*உள்ளாட்சியில் மக்கள் பிரதிநிதி இல்லாமல் அரசு அலுவலர் (தனி அலுவலர்) நிர்வாகம் குறித்த 9 பக்க சுற்றறிக்கையின் முழு விபரம்
மக்களுக்கான முழு விளக்கம்*
*பொருள்: உள்ளாட்சிக்கு தேர்தல் இல்லை - அரசு அலுவலர் ஆட்சி - கமிஷனர் 9 பக்க சுற்றறிக்கை என்ன சொல்கிறது? மக்கள் பயன் என்ன?*
*பின்னணி என்ன ?*
தமிழகத்தில் கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி ஆகியவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்ததால், தற்போது அரசு அலுவலர்கள் *தனி அலுவலர்களாக (Special Officers)* நியமிக்கப்பட்டு நிர்வாகம் செய்கிறார்கள். இந்த நிலையில் ஊரக வளர்ச்சி இயக்கக கமிஷனர் *V.அமுதவல்லி* அவர்கள் நாள் *22.10.2026* அன்று 9 பக்க சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார். இது அரசாணை இல்லை, *வழிகாட்டு சுற்றறிக்கை கடிதம்.*
*இதில் குறிப்பிடப்பட்டுள்ள அரசாணைகள்:*
- அரசாணை 117, நாள் 28.10.2022 - TNPASS திட்டம்
- அரசாணை 106, நாள் 22.06.2024 - பணிகள் வழிகாட்டு நெறிமுறை
- அரசாணை 237 & 238, நாள் 22.10.2025 - குடிநீர், தெருவிளக்கு, சுகாதாரம்
*முழு 9 பக்க சுற்றறிக்கையின் விபரம் - விடுபடாமல்:*
*பகுதி - அ: கிராம ஊராட்சி தனி அலுவலரின் 34 கடமைகள்*
*i. ஊராட்சி கூட்டங்கள் (பாயிண்ட் 1-3)*
*1.* மன்றப்பொருள் அங்கீகாரத்துடன் தான் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மன்றப்பொருள் பொதுமக்கள் கோரிக்கை அடிப்படையில் இருக்க வேண்டும். 2 கூட்டங்களுக்கு இடைப்பட்ட காலம் *60 நாட்களுக்கு மிகாமல்* இருக்க வேண்டும். அரசு அறிவிக்கும் நாட்களில் கிராம சபை கூட்டம் கட்டாயம் நடத்த வேண்டும்.
*2.* மாதாந்திர வரவு-செலவு அறிக்கை, கணக்குகள், தணிக்கை அறிக்கை, சமூக தணிக்கை அறிக்கை, பணிகளின் முன்னேற்ற அறிக்கை ஆகியவை தனி அலுவலர் ஒப்புதலுடன் தான் வழங்க வேண்டும்.
*3.* இயற்கை சீற்றம், பொது சுகாதார பாதிப்பு என்றால் காலதாமதமின்றி பணி மேற்கொள்ள வேண்டும். *மக்கள் பயன்:* இனி மக்கள் பிரதிநிதி இல்லை என்றாலும் கூட்டம் நடக்க வேண்டும், கேள்வி கேட்கலாம்.
*ii. வங்கி கணக்கு & பதிவேடு (பாயிண்ட் 4-11)*
*4.* வரி வசூல் அனைத்தையும் *https://vptax.tnrd.tn.gov.in/* இணையதளத்தில் தினமும் கண்காணிக்க வேண்டும்.
*5.* வருவாய் இனங்களை *இணையவழியாக மட்டும்* வசூல் செய்ய வேண்டும். பதிவேடுகளில் தனி அலுவலர் ஒப்புதல் பெற வேண்டும்.
*6.* மொத்தம் *11 வகையான வங்கி கணக்குகள்* உள்ளன. அதில் கணக்கு எண் 1,2,7,8 ஆகியவை TNPASS மூலம் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. ஆதார் OTP மூலம் நிதி பரிவர்த்தனை நடக்கிறது. VPTAX, TNPASS இணையதளத்தை வைத்து தான் ஆய்வு செய்ய வேண்டும்.
*7.* ஊராட்சி பணியாளர் சம்பளம், பராமரிப்பு பணிக்கான பணத்தை TNPASS-ல் ஊராட்சி செயலர் தொடங்க வேண்டும். *ரூ.5 லட்சத்துக்கு மேல்* பணம் கொடுக்கும்போது BDO (கி.ஊ) அனுமதி பெற்று TNPASS-ல் பதிவேற்ற வேண்டும். தனி அலுவலர் / மண்டல துணை BDO இறுதி ஒப்புதல் வழங்க வேண்டும்.
