பெங்களூருவில் HCL-ல் வேலை பார்க்கும் மதுமித்ரன், சொந்த ஊர் மதுரை திருநகர். தன்னோட உழைப்பில், திருப்பரங்குன்றம் அருகே வேடர்புளியங்குளத்தில் 4800 சதுரடி நிலம் வாங்கினார்.
பத்திரம் பதிந்தார், பட்டாவும் வந்தது. ஆனா பட்டாவில் மனைவி சாதனா பெயர் மட்டும் இருக்கு, தன் பெயர் இல்லை.
*இங்கே தான் ஆட்டம் ஆரம்பிக்குது.*
30.07.2026-ல் ஆன்லைனில் பட்டா பெயர் மாற்றம் கேட்டு விண்ணப்பித்தார். SMS வந்தது "மனு ஏற்கப்பட்டது". 11 நாள் கழித்து VAO-விடம் இருந்து துணை வட்டாட்சியருக்கு போயிருக்கு என்று SMS. சந்தோஷப்பட்டார்.
ஆனா 13.08.2026-ல் திடீர்னு ஒரு SMS - "உங்க மனு நிராகரிக்கப்பட்டது, மூலப்பத்திரம் இணைக்கவில்லை"னு.
அதிர்ச்சியான மதுமித்ரன், உடனே வேடர்புளியங்குளம் VAO யாசின் பானு-வுக்கு போன் போட்டார் - *90430 57706*. அவங்க சொன்னாங்க "வாட்ஸ்அப்ல டாகுமெண்ட் அனுப்புங்க, பார்த்துட்டு கூப்பிடுறேன்"னு. அனுப்பினார். 5 நாள் ஆச்சு, போன் இல்ல.
17.08-ல் மறுபடியும் கூப்பிட்டார். "புதுசா ஒருமுறை அப்ளை பண்ணுங்க"னு சொல்லிட்டாங்க. அப்ளை பண்ண போனா, "ஏற்கனவே ஒரு மனு நிலுவையில் உள்ளது"னு காட்டுது. மறுபடியும் VAO-க்கு போன்.
அலைக்கழிப்பு தாங்காம, 31.08-ல் பெங்களூருவில் இருந்து மதுரைக்கு வந்தார்.
*01.09.2026 மதியம் 12:10 - கிளைமாக்ஸ்:*
திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் VAO-வை சந்தித்தார். VAO சொன்னாங்க, "இங்க இருக்குற இ-சேவை மையத்துக்கு போங்க, எனக்கு போன் போடுங்க"னு.
அவரும் போய் போன் போட்டார். VAO இ-சேவை ஆபரேட்டரிடம் பேசினார். உடனே புது மனு ஏற்கப்பட்டது.
"முடிஞ்சது"னு நினைச்சு VAO இருக்கையை தேடி போனா, அங்கே இல்ல. போன் போட்டா, "பார்க்கிங்ல இருக்கேன் வாங்க"னு சொன்னாங்க.
பார்க்கிங்கில் வைத்து தான் அந்த வார்த்தை வந்தது.
> *"நான் தான் பட்டாவுக்கு பரிந்துரை செய்யணும். அதுக்கு ரூ.5,000 தரணும். இது அரசு கட்டணம் இல்ல, என் செலவுக்கு"*
மதுமித்ரன் "பணம் இல்லாம பண்ணுங்க"னு கெஞ்சினார். VAO கோபமா சொன்னாங்களாம் - *"பணம் இல்லாம இங்க ஒரு வேலையும் நடக்காது. நீங்க அலைஞ்சுகிட்டே தான் இருக்கணும். சரி, ரூ.1000 குறைச்சுக்கோங்க, ரூ.4000 கொடுங்க"*
அதுவும் *03.09.2026 மதியம் 3 மணிக்கு மேல தாலுகா ஆபிஸ்ல வச்சு* கொடுக்க சொன்னாங்க.
*மக்கள் திருப்பிய அடி:*
மனம் உடைந்த மதுமித்ரன், தமிழக அரசின் லஞ்ச ஒழிப்பு வாட்ஸ்அப் எண் *94981 80936*-க்கு புகார் அனுப்பினார். மதுரை DVAC இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரியா உடனே விசாரித்தார்.
புகார்தாரர் உண்மையானவர், VAO மீது ஏற்கனவே மோசமான ரிப்போர்ட் இருப்பதை உறுதி செய்து, SP அனுமதியுடன் *Cr No 12/2026 u/s 7(a) PC Act*-ல் வழக்கு பதிவு செய்து பொறி வைத்தனர்.
ரூ.4000 ரசாயனம் தடவிய பணத்துடன் மதுமித்ரன் கொடுக்க, கையும் களவுமாக சிக்கினார் வேடர்புளியங்குளம் VAO யாசின் பானு.
*மக்களுக்கு ஒரு பாடம்:*
1. பட்டா பெயர் மாற்றம் முழுக்க முழுக்க ஆன்லைன், அரசு கட்டணம் ரூ.60 தான். தனியாக VAO-க்கு பணம் தர வேண்டியதில்லை.
2. யாராவது பணம் கேட்டால் உடனே *1064* அல்லது வாட்ஸ்அப் *94981 80936*-க்கு புகார் கொடுங்க.
3. ஒவ்வொரு முறையும் அலைக்கழிப்பு, "பார்க்கிங்ல வா", "போனை ஆபரேட்டரிடம் கொடு" - இதெல்லாம் லஞ்சம் கேட்கும் டெக்னிக்.
இது ஒரு மதுமித்ரனின் கதை இல்ல சார், நம்ம மக்கள் எல்லோருடைய கதையும் கூட.








கருத்துகள்