முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழக அரசியலை விலை பேசிய கொல்கத்தா டைகர்! திமுகவுக்கு 125 கோடி, அதிமுகவுக்கு 135 கோடி - யார் இந்த Tiger Associates?

ஆதாரத்துடன் அம்பலம்: கொல்கத்தா டைகர் லாட்டரி நிறுவனம் ஒரே நாளில் AIADMK-க்கு ரூ.50 கோடி -


UTR எண்ணுடன் EC ஆவணம் - திமுக, அதிமுகவுக்கு மொத்தம் ரூ.260 கோடி!

புதுடெல்லி: தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆண்டு நன்கொடை அறிக்கை 2025-26 மூலம் தமிழகத்தின் இரு பெரிய கட்சிகளும் ஒரே லாட்டரி நிறுவனத்திடம் இருந்து பெற்ற பிரம்மாண்ட நன்கொடை அம்பலமாகியுள்ளது. இது குறித்து PTI செய்தி நிறுவனம் 16.10.2026 அன்று செய்தி வெளியிட்டுள்ளது.

*இதழுக்குக் கிடைத்த இரண்டு தனித்தனி EC ஆவணங்கள்:*

*ஆவணம் 1: DMK Contribution Report 2025-26 - Page 35*

- _SPR Construction Private Limited,_ 57, Narayana Mudali Street, Sowcarpet, Chennai-600079, PAN: AANCS6295H

    - 22.07.2025 - ரூ.1 கோடி - RTGS 12746

    - 23.07.2025 - ரூ.1 கோடி - RTGS 12747

    - 24.07.2025 - ரூ.1 கோடி - RTGS 12748

    - மூன்று நாட்களில் மட்டும் ரூ.3 கோடி. மொத்தம் இந்த நிறுவனம் ரூ.6.5 கோடி வரை கொடுத்துள்ளதாக தகவல்.

- _Tiger Associates,_ 55-A, S.P. Mukherjee Road, Kolkata-700026, PAN: AAQFT3209A

    - 05.08.2025 - ரூ.5 கோடி - Cheque No 067741

    - 13.08.2025 - ரூ.20 கோடி - RTGS

    - PTI தகவல் படி இதே நிறுவனம் DMK-க்கு 14 தவணைகளில் மொத்தம் ரூ.125 கோடி கொடுத்துள்ளது. இது DMK-வின் மொத்த நன்கொடை ரூ.191.19 கோடியில் 65.36% ஆகும்.



*ஆவணம் 2: AIADMK Contribution Report 2025-26 - Anna D.M.K. Head Office Seal*

- _M/s. Tiger Associates,_ No.55A, S.P. Mukherjee Road, Kolkata-700026, PAN: AAQFT3209A

    - _17.02.2026 அன்று ஒரே நாளில் இரண்டு RTGS:_

    - http://S.No 100 - ரூ.25 கோடி - UTR: UTIBR62026021757294676 - Axis Bank

    - http://S.No 101 - ரூ.25 கோடி - UTR: UTIBR62026021757296985 - Axis Bank

    - _மொத்தம் ஒரே நாளில் ரூ.50 கோடி_

    - PTI தகவல் படி AIADMK-க்கு 6 தவணைகளில் மொத்தம் ரூ.135 கோடி. இது AIADMK-வின் மொத்த நன்கொடை ரூ.161.36 கோடியில் 83.66% ஆகும்.

    - மேலும் 04.06.2025 அன்று ஒரே தவணையில் ரூ.40 கோடி (UTR: UTIBR62025060406816018) என்ற ஆவணமும் உள்ளது.

*மொத்த கணக்கு என்ன?*

- Tiger Associates 2024-25-ல் ரூ.110 கோடி கொடுத்திருந்தது

- 2025-26-ல் DMK-க்கு ரூ.125 கோடி + AIADMK-க்கு ரூ.135 கோடி = _ரூ.260 கோடி_

- இரு கட்சிகள் மொத்தம் ரூ.352.55 கோடி நன்கொடையில் 74% இந்த ஒரே நிறுவனத்திடம் இருந்து

- இரண்டு ஆண்டுகளில் மொத்தம் _ரூ.370 கோடி_

*நிறுவன பின்னணி:* Tiger Associates-ன் Designated Partner Subbayan Nagarajan, லாட்டரி அதிபர் Santiago Martin-ன் நீண்டகால கூட்டாளி என்றும், இருவரும் வேறு நிறுவனத்தில் பார்ட்னராக உள்ளனர் என்றும் PTI தெரிவித்துள்ளது. ஆனால் Tiger Associates மற்றும் Future Gaming வெவ்வேறு நிறுவனங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*கூடுதல் சட்டத் தகவல் - தேர்தல் நிதி குறித்து சட்டம் என்ன சொல்கிறது?*

*1. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951*

*Section 29A - பதிவு:* ஒரு கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.

