--- *நவராத்திரி வரலாறு - விஜயதசமி சிறப்புப் பதிவு*
ஒன்பது நாள் போர், ஓர் நாள் வெற்றி - அதுதான் நம் நவராத்திரி வரலாறு!
*முதல் மகிஷன் கதை:*
மும்மூர்த்தி சக்தி ஒன்றாகி துர்க்கையாக உருவெடுத்து, மகிஷாசுரன் எனும் கொடியவனை ஒன்பது நாள் போரிட்டு பத்தாம் நாளில் வென்ற திருநாளே விஜயதசமி.
*இரண்டு -ஸ்ரீ ராமன் கதை:*
ஸ்ரீ ராமனும் ராவணனை வெல்ல ஒன்பது நாள் தேவியை வணங்கி பத்தாம் நாள் வெற்றி பெற்றதால் "விஜய" தசமி என்று பெயர் பெற்றது.
*ஒன்பது நாளும் ஒன்பது அவதாரம்* சைலபுத்ரியாய் தொடங்கி சித்திதாத்ரியாய் முடியும். ஒவ்வொரு நாளும் வீரம், செல்வம், அறிவை தரும் சக்தியாகும்.
*வெற்றித் திருநாள் விஜயதசமி*
_மகிஷனை வென்ற மாபெரும் சக்தி!_
_மங்கையர்க்கு அருளும் மாதா பராசக்தி!_
_கைகளில் சூலம், கண்களில் கருணை,_
_காலடியில் வீழும் தீயோரின் கர்வம்!_
_மூன்று சக்தியாக முப்பொழுதும் காப்பாய்,_
_மலைமகளாய் வீரம் தருவாய்,_
_அலைமகளாய் செல்வம் தருவாய்,_
_கலைமகளாய் அறிவை தருவாய்!_
_விஜயதசமி என்பது நாள் அல்ல,_
_வீரத்தின் அடையாளம்!_
_தசரா என்பது விழா மட்டுமல்ல,_
_தர்மத்தின் வெற்றி முழக்கம்!_
இன்று குழந்தைகள் ஏடு தொடங்கும் நாள், தொழில்கள், விவசாயி விதை தூவும் நாள், தீமை அழிந்து நன்மை வென்ற நாள்.
*14-ம் ஆண்டில் தடம் பதித்து அடியெடுத்து வைக்கும் பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பாக அனைவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்!* ---









கருத்துகள்