*சென்னை, அக்டோபர்.15:* சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் தீப்தி அறிவுநிதி வெளியிட்டுள்ள அறிவிப்பு எண் *179/2026 (R.O.C.No.99351-A/2026/C3)* படி, தசரா விடுமுறை *17.10.2026 (சனிக்கிழமை) முதல் 25.10.2026 (ஞாயிற்றுக்கிழமை)* வரை அறிவிக்கப்பட்டுள்ளது.
*விடுமுறை கால நீதிமன்ற அமர்வு - 23.10.2026 வெள்ளிக்கிழமை:*
*சென்னை முதன்மை அமர்வில்:*
1. மாண்புமிகு நீதியரசர் சுந்தர் மோகன்
2. மாண்புமிகு நீதியரசர் V.லட்சுமிநாராயணன்
3. மாண்புமிகு நீதியரசர் N.செந்தில்குமார்
4. மாண்புமிகு நீதியரசர் N.ரமேஷ்
5. மாண்புமிகு நீதியரசர் GK.முத்துக்குமார்
*மதுரை கிளையில்:*
1. மாண்புமிகு நீதியரசர் G.R.சுவாமிநாதன்
2. மாண்புமிகு நீதியரசர் N.திலீப் குமார்
3. மாண்புமிகு நீதியரசர் Dr. P.முருகன்
இவர்கள் அவசர வழக்குகளை விசாரிப்பார்கள்.
*வழக்கு தாக்கல் நாள்: 21.10.2026 புதன்கிழமை*
- நேரம்: காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை ஆன்லைனில் தாக்கல் மட்டும் ஏற்கப்படும்.
- சென்னை மற்றும் மதுரை இரண்டிலும் தற்போதைய தாக்கல் முறையே பின்பற்றப்படும்.
*முக்கிய விதிமுறைகள்:*
- தடை / உறுத்துக்கட்டளை / உத்தரவு கோரும் அவசர வழக்குகள் மட்டுமே எண்ணிடப்பட்டு விசாரணைக்கு எடுக்கப்படும்.
- நிலுவை / பழைய வழக்குகள் விடுமுறை அமர்வில் பட்டியலிடப்படாது. தேவைப்பட்டால் தலைமை நீதிபதி மட்டுமே ஒதுக்குவார்.
- நீதிபதிகள் இல்லத்தில் மனு தாக்கல் செய்யக்கூடாது, மதிய இடைவேளை மனு (Lunch Motion) ஏற்கப்படாது.
- Motion Slip-ல் அவசர தன்மை, வழக்கு காரணம் எழுந்த தேதி, மனு தாக்கல் தேதி ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.
- ஜாமீன் மனுவுடன் விசாரணை நீதிமன்ற ஜாமீன் உத்தரவு இணைக்க வேண்டும்.
*பதிவக பணி நேரம்:*
வழக்கமான நாள் - காலை 10.00 முதல் மாலை 4.45 வரை, நீதிமன்ற அமர்வு நாள் - காலை 10.00 முதல் மாலை 5.45 வரை / நீதிமன்றம் முடியும் வரை.
**தசரா விடுமுறையில் மனு தாக்கல் நடைமுறை - கூடுதல் தகவல்*
*தசரா விடுமுறை 2026 (17.10.2026 முதல் 25.10.2026 வரை) காலத்தில் வழக்கு தாக்கல் செய்வது குறித்து உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் *தீப்தி அறிவுநிதி* கூடுதல் வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளார். *தேதி: 15.10.2026*
*முக்கிய நடைமுறைகள்:*
1. *Motion Slip கட்டாயம்:* விடுமுறை அதிகாரிகள் முன் 'Motion Slip' தாக்கல் செய்ய வேண்டும். அதில் வழக்கின் அவசர தன்மை, வழக்குக்கான காரணம் எப்போது எழுந்தது, மனு/வழக்கு/மேல்முறையீடு எப்போது தாக்கல் செய்யப்பட்டது என்பதை வழக்கறிஞர்கள் குறிப்பிட வேண்டும்.
2. *Online-க்கும் இதே நடைமுறை:* நேரடி தாக்கல் (physical filing)-க்கு பின்பற்றப்படும் நடைமுறை ஆன்லைன் தாக்கல் (online filing)-க்கும் பொருந்தும்.
3. *பதிவகத்தின் பணி நேரம்:*
- வழக்கமான பணி நாட்களில்: காலை *10.00 மணி முதல் மாலை 4.45 மணி* வரை
- நீதிமன்ற அமர்வு நடைபெறும் நாளில்: காலை *10.00 மணி முதல் மாலை 5.45 மணி* வரை அல்லது நீதிமன்ற அமர்வு முடியும் வரை, இதில் எது தாமதமோ அது வரை பதிவகம் செயல்படும்.
இது சென்னை முதன்மை அமர்வு மற்றும் மதுரை கிளை இரண்டுக்கும் பொருந்தும்.






கருத்துகள்