*Section 29B - நன்கொடை பெற தகுதி:* அரசியல் கட்சிகள் தன்னார்வ நன்கொடை பெறலாம், ஆனால் அரசு நிறுவனம், வெளிநாட்டு நிறுவனம் மூலம் பெறக்கூடாது.

*Section 29C - வெளிப்படைத்தன்மை:* ரூ.20,000-க்கு மேல் ஒருவரிடம் இருந்து நன்கொடை பெற்றால், யார் கொடுத்தார், எவ்வளவு என்ற விவரத்தை ஆண்டுதோறும் தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில் வருமான வரி விலக்கு ரத்தாகும்.

*Section 77 & 78 - வேட்பாளர் செலவு கணக்கு:* MP தேர்தலுக்கு ரூ.95 லட்சம், MLA தேர்தலுக்கு ரூ.40 லட்சம் உச்ச வரம்பு. தேர்தல் முடிந்த 30 நாட்களில் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

*2. நிறுவனங்கள் சட்டம் 2013 - Section 182*

ஒரு நிறுவனம் அரசியல் கட்சிக்கு நன்கொடை கொடுக்கலாம், ஆனால் நிபந்தனைகள் உண்டு. பழைய விதி: கடந்த 3 ஆண்டு சராசரி லாபத்தில் 7.5% மட்டுமே கொடுக்கலாம். 2017 Finance Act மூலம் இந்த உச்ச வரம்பை நீக்கினார்கள். *15.02.2024 உச்சநீதிமன்ற தீர்ப்பு (ADR vs Union of India) இந்த திருத்தத்தை ரத்து செய்து விட்டது.* மீண்டும் பழைய நிலையே அமலில் உள்ளது. கட்சியின் பெயர், தொகையை கணக்கு புத்தகத்தில் காட்ட வேண்டும்.

*3. வருமான வரி சட்டம் 1961*

*Section 13A -* அரசியல் கட்சிகளுக்கு வருமான வரி விலக்கு உண்டு, ஆனால் அவை கணக்கை தணிக்கை செய்து, ரூ.20,000-க்கு மேல் உள்ள நன்கொடைகளை பராமரிக்க வேண்டும். ரொக்கமாக ரூ.2000-க்கு மேல் வாங்கக்கூடாது.

*Section 80GGB & 80GGC -* அரசியல் கட்சிக்கு கொடுக்கும் நன்கொடைக்கு 100% வரி விலக்கு உண்டு.

*4. தேர்தல் பத்திரம் (Electoral Bond) - முடிவுக்கு வந்த திட்டம்*

2017-ல் Finance Act மூலம் 4 சட்டங்களை திருத்தி இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. SBI வங்கி மூலம் யார் யாருக்கு கொடுத்தார் என்று தெரியாமல் நன்கொடை கொடுக்கலாம். *உச்சநீதிமன்றம் 15.02.2024 அன்று இதை அரசியலமைப்புக்கு எதிரானது என்று ரத்து செய்தது.* காரணம்: வாக்காளருக்கு தெரிய வேண்டிய தகவல் உரிமை (Article 19(1)(a)) பாதிக்கப்படுகிறது.

*தீர்ப்பு வழக்கு: Association for Democratic Reforms vs Union of India - W.P.(Civil) No.880 of 2017 - தீர்ப்பு நாள் 15.02.2024 - D.Y.சந்திரசூட் அமர்வு.* நீதிமன்றம் "Electoral Bond Scheme is violative of Article 19(1)(a) and unconstitutional" என்று கூறி ரத்து செய்தது. SBI இனி Bond விற்கக்கூடாது என்றும், 2019 முதல் விற்ற விவரத்தை வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதன் படி தான் 2024 மார்ச்சில் Rs.16,518 கோடி விவரம் வெளியானது.

