--- *ஆட்சி மாற்றம் என்பது ஆட்சியாளர்களின் மாற்றம் மட்டுமல்ல; மக்களின் வாழ்க்கையில் நிம்மதியை ஏற்படுத்தும் மாற்றமாக இருக்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது மக்கள் நல ஆட்சியின் அடிப்படைச் சோதனை.*
தமிழகத்தில் பணவீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு குறித்த விரிவான புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.
*1. பணவீக்கம் - 2026 செப்டம்பர் நிலவரம்:*
மத்திய புள்ளிவிவரத்துறை CPI தரவுகளின் படி,
- *தமிழ்நாடு சில்லறைப் பணவீக்கம்: 6.81%*
- *இந்திய சில்லறைப் பணவீக்கம்: 5.54%*
தமிழகத்தின் பணவீக்கம் தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது.
*2. உணவுப் பொருட்கள் - தமிழகத்தில் பணவீக்கம் (ஆண்டு அடிப்படையில்):*
பொருள் பணவீக்கம்
அரிசி **9.14%**
பால் **6.07%**
முட்டை **7.28%**
சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் **20.25%**
உணவு மற்றும் பானங்கள் (மொத்தம்) **10.04%**
ஆதாரம்: நுகர்வோர் விலை குறியீடு - செப்டம்பர் . 2026
*3. சந்தையில் மக்களை பாதிக்கும் விலை உயர்வு (ஒப்பீட்டு நிலவரம்):*
- அரிசி: ↑ 9.14%
- துவரம் பருப்பு: (சந்தை விலை உயர்வு)
- பால்: ↑ 6.07%
- முட்டை: ↑ 7.28%
- சமையல் எண்ணெய்: ↑ 20.25%
- காய்கறிகள் (பல வகைகள்): ↑ 10-25%
- பழங்கள்: ↓ 5-15%
- பெட்ரோல் / டீசல் (சமீபத்திய உயர்வு): ↑ ∼3-5%
வருமானம் உயராத நிலையில் செலவுகள் தொடர்ந்து அதிகரிக்கின்றன. உணவு, கல்வி, மருத்துவம், வீட்டு வாடகை, மின்சாரம், போக்குவரத்து என பல செலவுகள்...
*4. அரசின் சமீபத்திய நடவடிக்கை (அக்.15, 2026):*
அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில்
- *சன்னரக அரிசி - ₹30 / கிலோ*
- *துவரம் பருப்பு - ₹130 / கிலோ*
இருப்புகளை உறுதிப்படுத்தும் அரசு நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
*ஆனால் கேள்விகள் அவசியம்!*
- அறிவிக்கப்பட்ட சலுகை விலைகளில் பொருட்கள் உண்மையில் கிடைக்கிறதா?
- எத்தனை குடும்பங்கள் பயனடைகின்றன?
- சந்தை விலைகளுடன் ஒப்பிடும்போது எவ்வளவு சேமிப்பு ஏற்படுகிறது?
- அடுத்த 3 மாதங்களுக்கான இருப்பு போதுமானதா?
இவற்றை மாதந்தோறும் அரசு வெளியிட வேண்டும்.
*5. விலைவாசியைக் கட்டுப்படுத்த - அரசு உடனடியாக செய்ய வேண்டியது:*
1. *நியாயவிலைக் கடைகள் வலுப்படுத்தல்:* அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை குறைந்த விலையில் வழங்குதல்.
2. *உழவர் சந்தைகள் விரிவாக்கம்:* விவசாயிகளுக்கு நேரடி விற்பனை வாய்ப்பு, குளிர்சாதன சேமிப்பு, கிடங்கு, போக்குவரத்து வசதிகள்.
3. *சந்தை கண்காணிப்பு:* பதுக்கல், செயற்கை தட்டுப்பாடு, நியாயமற்ற விலை இடைவெளி ஆகியவற்றை கட்டுப்படுத்துதல்.
4. *வருமானம் உயர்வு:* தொழிலாளர் நலத்திட்டங்கள், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, சமூக பாதுகாப்பு.
5. *பிற செலவுகளும் கவனத்தில்:* மின்சாரம், குடிநீர், போக்குவரத்து, வீட்டு வாடகை உட்பட குடும்பச் செலவுக் கணக்கு மதிப்பீடு.
6. *வெளிப்படைத்தன்மை:* மாதாந்திர விலை நிலவரம், நிவாரணத் திட்ட பயன், மாவட்ட வாரியான அறிக்கை; மக்கள் புகார் மையம்.
*இறுதியாக:*
*மக்களின் சமையலறையில் நிம்மதி பிறக்கும்போதுதான் தவெக அரசின் விலைவாசிக் கட்டுப்பாடு வெற்றியாகும். வாக்குறுதி அல்ல... வாழ்க்கையில் மாற்றம் வேண்டும்!*

கருத்துகள்