*தமிழ்நாட்டில் 3 IAS அதிகாரிகள் அதிரடி மாற்றம்!*
தமிழ்நாடு அரசு இன்று (06.10.2026) முக்கிய IAS அதிகாரிகள் பணியிட மாற்றம் குறித்த அரசாணை *G.O.(Rt) No.3596* வெளியிட்டது.
*தலைமைச் செயலாளர் M. சாய்குமார்* பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
*1) எல்காட் MD கார்த்திகேயன் மாற்றம்:*
எல்காட் நிர்வாக இயக்குநராக இருந்த *Dr. K.P. கார்த்திகேயன் IAS* அவர்கள், *பேரூராட்சிகள் இயக்குநராக* நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்காக பேரூராட்சிகள் இயக்குநர் பதவி Senior Scale IAS அந்தஸ்தில் 1 ஆண்டுக்கு தற்காலிகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
*2) பிரியங்கா IAS-க்கு புதிய பொறுப்பு:*
பேரூராட்சிகள் இயக்குநராக இருந்த *Tmt. B. பிரியங்கா IAS* அவர்கள், *இ-ஆளுமை (e-Governance) இயக்குநராகவும், TNeGA-வின் தலைமை செயல் அதிகாரியாகவும்* நியமிக்கப்பட்டுள்ளார்.
*3) விஷ்ணு சந்திரன் IAS மீண்டும் எல்காட் MD:*
மத்திய அரசு பணியில் அயல்பணியில் இருந்து திரும்பிய *Thiru B. விஷ்ணு சந்திரன் IAS* அவர்கள், *எல்காட் நிர்வாக இயக்குநராக* நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த பணியிட மாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வரும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ---



கருத்துகள்