*5. தேர்தல் அறக்கட்டளை திட்டம் (Electoral Trust Scheme, 2013) - அரசிதழ் எண் S.O. 309(E) நாள் 31.01.2013*

நிறுவனங்கள் நேரடியாக கட்சிக்கு கொடுக்காமல், அரசால் அங்கீகரிக்கப்பட்ட Trust மூலம் கொடுக்கலாம். இந்த Trust 95% தொகையை கட்சிகளுக்கு பிரித்து கொடுக்க வேண்டும். Trust யாரிடம் இருந்து பணம் பெற்றது, எந்த கட்சிக்கு எவ்வளவு கொடுத்தது என்ற விவரத்தை ஆண்டுதோறும் தாக்கல் செய்ய வேண்டும்.

*6. Section 29C படிவம் - FORM 24A*

Conduct of Election Rules, Rule 85B - ஒவ்வொரு கட்சியும் ஆண்டுதோறும் தாக்கல் செய்ய வேண்டிய படிவம். இதில் கொடுத்தவர் பெயர், முகவரி, PAN, தொகை, Mode (Cheque/RTGS), Bank Details ஆகியவை இருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30-க்குள் ECI-க்கு அனுப்ப வேண்டும்.

*முடிவுரை: வாக்கு யாருக்கு? பணம் ஒரே இடத்திலிருந்து!*

தேர்தல் பத்திர திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததற்கு காரணம் ஒன்று தான் சார் - "வாக்காளருக்கு தெரிய வேண்டும், யார் பணம் கொடுக்கிறார் என்று!"

ஆனால் இங்கே என்ன நடந்துள்ளது?

Electoral Bond மறைந்தது, ஆனால் *RTGS வடிவில் Tiger வந்துவிட்டது!*

ஒரே நிறுவனம், ஒரே நகரம் - கொல்கத்தா. இரண்டு எதிர் எதிர் கட்சிகள் - சென்னை. 

திமுக ஆட்சியில் இருந்தாலும் சரி, அதிமுக ஆட்சிக்கு வந்தாலும் சரி, தங்கள் வணிகம் பாதிக்கக்கூடாது என்று இரு கட்சிகளுக்கும் *Insurance Policy* போல ரூ.260 கோடியை முதலீடு செய்வது சாதாரண வணிகமா? இல்லை, அதிகாரத்தை விலைக்கு வாங்கும் முயற்சியா?

*Section 29C படி* கட்சிகள் கணக்கு காட்டிவிட்டன, சட்டப்படி தப்பித்துவிட்டன. ஆனால் *Section 182 Companies Act படி* ரூ.135 கோடி கொடுக்கும் நிறுவனத்தின் லாபம் எவ்வளவு? அதன் வருமான வரி கணக்கு என்ன? இந்த பணத்தின் Source என்ன?

லாட்டரி விற்பனையில் வரும் ஒவ்வொரு ரூபாயும் சாதாரண மக்களின் கனவில் இருந்து வருவது. அந்த பணம் இன்று தமிழக அரசியலின் தலையெழுத்தை தீர்மானிக்கிறது.

மக்கள் கேள்வி:

1.  தேர்தல் ஆணையம் இந்த UTR எண்களை வைத்து பண பரிவர்த்தனையின் உண்மை தன்மையை விசாரிக்குமா?

2.  வருமான வரித்துறை Tiger Associates நிறுவனத்தின் 7.5% லாப வரம்பை ஆய்வு செய்யுமா?

3.  இரண்டு திராவிட கட்சிகளும் இந்த ரூ.260 கோடிக்கு பதில் சொல்லுமா?

Electoral Bonds-ஐ ரத்து செய்த உச்சநீதிமன்றம் சொன்னது போல, *"தகவல் அறியும் உரிமை வாக்காளருக்கு உண்டு"*. அந்த உரிமையை தான் இன்று Public Justice மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்கிறோம்.

*ஆதாரம் இருக்கிறது - UTR எண் இருக்கிறது - EC ஆவணம் இருக்கிறது. இனி பதில் சொல்ல வேண்டியது கட்சிகள் தான்!* ---

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...