முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காரைக்குடியில் தமிழக மாநில தெய்வீக வாழ்க்கைச் சங்க ஆன்மீக மாநாடு - 2026 கோலாகல தொடக்கம்

 ---

காரைக்குடியில் தமிழக மாநில தெய்வீக வாழ்க்கைச் சங்க ஆன்மீக மாநாடு - 2026

பத்தமடை தந்த பரமபுருஷர் ரிஷிகேஷ் சத்குருதேவர் ஸ்ரீ சுவாமி சிவானந்தரின் நூற்றாண்டு விழா தெய்வீக தசாப்தம் (Divine Decade 2026-2036) தொடக்கத்தை முன்னிட்டு, தமிழக மாநில தெய்வீக வாழ்க்கைச் சங்க ஆன்மீக மாநாடு காரைக்குடி பர்மா காலனி திருச்சி மெயின் ரோடு சிவானந்த மஹாலில் 3 நாட்கள் (அக்டோபர் 23,24,25) கோலாகலமாக நடைபெற்று வருகிறது.




*ஸ்ரீ சுவாமி சிவானந்தர் குறித்து:*

திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையில் 1887-ல் பிறந்தவர் ஸ்ரீ சுவாமி சிவானந்தர். மருத்துவராக சேவை செய்து பின் அனைத்தையும் துறந்து ரிஷிகேஷ் சென்று துறவியானார். 1936-ல் ரிஷிகேஷில் தெய்வீக வாழ்க்கைச் சங்கம் மற்றும் சிவானந்த ஆசிரமத்தை நிறுவி "Serve, Love, Meditate, Realize - Be Good Do Good" என்ற மூல மந்திரத்தை உலகிற்கு அளித்தவர். உலகம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்ட இந்த இயக்கத்தின் நூற்றாண்டு விழா தசாப்த தொடக்கமாக இந்த மாநாடு நடைபெறுகிறது. இவரது சிஷ்யர்களிவ் ஒருழரரிஷிகேஷில் இருந்து மூத்த துறவியர் நேரில் வந்து பங்கேற்று அருளுரை வழங்குகின்றனர்.





*மாநாட்டின் ஏற்பாடு:*

இந்த மாநாட்டின் அனைத்து ஏற்பாடுகளையும் முழுமையாக செய்து நடத்தி வருபவர் சித்தாந்த ரத்தினம், திருமுறைச் செல்வர் *மு.அருணாச்சலம் செட்டியார் அவர்கள், காரைக்குடி.*

*மாநாட்டில் நடைபெற்ற நிகழ்வுகள்:*

தமிழக மாநில தெய்வீக வாழ்க்கைச் சங்க ஆன்மீக மாநாடு - 2026 பேனர் முன், சுவாமி சிவானந்தர் திருவுருவ படத்தின் கீழ் மாணவிகளின் பரதநாட்டிய கலை நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது. மேடையில் "100 Centenary Divine Decade 2026/2036" லோகோ இடம் பெற்றிருந்தது. மேலும் சொற்பொழிவு மேடை, திருமுறை இன்னிசை வயலின், மிருதங்கத்துடன் நடைபெற்றது. ரிஷிகேஷ் துறவியருக்கு இரவு வரவேற்பு மற்றும் குரு வணக்க நிகழ்வும், பேராசிரியரும், அகில இந்திய வானொலி நிலைய ஓய்வு பெற்ற அலுவலருமான சான்றோருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

*அமைச்சர் வருகை:*



நாளை வரவேண்டிய கனிம வளத்துறை அமைச்சர் *திரு.T.K.பிரபு அவர்கள் இன்றே வருகை தந்து* மாநாட்டு மலரை வெளியிட்டு சிறப்பித்தார்.

*3 நாள் முழு நிகழ்ச்சி நிரல்:*


*அக்டோபர் .23:* கொடியேற்றம், 6 நூல்கள் வெளியீடு, செங்கோல் ஆதீனம் அருளுரை, ரெ.ராஜ்குமார் சிறப்புரை, தேவார இன்னிசை, பரதநாட்டியம்.

*அக்டோபர் .24:* ரிஷிகேஷ் சுவாமிகள் அருளுரை, கி.சிவக்குமார் சிறப்புரை, குன்றக்குடி அடிகளார் அருளுரை, மாணவர் கலை நிகழ்ச்சி.


*அக்டோபர் .25:* மாணவர் பரிசளிப்பு, மொழிபெயர்ப்பாளர் கனகராஜனுக்கு "மொழிபெயர்ப்புச் செம்மல்" விருது, கோவிலூர் மடாலயம் அருளுரை, கிளைச் சங்கங்கள் கலந்துரையாடல், நிறைவு விழா.



தினமும் அதிகாலை 5 மணி பிரார்த்தனை, யோகா, நகர சங்கீர்த்தனம், மாலை ஆரத்தி நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் நிகழ்ச்சி நடக்கிறது ஒருங்கிணைப்பாளராக *சித்தாந்த ரத்தினம், திருமுறைச் செல்வர் ஓய்வு பெற்ற நில அளவையர் பி.ஜெகநாதன், காரைக்குடி திருவாவடுதுறை ஆதீனம் பட்டம் பெற்றவர்* அருணாசலம் செட்டியாரின் பிரதிநிதியாகச் செயல்பட்டு வருகிறார்.

---

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

எட்டு லட்சம் மரங்களை நட்டவர், எண்ணற்ற மனிதர்களை வளர்க்கிறார்!

 --- *புண்ணியவாசலில் புண்ணியம் செய்யும் வாசல் - அன்பாலயம்!* *பப்ளிக் ஜஸ்டிஸ் ஆசிரியர் கவிஞர் சீ.க. புலித்தேவன் பாண்டியன் பிறந்தநாள் - பசுமை நாயகன் மரம் ராஜா பங்கேற்ற நெகிழ்ச்சி விழா!* *புதுக்கோட்டை, ஆவுடையார்கோவில் புண்ணியவாசல்:* தமிழ்நாட்டில் ஆயிரம் முதியோர் இல்லங்கள் உண்டு. ஆனால் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் அருகே புண்ணியவாசலில் இயங்கும் *"மரம் அறக்கட்டளையின் அன்பாலயம் - ஆதரவற்ற முதியோர் இல்லம் (Regd No: 26/2019)"* போல ஒரு இல்லத்தை எங்கும் காண முடியாது! * காரணம் என்ன தெரியுமா? * > இங்கே சுத்தம் உண்டு, சுகாதாரம் உண்டு, > அதையும் தாண்டி அன்பு உண்டு, கருணை உண்டு, > கண்ணீரைத் துடைக்கும் பாசம் உண்டு! *இதன் ஆணிவேர் யார் தெரியுமா?* நாம் பார்த்த புகைப்படங்களின் பின்னணியில் இருக்கும் உண்மையான ஹீரோ *திரு. S.R.M. ராஜா - அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் "மரம் ராஜா"* தான்! - புதுக்கோட்டை மண்ணில் மட்டும் *8 லட்சம் மரங்களை* நட்டு, தண்ணீர் ஊற்றி தன் பிள்ளைகள் போல வளர்த்த பசுமை நாயகன்! - அந்த பசுமை நாயகன் தான் *"மரம் அறக்கட்டளை"* நிறுவனர்! - மரம் வளர்த...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...