*தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் பரபரப்பு: சஸ்பெண்ட் செய்யப்பட்ட தலைமை பொறியாளர் மீண்டும் பணியில்!*
*சென்னை, அக்டோபர் .02:*
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி சோலார் மின் திட்டங்களுக்கு அனுமதி அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தலைமை பொறியாளர் *பி.சந்திரசேகரன் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.*
இது தொடர்பாக தமிழ்நாடு மின் பகிர்மான கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் *வி.அருண் ராய்* பிறப்பித்த உத்தரவு வெளியாகியுள்ளது.
*உத்தரவு விவரம்:*
- *எண்:* Rt. CMD Proceedings No.52, நாள்: 29.09.2026
- *அதிகாரி:* திரு.பி.சந்திரசேகரன், பணி எண் 12024972
- *புதிய பொறுப்பு:* தலைமை பொறியாளர், பாதுகாப்பு மற்றும் தொடர்பு பிரிவு, சென்னை
கடந்த *22.05.2026 அன்று* மின்சாரத்துறை அமைச்சர் ஆய்வுக்குப் பின், TNGECL நிர்வாகத்தில் தலையீடு மற்றும் விதிமீறல் புகாரில் சந்திரசேகரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 4 மாதங்களில் அவரது சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டு மீண்டும் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள்