6 சென்ட் நிலத்துக்காக 6 மாதம் அலைந்த விவசாயி - ரூ.6,000-த்தில் தொடங்கி ரூ.4,000-த்தில் முடிந்த பேரம்
---*சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா சேக்காடிபட்டியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (46). 10-ம் வகுப்பு வரை படித்தவர். சொந்தமாக தொழில் செய்து வருகிறார்.
இவரது தந்தை, தனது சேக்காடிபட்டி சர்வே எண்.279-ல் உள்ள 6 சென்ட் நிலத்தை (பட்டா எண்.1152, 1316, 918) மகனுக்கு உயில் எழுதி, 02.07.2024 அன்று பத்திரமாக பதிவு செய்துவிட்டு, 28.06.2026-ல் இறந்து விட்டார்.
தந்தை சொத்தை தன் பெயருக்கு மாற்ற, மகன் ராமமூர்த்தி 19.09.2026 அன்று ஆன்லைனில் பட்டா பெயர் மாற்றம் கோரி விண்ணப்பித்தார்.
*முதல் அதிர்ச்சி - 28.09.2026 காலை 10.30 மணி:*
விஏஓ அலுவலகத்தில் விஏஓ சரவணனை பார்க்க போனார். அங்கே "உன்னோட விண்ணப்பம் இன்னைக்கு தான் ரத்து செய்யப்பட்டுள்ளது, மீண்டும் விண்ணப்பி" என்று சொல்லி, "ஏற்கனவே எவ்வளவு சொன்னேன்?" என்றார்.
உடனே அங்கிருந்த மாதவன் என்பவர், "ரூ.6,000/- கேட்டோம்" என்றார். சரவணன் "ரூ.5,000/- கொடு" என்றார். ராமமூர்த்தி "சார் இப்போ தர முடியாது" என்றதும், "சரி ரூ.4,000/- கொடுத்துவிடு, ஏற்பாடு செய்துவிடலாம்" என்று பேரம் படிந்தது.
*இரண்டாவது அதிர்ச்சி - 09.10.2026 பகல் 12.40 மணி:*
விஏஓ சரவணன் தனது எண் 9940718089-ல் இருந்து, ராமமூர்த்தியின் எண் 8778444394-க்கு போன் செய்து "கேட்ட பணம் ரூ.4,000/- ரெடியா?" என்றார். "பணம் கொடுத்தால் தான் பட்டா, இல்லை என்றால் பட்டா கிடைக்காது" என்று மிரட்டினார்.
*பொறிவைப்பு - 12.10.2026:*
லஞ்சம் கொடுக்க விரும்பாத ராமமூர்த்தி காலை 6 மணிக்கு சேலம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுத்தார். SP அனுமதியுடன் காலை 7 மணிக்கு FIR No: 15/AC/2026 பதிவு செய்யப்பட்டது. போலீசார் கொடுத்த ரசாயனம் தடவிய ரூ.4,000-த்தை வாங்கிய போது, சரவணன் சொன்னபடி மாதவன் வாங்க, மறைந்திருந்த DVAC போலீசார் இருவரையும் கையும் களவுமாக கைது செய்தனர்.
*பப்ளிக் ஜஸ்டிஸ் பார்வை (அதுவே பொதுநீதி):*
இது ஒரு VAO-வின் ஊழல் மட்டுமல்ல, ஒரு சிஸ்டத்தின் ஊழல். ஆன்லைனில் விண்ணப்பித்தால் என்ன? விண்ணப்பத்தை ரத்து செய்யும் அதிகாரம் இவர்களிடம் தான் உள்ளது. "1316 உன் பெயரில் உள்ளது, 1152, 918-க்கு மட்டும் விண்ணப்பி" என்று சொல்லும் போதே, இவர் கோப்புகளை கையில் வைத்திருக்கிறார் என்பது தெரிகிறது. ஒரு தந்தையின் உயில் சொத்துக்கு கூட லஞ்சம் கேட்கும் நிலை இருக்கும் வரை, அரசு கொண்டு வரும் எந்த டிஜிட்டல் திட்டமும் மக்களை சேராது.*- ---






கருத்துகள்