டெல்லியில் மீண்டும் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே மற்றும் அவரது கூட்டாளிகள் டெல்லி விமான நிலையத்தில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
*விமானத்திற்குள்ளேயே கைது:*
அக்டோபர் 10, 2026 அன்று டெல்லி விமான நிலையத்திற்கு வந்திறங்கிய அபிஜித் தீப்கே மற்றும் அவரது கூட்டாளிகளான சவ்ரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோரை டெல்லி போலீசார் விமானத்திற்குள்ளேயே வைத்து கைது செய்ததாக கூறப்படுகிறது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் போராட்டம் நடத்த திட்டமிட்டதாக பிஎன்எஸ்எஸ் பிரிவு 126 மற்றும் 170-ன் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
*காவலில் இருந்தபோது பாட்டி மரணம்:*
அபிஜித் தீப்கே காவலில் இருந்த சமயத்தில் மகாராட்டிராவில் இருந்த அவரது பாட்டி காலமானார். இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து பலரும் அவரை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
*ஓராண்டு நிபந்தனையுடன் விடுதலை:*
இதனைத் தொடர்ந்து, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக் கூடாது என்ற ஓராண்டு நிபந்தனைப் பத்திர பிணையின் அடிப்படையில், அக்டோபர் 11, 2026 அன்று அவர் போலீஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
டெல்லி நிர்வாக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் FORM NO.13 - BOND TO KEEP THE PEACE படிவத்தில் ரூ.50,000-க்கு பிணைப்பத்திரம் எழுதிக் கொடுத்து, அடுத்த ஓராண்டுக்கு அமைதிக்கு பங்கம் விளைவிக்க மாட்டேன் என உறுதி அளித்ததன் அடிப்படையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
விடுவிக்கப்பட்ட பின் அவர் மகாராட்டிரா புறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.






கருத்துகள்