்குகளில் பிரேதப் பரிசோதனை செய்து துல்லியமான மருத்துவ அறிக்கைகளை வழங்குவதில் திறமையாக அறியப்பட்டவர்.
அவர்கள் கச்சேரிப்படியில் உள்ள பத்தாங்கல் என்கிற இடத்தில் மது குடித்து யார் மீதோ காரை மோதுவது போல சென்று இருக்கிறார்கள், காரை விரட்டி மறித்து அங்கேயே கூட்டம் கூடி இருக்கிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில் அப்பகுதி மக்கள் காவல்துறையை அழைத்து இருக்கிறார்கள் அங்குள்ள உள்ளூர் மக்கள்,
இவர்கள் அனைவரும் குடித்து இருந்ததால்.. காவல்துறை வந்தால் பிரச்னை ஆகிவிடும் என்று பயந்து வண்டியை எடுத்துக்கொண்டு வேகமாகக் கிளம்பி இருக்கிறார்கள்.
யாரும் துரத்திப் பிடித்துவிடுவார்களோ என்கிற அச்சமும். ஊருக்குச் சென்று விட்டால் பாதுகாப்பு என்கிற எண்ணமும், குடித்து இருந்த மதுவும் சேர்ந்து அதிவேகமாக காரை இயக்கி வந்து இருக்கிறார்கள். அடுத்த ஊருக்குச் சென்று விட்டால் காவல்துறை வராது என்கிற வேகம்.
மது குடித்தால், கவனம் இருக்காது. பார்வை தெளிவு இருக்காது. முடிவு எடுக்கும் திறன் இருக்காது. பின் விளைவுகள் தெரியாது. உயிர் போனாலும் பயம் தெரியாது,
இப்படிப்பட்ட கண் மூடிய வேகத்தில் பதட்டத்தில் வந்த போது, முறை கேடாக நிறுத்தி இருந்த சரக்கு லாரிக்கு இடது புறத்தில் இரண்டு லாரிகள் நிறுத்தி இருக்க வலது புறத்தில் டிவைடர் மேலே ஏறி இறங்கி வேகம் குறையாமல் லாரி சேஸ் அடியில் காருடன் சொருகி இருக்கிறார்கள்..
ஒருவரைத் தவிர அனைவரும் சதைப் பிண்டங்களாகத் இருந்தது தான் கொடுமை, விலை உயர்ந்த கார் ஏர் பேக் இருக்கு என்கிற குருட்டு தைரியம் விதிக்கு முன் வேலை செய்ய வேண்டிய மதி மது அருந்தி மயக்கம் உள்ள அறிவாளிகளுக்கு ஏர்பேக் சேப்டி என்பது 90 கீமீ வேகம் வரை தான் பலன் என்பது தெரிவதே இல்லை.
ரோகிணி நட்சத்திர நாள் என்று குருவாயூர் சென்றவர்களுக்கு மது குடித்து பக்தியும் இல்லை. புத்தியும் இல்லை. குடும்பம் கண்டித்து வளர்க்காத பிள்ளைகள் 20 வயதில் குடி போதை, அதில் வண்டி ஓட்டும் அறிவாளித் தனம் எல்லாம் தற்போதய சினிமா, மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவில்லாத தவறை விதைக்கும் மீடியா தந்த குருட்டுத் தைரியம்.
இவர்கள் யாருக்குமே உண்மையாக இல்லாமல் வளர்ந்த 2கே கிட்ஸ் என்பது தான் இவர்களை இழந்த அந்தப் பெற்றோர்களின் வேதனை.
இனி வரும் காலம் வாழ்க்கை பற்றியும், சமூக சிந்தனையும் அறவே அற்ற வரலாறு, கலாச்சாரம், பண்பாடு, அறியாத ஒரு இழிவான தலைமுறை இளைஞர்களால் நிரம்பி இருக்கும். என்பது அவர்கள் தலை முடியை வைத்தே முடிவு செய்து விடலாம்,





கருத்துகள்