தமிழ்நாட்டில் விமான போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், விமான எரிபொருளுக்கான (ATF) மதிப்பு கூட்டு வரியை (VAT) தமிழ்நாடு அரசு அதிரடியாக குறைத்து உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில்,
*சென்னை விமான நிலையத்தில்* எரிபொருள் நிரப்பும் விமான நிறுவனங்களுக்கு இதுவரை 29 சதவீதமாக இருந்த வாட் வரி, *16 சதவீதமாக* குறைக்கப்பட்டுள்ளது. இது 13 சதவீத குறைப்பாகும்.
*தமிழ்நாட்டின் பிற விமான நிலையங்களான கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட* விமான நிலையங்களில் இயங்கும் விமான நிறுவனங்களுக்கு 29 சதவீதமாக இருந்த வரி, *வெறும் 1 சதவீதமாக* குறைக்கப்பட்டுள்ளது. இது 28 சதவீத குறைப்பாகும்.
அதேபோல், சென்னையைத் தவிர பிற விமான நிலையங்களில் 40 டன் எடைக்கு குறைவான புறப்பாட்டு எடை கொண்ட விமானங்களுக்கு 5 சதவீதமாக இருந்த வரி, *1 சதவீதமாக* குறைக்கப்பட்டுள்ளது.
இந்த வரி குறைப்பு உத்தரவு *வரும் அக்டோபர் 31-ம் தேதி நள்ளிரவு முதல் அடுத்த ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி வரை* ஓராண்டுக்கு அமலில் இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையால், தமிழகத்தில் குறிப்பாக 2-ம் நிலை நகரங்களுக்கான விமான இணைப்பு அதிகரிக்கும், விமான டிக்கெட் கட்டணம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துகள்