--- *12 ஆண்டு நடந்த காசர்கோடு கொலை வழக்கில் 21 பேர் விடுதலை - இது பொது பார்வை*
*சம்பவம் 1 - தொடக்கம்:*
2014-ல் காசர்கோடுவில் RSS தொண்டர் ஜோதிஷ்குமார் மீது ஒரு கொலை முயற்சி தாக்குதல் நடந்தது. இதில் SDPI தொண்டர் சைனுல் ஆபித் உள்ளிட்ட சிலர் மீது காவல்துறை சந்தேக வழக்கும் பதிந்தது ஆனால் சரியான விசாரணை நடவடிக்கை எடுக்கவில்லை .
*சம்பவம் 2 - பழிவாங்கல்:*
22-12-2014 இரவு 9.30 மணி. காசர்கோடு பழைய பேரூந்து நிலையம் MG ரோட்டில் தந்தை முகம்மது குன்ஹியின் பர்னிச்சர் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 24 வயது சைனுல் ஆபித் மீது ஆயுதம் தாங்கிய கும்பல் புகுந்து வெட்டியது. மறுநாள் மங்களூரில் உயிரிழந்தார்.
*காவல்துறை விசாரணை:*
காசர்கோடு நகர் காவல்நிலையம் IPC 302, 120B பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது. அப்போதைய SP Thompson Jose மேற்பார்வையில் DySP T.P. ரஞ்சித் , CI P.K.சுதாகரன் குழு 21 RSS/BJP தொண்டர்களை கைது செய்தது. இது பழிவாங்கும் கொலை என குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
*நீதிமன்ற போராட்டம் - 12 ஆண்டுகள்:*
நீதிமன்றம்: காசர்கோடு கூடுதல் அமர்வு நீதிமன்றம் - III
நீதிபதி: அசிந்த்யா ராஜ் உன்னி
சாட்சிகள்: 81 பேர், ஆவணங்கள் 150
இதில் 8-வது குற்றவாளி ஜோதிஷ்குமார் 2022-ல் தற்கொலை, முக்கிய சாட்சியான தந்தை விபத்தில் மரணம், பல சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறினர்.
*தீர்ப்பு - 18-10-2026:*
அரசு தரப்பு குற்றத்தை நிரூபிக்கவில்லை, அடையாள அணிவகுப்பு, அறிவியல் ஆதாரம் இல்லை என்று கூறி 20 பேரையும் (1 பேர் இறந்துவிட்டதால்) நீதிபதி விடுதலை செய்தார். சட்டப்படி இது Benefit of Doubt அடிப்படையில் விடுதலை.
*Public Justice-ன் நடுநிலை பார்வை - இரு தரப்பு தவறு:*
1. ஆபித் தரப்பு தவறு: RSS தொண்டர் மீது தாக்குதல் வழக்கில் பெயர் இருந்தது. தனி நபர் தவறு இல்லாமல் மோதல் வராது.
2. 21 பேர் தரப்பு தவறு: பழிவாங்கும் நோக்கில் சட்டத்தை கையில் எடுத்ததாக குற்றச்சாட்டு.
3. காவல்துறை தவறு: இரண்டு வழக்கிலும் சரியான ஆதாரம் திரட்டாததால், ஒரு குடும்பத்துக்கு நீதி இல்லை, 21 குடும்பங்கள் 12 வருடம் வழக்கை சந்தித்து வாழ்க்கையை இழந்தன.
*முடிவு:*
கொலை நடந்ததும் உண்மை, கொலையாளி என நிரூபிக்க முடியாததால் தண்டனை இல்லாததும் உண்மை, 12 வருடம் அங்கு நடந்தது கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி ஆட்சி தான் அங்கு பிஜேபி ஆடசியில் இல்லை ஆக இதில் அரசு ஆதாரம் தேடாமல் இருக்க வாய்ப்பு இல்லை, விசாரணைக்கு பிறகு அனைவரும் நிரபராதி என்பதும் சட்டப்படி உண்மை. இதில் யாரும் வெற்றி பெறவில்லை, நீதி தான் தோற்றதா வென்றதா என்பதை அங்கு ஆட்சியில் இருந்தவர்கள் தானே கூற வேண்டும் . இதை சரி செய்ய வேண்டியது ஆட்சிக்கு ஆட்சி மாறும் காவல்துறை விசாரணை தரத்தை உயர்த்துவது தான்.
*நீதி என்பது ஒரு தரப்புக்கு ஆதரவு அல்ல, இரு தரப்பு நியாயத்தை சொல்வதே - அதுவே பொதுநீதி .* ---

கருத்துகள்