பொங்கல் 2027 வேட்டி சேலை திட்டம் - ரூ.300 கோடி ஒதுக்கி அரசு அதிரடி! நெசவாளர் கூலி 10% உயர்வு!
*அரசாணை எண்: G.O.(Ms) No.166, Handlooms Dept, நாள்: 15.10.2026*
தமிழக அரசின் கைத்தறி துறை சார்பில் பொங்கல் 2027-க்கான வேட்டி சேலை வழங்கும் திட்டத்திற்கு *ரூ.300.00 கோடி நிதி ஒப்பளிப்பும்* வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
*அரசாணையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:*
*1. கூலி 10% உயர்வு அமல்:*
01.09.2026 அன்று நடைபெற்ற சட்டமன்ற பேரவை கூட்டத் தொடரில், 2027-ஆம் ஆண்டிற்கான கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் மானியக் கோரிக்கையின் போது அமைச்சர் அறிவித்தபடி, தொடக்கக் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு கைத்தறி இரகங்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் அடிப்படை கூலியில் *10 விழுக்காடும்*, அச்சிலைப்படி *10 விழுக்காடும் 01.09.2026 முதல் உயர்த்தி வழங்கி ஆணை* வெளியிடப்பட்டுள்ளது.
*2. புதிய ரக வேட்டி சேலை அறிமுகம்:*
பொதுமக்கள் விரும்பி உடுத்தும் வகையில் புதிய இரக வேட்டி மற்றும் சேலைகள் அறிமுகம் செய்யப்பட்டு, சேலைகள் பாலிகாட் பாவு நூல் X பருத்தி ஊடை நூல் X பாலியஸ்டர் ஜரிகை பார்டர் நூல் கொண்டு, வேட்டிகள் பாலிகாட் பாவு நூல் X பாலிகாட் ஊடை நூல் X பாலியஸ்டர் பார்டர் நூல் கொண்டு உற்பத்தி செய்யவும், மேலும் வேட்டிகளை 2 மீட்டர் நீளத்தில் உற்பத்தி செய்து சலவை செய்யப்பட்டு வேட்டிகளாக பயனாளிகளுக்கு வழங்கவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*3. உற்பத்தி காலம்:*
பொங்கல் 2027-இன்கீழ் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வேட்டி சேலைகள் உற்பத்தி செய்ய *ஆகஸ்ட் 2026 முதல் டிசம்பர் 2026 வரையிலான காலத்திற்கு* உற்பத்தி இலக்கு நிர்ணயம் செய்து வழங்கப்பட்டுள்ளது.
*4. நெசவாளர் கோரிக்கை:*
புதிய இரக வேட்டி சேலைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், புதிய இரக வேட்டி சேலைகளை உற்பத்தி செய்வதில் ஏற்படும் கூடுதல் செலவினங்கள் மற்றும் தற்போதைய விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு நெசவுக் கூலி நிர்ணயக் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு பொங்கல் 2027 இலவச வேட்டி சேலை திட்டத்திற்காக *ரூ.300.00 கோடி நிதி ஒப்பளிப்பு* செய்து ஆணை வெளியிட்டுள்ளது.
*புதிய கூலி உயர்வு பட்டியல் - அரசாணையில் உள்ளபடி:*
இரகம் பொங்கல் 2027-க்கு உயர்த்தி வழங்கப்படும் ஓர் உற்பத்திக்கான புதிய கூலி (Wage/Unit) ரூ.
**பெடல்தறி சேலை** **125.72**
**பெடல்தறி வேட்டி** **49.99**
**விசைத்தறி சேலை** **54.81**
**விசைத்தறி வேட்டி** **23.34**
*அரசாணையில் கையெழுத்து:*
*ஆர். லில்லி, அரசுச் செயலாளர்* - ஆளுநரின் ஆணைப்படி.
*பிரிவு அலுவலர் கையொப்பம் - நாள் 15/10/2026*






கருத்துகள்