சிவில் வழக்கு விசாரணை தொடங்கிய பிறகும் திருத்தம் செய்யலாம் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
சிவில் வழக்குகளில் விசாரணை தொடங்கிய பிறகு திருத்தம் கோருவது தொடர்பான முக்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.
*வழக்கு எண்: Civil Appeal No. 13681 of 2026 (Haramani Sahoo vs Lalita Nayak)*
நீதிபதிகள்: B.V. நாகரத்னா மற்றும் R. மகாதேவன்
வழக்கின் பின்னணி என்ன?
ஹரமணி சாஹூ தரப்பினர் சொத்து தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தனர். வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது, அந்த சொத்தில் ஒரு பகுதிக்கு ஏற்கனவே வேறு ஒரு வழக்கில் சமரச தீர்ப்பு (Compromise Decree) போடப்பட்டுள்ளது என்பது தெரிய வந்தது.
அந்த சமரச தீர்ப்பில் தங்கள் மூல வாதி கட்சிக்காரரே இல்லை என்பதால், அதை எதிர்த்து தங்கள் வழக்கை திருத்தம் செய்ய Order 6 Rule 17 CPC-ன் கீழ் மனு தாக்கல் செய்தனர். அதற்கு ஆதாரமாக *22.06.2020 அன்று தான் certified copy பெற்றோம்* என்று ஆவணம் காட்டினர்.
ஆனால் விசாரணை நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் "ரொம்ப கால தாமதம், Due Diligence இல்லை, கால வரம்பு (Limitation) முடிந்துவிட்டது" என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
உச்ச நீதிமன்றம் என்ன கூறியது?
தள்ளுபடி உத்தரவுகளை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், திருத்தத்தை அனுமதித்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவை பிறப்பித்தது.
*நீதிமன்றத்தின் 3 முக்கிய கருத்துக்கள்:*
*1. Due Diligence நிரூபிக்கப்பட்டுள்ளது [Para 12-14]*
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சமரச தீர்ப்பு, வழக்கு சொத்தை நேரடியாக பாதிக்கிறது. 22.06.2020-ல் certified copy எடுத்ததற்கான ஆதாரம் இருப்பதால், Order 6 Rule 17 Proviso-வில் கூறப்பட்டுள்ள Due Diligence நிபந்தனை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
*2. வழக்கின் தன்மை மாறவில்லை [Para 15-18]*
இந்த திருத்தம் வழக்கின் அடிப்படை தன்மையை மாற்றவில்லை. அதே சொத்து தொடர்பானது தான். உண்மையான பிரச்சினையை தீர்க்கவும், பல வழக்குகளை தவிர்க்கவும் இந்த திருத்தம் அவசியம்.
*3. Limitation-ஐ இப்போது முடிவு செய்யக்கூடாது [Para 20, 23]*
திருத்த மனுவை விசாரிக்கும் போது, நீதிமன்றம் அதன் தகுதியை மட்டுமே பார்க்க வேண்டும், அதன் இறுதி வெற்றி தோல்வியை அல்ல. கால வரம்பு என்பது எப்போது தெரிந்தது என்பதை பொறுத்தது. அது விவாதத்திற்குரியது என்பதால், அதை Trial-ல் தான் முடிவு செய்ய வேண்டும், மனுவை தள்ளுபடி செய்யும் போது அல்ல. Order 23 Rule 3A தடையும் Trial-ல் பரிசீலிக்கப்படும்.
இறுதி தீர்ப்பு:
விசாரணை நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகள் ரத்து செய்யப்பட்டு, திருத்தம் செலவுத் தொகையுடன் அனுமதிக்கப்பட்டது.
> *வழக்கறிஞர்களுக்கன முக்கிய பாடம்:* சொத்து வழக்கில் எதிர் தரப்பு மறைத்த சமரச தீர்ப்பு போன்ற ஆவணம் பிறகு தெரிய வந்தால், அதை எப்போது பெற்றீர்கள் என்ற தேதியுடன் ஆதாரம் காட்டினால், விசாரணை தொடங்கிய பிறகும் திருத்தம் பெறுவது சாத்தியம் என்பதை இந்த தீர்ப்பு உறுதி செய்கிறது.
























கருத்துகள்