சிங்கை ஜி.இராமச்சந்திரன் என்பவர் கோவிந்தராசு மகன் இவர் அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து,
தற்போது தமிழ்நாடு அரசின் ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் (TANSIM) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 11, 2026 ஆம் தேதி அன்று தவெகவில் இணைந்தவருக்கு, மூன்றே வாரங்களில் முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக (TANSIM Chairman) பொறுப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.ஜூலை 2026 ல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்தவர்,
ஆகஸ்ட் மாதம் தவெக தலைவர் முதல்வர் சி. ஜோசப் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். மார்ச் 2016 ல் அப்போதைய முதல்வர் ஜெ.ஜெயலலிதாவால் அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு (IT Wing) செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் அக்கட்சியின் மாணவர் அணிச் செயலாளராகவும் பணியாற்றினார். 2024 மக்களவைத் தேர்தலில் கோயம்பத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வி கண்டார் டிசம்பர் 11, 1987 அம் தேதி கோயம்புத்தூரில் பிறந்தவரது தந்தை சிங்கை கோவிந்தராசு, முன்னாள் அதிமுக சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.
கோயமுத்தூரில் பள்ளி மற்றும் பொறியியல் படிப்பை PSG தொழில்நுட்பக் கல்லூரியில் முடித்தவர், இந்தியாவின் புகழ்பெற்ற மேலாண்மை நிறுவனமான ஐஐஎம் அகமதாபாத்தில் (IIM Ahmedabad) முதுகலை மேலாண்மை (PGDM/MBA) பட்டம் பெற்றவர். அரசியல் தவிர 'தி சோஷியல் மீடியா கம்பெனி' (The Social Media Company) என்ற டிஜிட்டல் விளம்பர நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.தமிழ்நாடு STARTUP மற்றும் INNOVATION இயக்கத்திற்கு புதிய தலைவர்
தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு STARTUP மற்றும் INNOVATION இயக்கத்தின் (TANSIM) தலைவராக திரு. சிங்கை G. ராமச்சந்திரனை நியமித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
01.09.2026 தேதியிட்ட G.O.(2D) No.21 மூலம் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது. அவரது நியமனத்திற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தனியாக வெளியிடப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




கருத்துகள்