ஆம்பூர் அருகே அதிர்ச்சி! +2 மாணவனை விடுவிக்க ரூ.10,000 லஞ்சம் கேட்ட உமராபாத் SSI மதியழகன் சஸ்பெண்ட் - திருப்பத்தூர் பரபரப்பு
*ஆம்பூர் +2 மாணவனிடம் ரூ.10,000 லஞ்சம் உமராபாத் SSI சஸ்பெண்ட்
*திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உமராபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இடத் தகராறு தொடர்பாக ஒரு பெண் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த சென்ற காவல்துறையினர், சம்பந்தப்பட்ட பெண் வீட்டில் இல்லாததால், அவரது 17 வயதுடைய +2 படிக்கும் மகனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது அந்த மாணவனை இந்த வழக்கில் இருந்து விடுவிப்பதற்காக *ரூ.10,000 லஞ்சம்* கேட்டதாக உமராபாத் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் (SSI) *மதியழகன்* மீது புகார் எழுந்துள்ளது.
பள்ளி செல்லும் சிறுவனிடமே லஞ்சம் கேட்ட சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புகாரை விசாரித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், முதற்கட்ட விசாரணையில் குற்றச்சாட்டு உண்மை என தெரியவந்ததை அடுத்து, SSI மதியழகனை *பணியிடை நீக்கம் (Suspend)* செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இது குறித்து துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
படிக்கும் மாணவனையே காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று லஞ்சம் கேட்ட சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பொதுமக்களிடையே கடும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
--


கருத்துகள்