*கூட்டுறவுத்துறை புதிய உத்தரவு!*
*வாட்ஸ்அப் புகார்களுக்கு 4 வார கால அட்டவணையில் தீர்வு - கூட்டுறவு பதிவாளர் G லதா உத்தரவு*
*2. பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல்:*
சங்கங்களுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்கள், விவசாயிகள் மற்றும் உறுப்பினர்களிடம் இந்த வாட்ஸ்அப் குறைதீர்வு வசதி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, குறைகளை நேரடியாக தெரிவிக்க வழிகாட்ட வேண்டும்.
*3. பெறப்படும் மனுக்கள் மீதான உடனடி நடவடிக்கை மற்றும் கால அட்டவணை:*
இந்த அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண் வாயிலாகப் பெறப்படும் புகார்கள் e-Office தளத்தில் பதியப்பட்டு சம்பந்தப்பட்ட மண்டலங்களுக்கு அல்லது தொடர்புடைய பிரிவுகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இம்மனுக்கள் மீது எவ்வித தேக்கமுமின்றி, கீழ்கண்ட கால அட்டவணையின்படி தீர்வு காணப்பட வேண்டும்:
*• முதல் வாரம்:* வட்டார (Block) அளவில் கூட்டுறவு சார் பதிவாளர் / கள அலுவலர் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை என்று கோரிக்கை மனுக்களைப் பெற்று அதனைத் தகுதியின் அடிப்படையில் தீர்வு செய்ய வேண்டும்.
*• இரண்டாம் வாரம்:* கூட்டுறவு சார் பதிவாளர் / கள அலுவலர் அளவில் தீர்வு செய்ய இயலாத கோரிக்கை மனுக்களையும், துணைப்பதிவாளர்களால் நேரடியாகப் பெறப்படும் கோரிக்கை மனுக்களையும், மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை என்று துணைப்பதிவாளர்கள் தகுதியின் அடிப்படையில் தீர்வு செய்ய வேண்டும்.
*• மூன்றாம் வாரம்:* மேற்கண்ட நிலைகளில் தீர்வு செய்ய இயலாத கோரிக்கை மனுக்களையும், மண்டல இணைப்பதிவாளர்களால் நேரடியாகப் பெறப்படும் கோரிக்கை மனுக்களையும் மண்டல இணைப்பதிவாளர்கள் மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமை என்று தகுதியின் அடிப்படையில் தீர்வு செய்ய வேண்டும்.
*• நான்காம் வாரம்:* இது குறித்து மாவட்டத்தில் 4வது வாரத்தில் மாமண்டல அலுவலர் (Zonal Officer) ஆய்வு செய்ய வேண்டும்.
*• அடுத்த மாத முதல் வாரம்:* அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் பதிவாளர் தலைமையில் மண்டல அலுவலர்கள் மற்றும் தலைமை அலுவலக கூடுதல் பதிவாளர்களுடன் கூட்டு ஆய்வுக் கூட்டம் நடைபெறும்
*உத்தரவிட்டவர்:* LATHA G, REGISTRAR OF COOPERATIVE SOCIETIES



கருத்துகள்