கனிமவளக் கொள்கை பின்னணியில் ஜல்லி தடை நீட்டிப்பு - தமிழக அரசின் அதிரடி - 3 மாதத்திற்கு தடை*
தமிழகத்தின் *கனிமவள மாநிலக் கொள்கை* மற்றும் *விதிகள் 2011*-ன் அடிப்படையில், வெளி மாநிலங்களுக்கு ஜல்லி கடத்துவதற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
*1. என்ன தடை?*
புவியியல் மற்றும் சுரங்க இயக்குநர் டாக்டர் T.பிரபுசங்கர் IAS அவர்களின் உத்தரவு (Rc.No.4104/MM2/2026, Dt: 26.10.2026) படி,
- 27.07.2026 முதல் 26.10.2026 வரை இருந்த தற்காலிக தடை, இப்போது *27.10.2026 முதல் மேலும் 3 மாதத்திற்கு நீட்டிப்பு.*
- தடை: *Rough Stone மற்றும் Aggregates (ஜல்லி, கிராவல், எம்-சாண்ட்)*-ஐ புதுச்சேரி, காரைக்கால் தவிர மற்ற வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லக் கூடாது.
- மீறினால் கடும் சட்ட நடவடிக்கை.
*2. இதற்கு கனிமவள கொள்கை பின்னணி என்ன?*
- *சட்டம்:* The Tamil Nadu Prevention of Illegal Mining, Transportation and Storage of Minerals and Minerals Dealers Rules, 2011 - விதி 3(A) படி இயக்குநருக்கு அதிகாரம் உள்ளது. தமிழக அரசின் http://G.O.Ms.No.15/ Natural Resources (MMD.1) Dept, Dt: 09.07.2026-ன் படி இந்த நடவடிக்கை.
- *கொள்கை நோக்கம்:*
a) தமிழகத்திற்குள் கட்டுமானப் பணிகளுக்கு ஜல்லி, எம்-சாண்ட் தடையின்றி கிடைக்க வேண்டும் - விலைவாசி உயராமல் தடுக்க.
b) சுற்றுச்சூழல், சூழலியல் பாதுகாப்பு.
c) சட்டவிரோத சுரங்கம், கனிம கடத்தலை தடுப்பது.
d) மாநில வருவாய் பாதுகாப்பு.
- *தமிழ்நாடு மாநில கனிம கொள்கை:* தமிழகத்தில் கிடைக்கும் கனிமங்கள் முதலில் தமிழக தேவைக்கு பயன்பட வேண்டும், உபரி இருந்தால் மட்டுமே வெளி மாநிலத்திற்கு என்பது தான் கொள்கை. தற்போது கட்டுமான தேவை அதிகம் இருப்பதால் தடை.
*3. யார் கண்காணிப்பு?*
எல்லை மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.க்கள் தீவிர கண்காணிப்பு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கடும் அமலாக்க நடவடிக்கை எடுக்க உத்தரவு.




கருத்துகள்