---
*60 மார்க் அமிர்தம்!*
மறந்தோம் நூறு, பெற்றோம் அறுபது,
இறந்ததோ உணவு, பிறந்ததோ சுவை!
தந்தவர் தாமு, தந்தது அமிர்தம்!
*மூன்று காலம்!*
நளனின் காலம் - தவமாய் சமையல்,
நெடுங்குடி முத்து - நூறு மார்க் ருசி,
ரகசியமாய் போனது, நாற்பது பேருக்குள்!
செட்டிநாடு என்பது ராஜா நாடு அல்ல,
கட்டியது தொண்ணூற்று ஆறு ஊரு!
ராஜபோக காலம் - அறுபத்து நாலு வகை,
ஓலன் காளன் எரிசேரி,
நூறு மார்க் இருந்தும், பத்து பேரும் அறியல!
கோமாளி காலம் - சமையல் காமெடி,
சாம்பாரில் சாக்லேட், சந்தியில் சிரிப்பு!
*பாலம் தாமு!*
மூன்று காலத்திற்கும் பாலம் தாமு,
பாடம் சொன்னவன் பாலம் தாமு!
பிறந்தார் சென்னையில், ஐம்பத்தி நான்கில்,
கற்றார் PhD, சமையலில் முதலாய்!
தாயே குரு, கோதைநாயகி குரு!
பத்ம ஸ்ரீ விருது,
கின்னஸ் சாதனை,
லண்டன் புகழ்,
லட்சம் பேருக்கு பாடம்!
நூறு விருது பெற்றும்,
தன்னை அறுபது என்றார்!
ஏன்?
படைக்கவில்லை, பகிர்ந்தார்!
அந்த அறுபது தான் அமிர்தம்!
நூறு முத்துவை தெரியல,
நூறு விருந்தை ருசிக்கல,
அறுபது சதவீத மக்களுக்கு,
அறுபது மார்க் தாமுவே நூறு!
புத்தகத்து ருசியை,
புழக்கத்துக்கு கொண்டவர்!
அதான் மரியாதை!
*கோமாளி நடுவே கலைஞன்!*
தாமு அப்பா போனார்,
தமிழ் ருசி போனதா?
சமையல் கலையை,
காமெடி ஆக்கிய கூட்டத்திலே,
காவலாய் நின்றவர் தாமு!
Swiggy தலைமுறைக்கு,
Slow Food சொன்னவர்!
Stress Buster என்று,
அடுப்படி இழுத்தவர்!
முத்துவோடு போட்டி இல்லை,
அவர் Original Taste,
இவர் Teaching Taste!
அவர் ருசித்தார்,
இவர் ருசிக்க கற்றார்!
வழி வேறு, வாழ்வு ஒன்று!
பாடம் நடத்தினார்,
பலரும் படிக்கல,
பாடம் நடத்தியவர் போய்விட்டார்!
அரசியலிலும் கோமாளி,
அடுப்படியிலும் கோமாளி,
கோமாளியை ரசிக்கும் உலகில்,
கலைஞன் தனித்து நின்றான்!
அவன் தான் தாமு!
ஆழ்ந்த அஞ்சலி தாமு!
ஓம் சாந்தி தாமு!
---




கருத்துகள்