*EXCLUSIVE:
பெயரில்லா பயங்கரவாதி - 174 உயிர்களை காத்த தமிழ் மண்ணின் வீரன்!*
*துபாய் - டெல் அவிவ் வானில் திக் திக் நிமிடங்கள்*
நடுவானில் 35,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த Flydubai FZ1073 விமானம். உள்ளே 174 பயணிகள் - இஸ்ரேல், இந்தியா, அமெரிக்கா என பல நாட்டு மக்கள். காக்பிட்டில் இரண்டு பேர் மட்டும். தலைமை விமானி *கேப்டன் ஸ்மித் மச்சார் (Smit Machchhar)* - ஒரு இந்தியர், ஒரு தந்தை, ஒரு ஹீரோ.
திடீரென ரத்த வெறி!
பக்கத்தில் இருந்த இணை விமானி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை (சிலர் கோடாரி என்கிறார்கள்) எடுத்து ஸ்மித்தின் கழுத்து, முகத்தில் சரமாரியாக குத்துகிறான். நோக்கம் ஒன்று தான் - விமானத்தை தரையில் மோதி 174 பேருடன் தற்கொலை செய்வது.
ரத்தம் கொட்டுகிறது, கண் மங்குகிறது. ஆனால் ஸ்மித் சரணடையவில்லை. "If something happens up there, who will save you? Air crews can save lives" - ஒரு வருடம் முன் பாட்காஸ்டில் அவர் சொன்ன வார்த்தையை அவரே நிரூபித்தார். ரத்த வெள்ளத்தில் பூட்டிய காக்பிட் கதவை திறந்து, "ATTACK... HELP" என கத்துகிறார்.
வெளியே இருந்த இஸ்ரேல் பயணிகள் பாய்கிறார்கள். பிளம்பர் ஒருவர், பல் மருத்துவர் ஒருவர் - சாதாரண மனிதர்கள் அசாதாரண வீரர்களாகிறார்கள். இணை விமானியை அடக்கி, கீழே தள்ளுகிறார்கள். அதிர்ஷ்டவசமாக விமானத்தில் பயணம் செய்த இரண்டு spare pilot-கள் (ஒருவர் பிரிட்டிஷ்) காக்பிட்டை பிடித்து விமானத்தை சவுதி அரேபியா தபூக் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்குகிறார்கள்.
*இப்போது மர்மம் ஆரம்பம் - யார் அந்த இணை விமானி?*
கத்தியால் குத்தியவன் பிடிபட்டுவிட்டான். ஆனால் அவன் பெயர் என்ன?
1. *சவுதி அரேபியா மௌனம்*
2. *ஐக்கிய அரபு அமீரகம் (Flydubai நிறுவனத்தின் தாய் நாடு) மௌனம்*
3. *இஸ்ரேல் கூட பெயரை சொல்லவில்லை*
இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் கிதியோன் சார் மட்டும் NDTV-க்கு சொன்ன ஒரே தகவல்: *"அவன் ஓமன் நாட்டை சேர்ந்தவன். இது ஜிஹாதி பயங்கரவாத தாக்குதல். இஸ்ரேல்-UAE நட்பை (Abraham Accords) உடைக்கவே இந்த தாக்குதல்"*
பெயர்? புகைப்படம்? பின்னணி? எதுவும் இல்லை. விசாரணைக்கு பிறகு அவன் சவுதியில் இருந்து UAE-க்கு ஒப்படைக்கப்படுவான் என்கிறார்கள்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஸ்மித்தை "True Hero" என புகழ்ந்தார். "174 உயிர்களை காப்பாற்றிய அசாதாரண தைரியம்" என்றார். இந்திய தூதரகம் "அவர் நிலை சீராக உள்ளது" என்கிறது.
*பப்ளிக் ஜஸ்டிஸ் கேள்வி:* 35,000 அடியில் நடந்த தாக்குதல் தற்செயலா? திட்டமிட்ட சதியா? பெயரை மறைப்பதன் பின்னணியில் என்ன ராஜதந்திர அழுத்தம் உள்ளது? 174 உயிர்களை காத்த இந்திய வீரனுக்கு நீதி கிடைக்குமா?
தொடரும்...

கருத்துகள்