ரேஷன் பருப்பில் ரூ.39 கோடி ஊழல்! 27 நிமிடத்தில் நடந்த சிண்டிகேட் மோசடி - அறப்போர் அம்பலம்! DVAC நடவடிக்கை வருமா?
தமிழ்நாடு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் கனடிய மஞ்சள் பருப்பு கொள்முதலில் ரூ.39 கோடி ஊழல் நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளது.
2 ஆண்டுகளாகியும் இதுவரை FIR கூட பதிவு செய்யப்படவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
*நடந்தது என்ன?*
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC) 27.05.2024 அன்று 20,000 டன் கனடிய மஞ்சள் பருப்பு கொள்முதலுக்கு டெண்டர் (Contract No: BS6/018078/2024) கோரியது.
அறப்போர் இயக்கம் கண்டுபிடித்த மோசடி:
1. *சிண்டிகேட்:* ஒரே நிறுவனங்கள் Kamatchi & Co, CP Foods, Vasumathy Traders ஆகிய 3 நிறுவனங்கள் வெறும் 27 நிமிட இடைவெளியில் ஒரே மாதிரியாக ரூ.160/கிலோ என டெண்டர் போட்டன.
2. *விலை மோசடி:* அப்போது சந்தை விலை கிலோ ரூ.120 தான். கனடாவில் இறக்குமதி விலை டன் $1140 (ரூ.95,000). ஆனால் TNCSC டன் ரூ.1,60,000 என வாங்க முடிவு செய்தது. இதன் மூலம் கிலோவுக்கு ரூ.30 வீதம் 13,000 டன்னுக்கு ரூ.39 கோடி அரசுக்கு நஷ்டம்.
3. *அதிகாரிகள் கூட்டு:* டெண்டர் குழு GM Desiy Kumar, Sugumar, Kannabiran, Senthil, Elangovan மற்றும் Sub-Committee-யில் இருந்த IAS அதிகாரிகள் அண்ணாதுரை, பிரதிக் தயாள், ஹர் சகாய் மீனா ஆகியோர் துணையுடன் இந்த மோசடி நடந்ததாக புகார் கூறுகிறது.
*2 வருடமாக கிடப்பில் புகார்:*
19.06.2024 அன்று முதல்வர் மற்றும் DVAC இயக்குனருக்கு அறப்போர் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் 6 பக்க ஆதாரங்களுடன் புகார் அளித்தார். ஆனால் இதுவரை எந்த FIR-ம் இல்லை.
அறப்போர் இயக்கத்தின் சமீபத்திய அறிக்கைபடி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் கொள்முதலில் மட்டும் ரூ.2028 கோடி ஊழல் புகார்கள் FIR இல்லாமல் கிடப்பில் உள்ளன.
*PUBLIC JUSTICE கேள்வி:*
மக்களின் வரிப்பணம் ரூ.39 கோடி என்ன ஆனது? DVAC உடனடியாக FIR பதிவு செய்து விசாரிக்குமா? இந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டதா?
இது தொடர்பாக PUBLIC JUSTICE சார்பில் RTI மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் பதில் வெளியிடப்படும்.
*#TNCSCScam #Rs39CroreScam #Arappor #PUBLICJUSTICE #Tenkasi*
---







கருத்துகள்