கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் தாமரை குளத்தில் தாமரை இலை பறித்ததாக கூறி முதியவர் ஒருவருக்கு ரூ.1.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
*இந்த ஒரு படம் ஆயிரம் கேள்விகளை கேட்கிறது!*
வெளியான புகைப்படத்தில், தரையில் அமர்ந்திருப்பவர் வயதான ஏழை முதியவர். முகத்தில் பயம், மடியில் சிவப்பு துண்டு. அவர் முன்னால் ஒரு பாத்திரத்தில் மொத்தமே ரூ.100 கூட பெறாத 20 தாமரை மொட்டுகளும், சில இலைகளும் உள்ளன. அவரை சுற்றி 4 வனத்துறை அலுவலர்கள் சீருடையில் நிற்கின்றனர்.
ஒரு தாமரை மொட்டு ரூ.2-க்கு கூட போகாத நிலையில், இதற்கு 4 அலுவலர்கள், மறைந்திருந்து கண்காணிப்பு, கைது, ரூ.1.5 லட்சம் அபராதமா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
*தேரூர் குளம் எந்த சாதாரண குளம் அல்ல:*
தேரூர் - சுசீந்திரம் குளம் Conservation Reserve ஆகும். இது வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 பிரிவு 36A-ன் கீழ் அரசாணை G.O.(Ms) No.41 நாள் 19.3.2015 மூலம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. மேலும் 08.04.2022 அன்று Ramsar Site No.2492 ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு 250 வகை பறவைகள் வருகின்றன. எனவே இங்கு பாதுகாப்பு அவசியம் தான்.
*சட்டம் என்ன சொல்கிறது?*
1. *பிரிவு 29 & 36A:* Conservation Reserve-ல் இருந்து எந்த வனப்பொருளையும் Chief Wildlife Warden அனுமதி இல்லாமல் எடுக்கக்கூடாது.
2. *பிரிவு 51 - தண்டனை:* சட்டத்தை மீறினால் 3 ஆண்டு வரை சிறை அல்லது ரூ.25,000 வரை அபராதம்.
3. *மிக முக்கியமான சட்டப் புள்ளி:* வனத்துறை அலுவலர்கள் நீதிபதி அல்ல. பிரிவு 50-ன் கீழ் பிடிக்கவும், பறிமுதல் செய்யவும் அவர்களுக்கு அதிகாரம் உண்டு. ஆனால் அபராதத்தை நீதிமன்றம் தான் விதிக்க முடியும். பிரிவு 54-ன் கீழ் Compounding செய்தால் கூட அதிகபட்சம் ரூ.25,000 தான்.
அப்படி இருக்க ரூ.1.5 லட்சம் அபராதம் என்பது சட்டத்தின் அதிகபட்ச வரம்பையே தாண்டியது.
*பூக்கடையில் விற்பது மட்டும் தர்மமா?*
இன்று கன்னியாகுமரி முதல் இமயம் வரை அனைத்து பூக்கடைகளிலும் தாமரை பூ ரூ.20-க்கு, தாமரை மாலை ரூ.1000-க்கு விற்கப்படுகிறது. சட்டப்படி Conservation Reserve-ல் இருந்து எடுப்பது குற்றம் என்றால், அதை வாங்குவதும், விற்பதும் கூட பிரிவு 39, 51-ன் கீழ் குற்றம் தான். ஆனால் குளத்தில் பறிக்கும் ஏழை முதியவரை மட்டும் பிடித்து ரூ.1.5 லட்சம் அபராதம் விதித்து, பூக்கடைக்காரர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.
*நமது கோரிக்கை:*
1. முதியவர் மீதான சட்ட வரம்பை மீறிய அபராதத்தை ரத்து செய்து, எச்சரிக்கை செய்து விடுவிக்க வேண்டும்.
2. தேரூர் குளத்தில் உள்ளூர் மக்கள் பங்கேற்புடன் Management Plan தயாரித்து, தாமரை பறிப்பதை முறைப்படுத்த வேண்டும். இதுவே உலக Ramsar தளங்களில் பின்பற்றப்படும் Community Based Conservation முறை.
3. அதே சட்டத்தை மலைகளை வெடி வைத்து தகர்க்கும் கனிம கொள்ளையர்கள் மீதும் கடுமையாக பாய்ச்ச வேண்டும்.
சட்டம் ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு பூசக்கூடாது. ---



.jpg)


கருத்துகள்