*8.* கட்டிட வரைபட அனுமதி, மனைப்பிரிவு அனுமதி நிலுவை மனுக்களை கள ஆய்வு செய்து, தகுதியானதற்கு *15 நாட்களுக்குள் ONLINE-ல் அனுமதி* வழங்க வேண்டும். கேட்பு தொகை கட்டியவுடன் உடனடி அனுமதி.
*9.* சுயசான்று அடிப்படையில் கட்டிட அனுமதியில் ஒரு சதுர அடிக்கு *ரூ.22 கட்டுமான தொழிலாளர் நல நிதி* பிடிக்க வேண்டும். இதை உடனே *தமிழ்நாடு MLWF Board* கணக்கில் செலுத்துவதை கண்காணிக்க வேண்டும்.
*10.* கட்டிட அனுமதி கட்டண விபரங்களை *ONLINE-PPA.TN.GOV.IN* இணையதளத்தில் ஊராட்சி செயலரின் User/Password மூலம் அறிந்து அறிக்கை அடிப்படையில் தொகை பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
*11.* தொழிலாளர் நல நிதியை வேறு பணிக்கு செலவு செய்தாலோ, உரிய தலைப்பில் செலுத்தாவிட்டாலோ *மண்டல துணை BDO மற்றும் ஊராட்சி செயலாளர் மீது மாவட்ட நிர்வாகம் மூலம் ஒழுங்கு நடவடிக்கை.* *மக்கள் பயன்:* கட்டிட அனுமதி கட்டணத்தில் ஊழல் நடக்காமல் தடுக்கும் முக்கிய பாயிண்ட்.
*iii. பணிகள் மேற்கொள்ளுதல் (12-14)*
*12.* அரசாணை 106, நாள் 22.06.2024 வழிகாட்டு நெறிமுறைப்படி பணிகள் செய்ய வேண்டும். ரூ.5 லட்சத்துக்கு மேல் பணிகளுக்கு *மாவட்ட ஆட்சியரிடம்* நிர்வாக அனுமதி பெற வேண்டும்.
*13.* தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, பிரிவு *110,111,128,129,134,136,143,143A,143B,144*-ன்படி அனைத்து கடமைகளையும் செய்ய வேண்டும்.
*14.* ஆண்டு திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு மட்டும் பணி செய்ய வேண்டும்.
*iv. வருவாய் (15)*
*15.* வீட்டு வரி, தொழில் வரி, விளம்பர வரி, குடிநீர் கட்டணம் உட்பட அனைத்திலும் *100% வசூல்* உறுதி செய்ய வேண்டும்.
*v. பராமரிப்பு (16-22)*
*16.* கட்டடம், சந்தை, சமுதாய கூடம், நிலங்களை பாதுகாத்து வருவாய் பெருக்க வேண்டும்.
*17.* அனைத்து குடியிருப்புகளிலும் தடையின்றி குடிநீர் வழங்குவதை கண்காணிக்க வேண்டும். மோட்டார், குழாய், கைபம்புகளை *வாரம் 1 முறை ஆய்வு* செய்ய வேண்டும்.
*18.* மேல்நிலை, தரைமட்ட தொட்டிகளை *15 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம்*, குளோரினேஷன் செய்ய வேண்டும். *Bleaching Powder, Chlorine மாத்திரை* இருப்பு வைக்க வேண்டும்.
*19.* தெருவிளக்குகள் முழுமையாக எரிவதை உறுதி செய்ய வேண்டும். குழல் விளக்குகளை *LED ஆக மாற்ற* வேண்டும். இரவில் முகாம் சென்று *100%* எரிவதை உறுதி செய்ய வேண்டும்.
*20.* மின் கட்டணம், குடிநீர் கட்டணத்தை கணக்கு எண் II-ல் இருந்து நிலுவையின்றி TNPASS மூலம் செலுத்த வேண்டும்.
*21.* கணக்கு II-ல் உள்ள உபரி நிதியை வழிகாட்டு நெறிமுறைப்படி கணக்கு I-க்கு மாற்றி பணி செய்ய வேண்டும்.
*22.* அரசாணை 238, நாள் 22.10.2025-ன்படி குடிநீர், தெருவிளக்கு பராமரிப்பு.
*vi. சுகாதாரம் (23-28)*
*23.* துப்புரவு பணியாளர், தூய்மை காவலரை முறையாக பயன்படுத்த வேண்டும்.
*24.* குப்பையை *மக்கும், மக்காத குப்பை* என பிரித்து தினசரி அகற்ற வேண்டும்.
*25.* Bleaching, Phenyl, Pyrethrum, Temephos இருப்பு வைக்க வேண்டும்.
