புண்ணிய பூமியான இராமேஸ்வரத்திற்கு விமானம் மூலம் செல்லும் நீண்ட நாள் கனவு நனவாகும் தருணம் நெருங்கி வருகிறது சார்.
ராமநாதபுரம் மாவட்டம் *மாணிக்கனேரி*யில் சுமார் *600 ஏக்கர்* பரப்பளவில் புதிய விமான நிலையம் அமைக்க, மத்திய அரசின் முதல்கட்ட அனுமதியான *'Site Clearance' (இட அனுமதி)* கோரி தமிழ்நாடு அரசு விண்ணப்பிக்க உள்ளது
இதற்கான பணியை தமிழக அரசின் *தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO)* மேற்கொள்ள உள்ளது. TIDCO மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் விண்ணப்பிக்க முடிவு செய்துள்ளது
இராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவில், தனுஷ்கோடி, அரிச்சல்முனை, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடம் ஆகியவற்றை காண லட்சக்கணக்கான பயணிகள் வருகின்றனர். ஆனால் தற்போது சாலை மற்றும் ரயில் மூலம் மட்டுமே செல்ல முடியும் என்பதால், சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக இந்த திட்டம் 2025-ல் அறிவிக்கப்பட்டது
இடம் எப்படி தேர்வு செய்யப்பட்டது?
ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 இடங்கள் ஆராயப்பட்டன:
*பழங்குளம், தேவிப்பட்டினம், கும்பரம், களரி, மாணிக்கனேரி*
இதில் கும்பரம் மற்றும் மாணிக்கனேரி இரண்டும் இறுதிப்பட்டியலுக்கு வந்தன. தமிழக அரசின் கோரிக்கையின் பேரில் *இந்திய விமான நிலைய ஆணையம் (AAI)* குழு நேரில் ஆய்வு செய்து, இந்தாண்டு *ஜனவரியில் மாணிக்கனேரியை இறுதி செய்தது*
மாணிக்கனேரி - ராமநாதபுரத்தில் இருந்து 17 கி.மீ, ராமேஸ்வரத்தில் இருந்து 70 கி.மீ தொலைவில் உள்ளது.
சென்னையின் இரண்டாவது விமான நிலையம் பரந்தூரில் அமைக்கும் திட்டத்தை தற்போதைய அரசு சமீபத்தில் ரத்து செய்த நிலையில், ராமேஸ்வரம் விமான நிலைய திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

கருத்துகள்