தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு துறைக்கு RTI-ல் இருந்து விலக்கு அளித்து செப் 21, 2026 அன்று வெளியிடப்பட்ட அரசிதழ் அறிவிப்பை தமிழக அரசு நேற்று திரும்பப் பெற்றுள்ளது. கூட்டணி கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு பின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
*அரசாணை என்ன சொன்னது?*
மனிதவள மேலாண்மைத் துறை மூலம் ஆளுநர், RTI Act பிரிவு 24(4)-ன் கீழ், Public (Law and Order) துறையை ஒரு "Intelligence and Security Organization" என அறிவித்து, RTI சட்டம் அதற்கு பொருந்தாது என அறிவித்திருந்தார்.
இந்த விலக்கு அமலில் இருந்திருந்தால், காவல் சித்திரவதை, காவல் மரணங்கள், போலீஸ் துப்பாக்கிச்சூடு, சமூக-சாதிய மோதல்கள், பாதுகாப்பு தொடர்பான கைதுகள் குறித்த விசாரணை பதிவுகளை RTI-ல் பெற முடியாத நிலை ஏற்பட்டிருக்கும் என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் எச்சரித்திருந்தார்.
*இது புதிய நடைமுறையா? இல்லை.*
தமிழ்நாடு ஏற்கனவே இதே பிரிவை பயன்படுத்தி Tamil Nadu State Vigilance Commission மற்றும் Directorate of Vigilance and Anti-Corruption (DVAC) ஆகியவற்றை விலக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வரலாறு:
1. *G.O.Ms.No.158, நாள் 26.08.2008:* திமுக ஆட்சியில் DVAC உள்ளிட்ட அமைப்புகளுக்கு RTI-ல் இருந்து விலக்கு.
2. அந்த அரசாணையை அரசு தானாக ரத்து செய்யவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு *26.07.2018 அன்று சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.*
3. அதன் பின்னரே *08.12.2022 அன்று G.O.(Ms) No.128* மூலம் அந்த பழைய அரசாணை முறையாக nullify செய்யப்பட்டது.
4. 2024-ல் Cyber Crime Wing-க்கும் இதேபோல் விலக்கு அளிக்கப்பட்டது.
*சட்டப்படி இது செல்லுமா?*
இல்லை. இரண்டு காரணங்கள்:
- பிரிவு 24(4)-ன் கீழ் விலக்கு பெற, அந்த துறையின் முதன்மை பணி உளவு சேகரிப்பாக மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் Law & Order துறையின் பணிகள் போராட்டங்களை கையாளுதல், அவதூறு வழக்கு அனுமதி, நாடாளுமன்ற கேள்விகளுக்கு பதில் போன்ற நிர்வாக பணிகள்.
- மிக முக்கியமாக, RTI சட்டத்தின் படி விலக்கு பெற்ற அமைப்பாக இருந்தாலும் *ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான தகவல்களை வழங்க வேண்டும்* என்பது கட்டாய விதி. எனவே காவல் மரணங்கள், சித்திரவதைகளை மறைக்க முடியாது.
*முடிவு:*
கேள்வி கேட்பதை தடுப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என விசிக தலைவர் திருமாவளவன் "Highly Shocking" என்றும், மனித உரிமைகளை நசுக்கும் செயல் என்றும் கண்டனம் தெரிவித்திருந்தார். அதன் எதிரொலியாகவே தற்போது அரசாணை வாபஸ் பெறப்பட்டுள்ளது.





கருத்துகள்