வங்கக்கடலில் உருவானது வலுவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி - 26-ஆம் தேதி 'அர்னாப்' புயலாக மாறும் அபாயம்!
"வங்கக்கடலில் உருவான வலுவான காற்றழுத்தத் தாழ்வுபா பகுதி - 26-ஆம் தேதி 'அர்னாப்' புயலாக மாறும்,
தமிழகம், புதுச்சேரியில் 3 நாட்களுக்கு கனமழை - சிவகங்கை உட்பட 25 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை"*தமிழ்நாடு - புதுச்சேரி வானிலை நிலவரம் - 24 Oct 2026
*IMD அதிகாரப்பூர்வ தகவல் படி:*
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை 5.30 மணிக்கு வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இது இன்று தாழ்வு மண்டலமாகவும், நாளை ஆழ்ந்த தாழ்வு மண்டலமாகவும், 26ம் தேதி காலை *அர்னாப் புயலாக (Cyclone Arnab)* மாறும் என்று IMD எச்சரித்துள்ளது.
இந்த அமைப்பு மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 28ம் தேதி காலை ஆந்திர கடற்கரை அருகே மேற்கு மத்திய வங்கக்கடலில் நிலை கொள்ளும்.
*தமிழ்நாடு மாவட்டங்களுக்கான மழை எச்சரிக்கை:*
இன்று நீலகிரியில் அதி கனமழை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கோவை, *புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிக கனமழை* பெய்யும் என்று IMD கணித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, வேலூர், திருச்சிராப்பள்ளி, சேலம், தருமபுரி, *மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி* மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலியில் மிதமான மழை பெய்யும்.
*ஆதாரம்:* IMD Special Bulletin - 24 Oct 2026,

கருத்துகள்