*26.* டெங்கு போன்ற நோய் அறிகுறி தென்பட்டால் சுகாதார துறையுடன் இணைந்து துப்புரவு பணி.
*27.* அனைத்து வீடுகளிலும் கழிவறை கட்டி *ODF ஊராட்சியாக* மாற்ற வேண்டும்.
*28.* அரசாணை 237, நாள் 22.10.2025-ன்படி சுகாதார பராமரிப்பு.
*vii. அரசு திட்டங்கள் (29-34)*
*29-31.* VB-G RAM (G) உட்பட மத்திய, மாநில திட்டங்களை உரிய காலத்தில் முடிக்க வேண்டும். தனி நபர் பயனாளி திட்டங்களுக்கு சிறப்பு கவனம். நிதியை உரிய காலத்தில் விடுவிக்க வேண்டும்.
*32.* IT, GST, LWF பிடித்தத்தை கணக்கு XI-க்கு மாற்றி உரிய தலைப்பில் செலுத்தி Returns தாக்கல் செய்ய வேண்டும்.
*33.* அனைத்து பணிகளையும் *TNRD இணையதளத்தில்* பதிவேற்றி, கள ஆய்வுக்கு பின் நிதி விடுவிக்க வேண்டும்.
*34.* மாநில நிதிக்குழு மானியம் வந்த *3 நாட்களுக்குள் TNPASS மூலம் ஊழியர்களுக்கு சம்பளம்* வழங்க வேண்டும்.
*பகுதி - ஆ: வட்டார ஊராட்சி தனி அலுவலர்*
- 60 நாள் கூட்ட விதி, மன்றப்பொருள் அங்கீகாரம், பொதுமக்கள் கோரிக்கை.
- மாதாந்திர வரவு-செலவு, தணிக்கை அறிக்கை தனி அலுவலர் ஒப்புதலுடன்.
- புதிய மூலதன பணிகளுக்கு நிர்வாக, தொழில்நுட்ப அனுமதி பெற்ற பின்னரே.
- சட்டம் 1994 பிரிவு 112,113,114,116,117,118,126,133,140,141,145,160,186-ன்படி செயல்பட வேண்டும்.
*பகுதி - இ: மாவட்ட ஊராட்சி தனி அலுவலர் (இதுதான் 9-வது பக்கத்தின் முக்கிய பகுதி )*
*1.* மன்றப்பொருள் அங்கீகாரத்துடன் தீர்மானம், பொதுமக்கள் கோரிக்கை அடிப்படையில், 60 நாட்களுக்கு மிகாமல் கூட்டம்.
*2.* வரவு-செலவு, தணிக்கை, பணி முன்னேற்ற அறிக்கை தனி அலுவலர் ஒப்புதலுடன்.
*3.* புதிய மூலதன பணிகளுக்கு நிர்வாக, தொழில்நுட்ப அனுமதி பெற்ற பின்னரே பணி.
*4.* சட்டம் 1994 பிரிவு *163,164,165,166*-ன்படி செயல்படுதல்.
*5.* நிதி ஒதுக்கீட்டின் கீழ் பணிகள் உரிய முறையில், உரிய காலத்தில் நிறைவேற்ற கண்காணிப்பு.
*6.* பொது சொத்துக்களான கட்டடங்கள், நிலங்களை பராமரித்து வருவாய் பெருக்குதல்.
*பகுதி - ஈ: பொதுவான அறிவுரைகள் + BDO + AD Audit*
*1.* நீதிமன்ற வழக்குகளை குறைபாடின்றி முடிக்க வேண்டும்.
*2.* மத்திய, மாநில திட்ட நிதியை உரிய காலத்தில் விடுவிப்பதை கண்காணிக்க வேண்டும்.
*3. BDO கடமை:* தனி அலுவலர்கள், மண்டல துணை BDO-க்களை ஒருங்கிணைத்து *மாதம் 2 முறை* வரவு-செலவு ஆய்வு கூட்டம், அனைத்து ஊராட்சிகளையும் *மாதம் 1 முறை* நேரடி கள ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை.
*4. உதவி இயக்குநர் (தணிக்கை):* அதிக செலவு செய்யும் ஊராட்சிகளை *உடனடி கள ஆய்வு* செய்து ஆட்சியருக்கு அறிக்கை.
*மக்கள் பயன் என்ன ?*
மக்கள் பிரதிநிதி இல்லாத இந்த நேரத்தில், உங்கள் ஊராட்சியில் இந்த 34+6 பாயிண்ட் பின்பற்றப்படுகிறதா என்று இந்த 9 பக்க சுற்றறிக்கையை வைத்து நீங்கள் தனி அலுவலரிடம் கேள்வி கேட்கலாம். இது தான் மக்கள் பயன்.










கருத்துகள்