முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேன் தமிழ்க் கவிதையில் மருதிருவர் காவியம்

*மருதிருவர் காவியம்* 

முக்குளச் சோலையிலே முத்தாய்ப் பிறந்தவரே!

நரிக்குடி மண்ணிலே நல்லறம் வளர்ந்தவரே!

மொக்கை பழனியப்பன் மரபின் மணி விளக்கே

ஆனந்தாயி புதுப்பட்டி அன்பின் திரு விளக்கே!

பெரியவர் ஆயிரத்து எழுநூற்று நாற்பத்தெட்டில் வந்தார்

சின்னவர் ஐம்பத்து மூன்றில் சீரோடு வந்தார்!





*முல்லையூர் குரு கீதம்*

முல்லையூர் என்னும் அரளிக் கோட்டை மண்ணிலே

முல்லையாய்ப் பிறந்தார் தாண்டவராயப் பிள்ளை

பிள்ளைமார் குலத்து பெருமைச் சுடராய்

சசிவர்ணர் தொடங்கி தளவாய் பிரதானியாய்!




அவர் வளர்த்த கன்றுகள் மருதிரு வராய்

அவர் கற்றுத் தந்தது வாளும் நீதியுமாய்!


*கௌரி நாச்சியார் - வேலு நாச்சியார் - உண்மை கீதம்*

முத்து வடுகநாதர் மன்னவர்க்கு இரு மனையாட்டி

மூத்தவள் வேலுநாச்சியார் வீரத்தின் ஊற்று

இளையவள் கௌரி நாச்சியார் கற்பின் பேறு!


ஆயிரத்து எழுநூற்று எழுபத்து இரண்டில்

ஜூன் இருபத்து ஐந்தில் காளையார் போரில்

மன்னனும் கௌரியும் சேர்ந்து மாண்டனர்

மூத்தவள் வேலுநாச்சியார் மட்டும் மருதரால் மீண்டனர்!


கையைப் பிடித்து காட்டுக்குள் அழைத்துச் சென்று

எட்டு ஆண்டு காத்தது மருதிருவர் கரமே!


*வேலுநாச்சி விடுதலை கீதம்*

திண்டுக்கல் வனத்தில் விருப்பாச்சி துணையில்

ஹைதர் அலி அண்ணன் தந்த படையில்

கோபால நாயக்கர் மாமன் தந்த துணையில்



ஆயிரத்து எழுநூற்று எண்பதில் சிவகங்கை மீட்டாள்

இந்தியாவில் முதல் பெண் விடுதலை வாங்கிய வீரமங்கை அவள்!

அந்த விடுதலைக்கு வித்தானது மருதிருவர் விழியே!


மகள் வெள்ளச்சி நாச்சியார் விரைவில் மறைய

மகள் பிரிவில் தாய் வேலுநாச்சியார் 1790-ல் மறைய

தாய்க்குப் பின் தரணி காத்தது மருதிருவர் மொழியே!


*கருமலை - ஜம்புத் தீவு கீதம்*

கருமலை கல்லை எடுத்து காளையார் கோவில் கோபுரம் வைத்தார்

மதுரை தெரியும் கோபுரம் கட்டி கும்மிப் பெண்கள் பாட வைத்தார்!


1801 ஜூன் 16-ல் திருச்சி திருவரங்கம் மதுரை கோட்டையிலே

"ஜம்புத் தீவு பிராமணரே சத்திரியரே வைசியரே சூத்திரரே முசல்மான்களே வாரீர்"

என ஜாதி கடந்து அழைத்த முதல் மன்னர்!

1857-க்கு 56 ஆண்டு முன்பே முழங்கிய முதல் குரல்!

தர்காவுக்கு மானியம் தந்த தயாளர்

சர்ச்சுக்கு மணி தந்த சமத்துவர்

கோயிலுக்கு கோபுரம் தந்த காவலர்!


*திருக்களம்பூர் - குமாரபட்டி தேன் கீதம்*

திருக்களம்பூர் சத்திரத்திலே 1798-ல்

கட்டபொம்மன் - மருதர் கை கோர்த்தனர்

சிவகங்கை கெஜெட் சொல்லும் சத்தியம் அது!


கயத்தாறு காற்றில் கட்டபொம்மன் தொங்கிய பின்

குமாரபட்டி காட்டிலே ஊமைத்துரை ஒளிந்தான்

அடைக்கலம் தந்து ஆதரித்தது மருதிருவர் தான்

1801 வரை குமாரபட்டி தலைமையகம் ஆனது தான்!


விருப்பாச்சி கோபாலர் -மாமன் முறை

ஹைதர் அலி -அண்ணன் முறை

திப்பு சுல்தான் -உயிர் நண்பன் முறை

திப்பு தந்த பீரங்கி சிவகங்கையில்

திப்பு தந்த வாள் சின்ன மருது கையில்

1799 மே 4 திப்பு மாண்ட போது கதறியது மருதர் உள்ளம்!


*எட்டு மனைவி - துரைச்சாமி - பினாங்கு கீதம்*

வீராயி முதல் எட்டு மனைவியர்

எட்டு பேர் கண்ணீர் சிந்த பிள்ளைகள் மாண்டனர்!


பதினான்கு வயது பாலகன் துரைச்சாமி மட்டும் பிழைத்தான்

ராஜய்யன் சொல்வார் சின்ன மருது 3-ம் மனைவி மகன் என்று

Welsh சொல்வார் பெரிய மருது மகன் என்று Vol-1-ல்

தாய் பெயர் ஆவணத்தில் இல்லை - எட்டில் ஒருவர் என்பதே உண்மை!


11-02-1802 Admiral Nelson கப்பலில்

73 பேரோடு தூத்துக்குடி துறையில் இருந்து பினாங்கு

74 நாள் கடல் - 3 பேர் மாண்டனர் - 10 பேர் மனம் பேதலித்தனர்

பகதூர்ஷா ஜாபருக்கு 56 ஆண்டு முன்பே முதல் காலாபானி மருது மகனே!


*திருப்பத்தூர் - பென்சன் - பெண் வாரிசு கீதம்*

24-10-1801 திருப்பத்தூர் கோட்டை

பனைமர தூணில் தூக்கு மேடை

500-க்கும் மேல் - Agnew Report "500 and upwards"

சிங்க கூண்டில் வாளால் குத்தி தூக்கில் இட்டு

2 நாள் தொங்க வைத்து தலை அறுத்து காளையார் வாசலில் வைத்தான்

தென்னக ஜாலியன்வாலாபாக் திருப்பத்தூர் தான்!


1982-ல் ஆணை எண் 1143-ல் 202 பேர் வாரிசு

பெரிய மருது 110 - சின்ன மருது 92

முக்குளம் நரிக்குடி சிறுவயல் வட்டம்

Wikisource பக்கம் 250-ல் பட்டியல் உள்ளது

150-ல் தொடங்கி 11000-மாய் ஸ்டாலின் 2025-ல் ஆக்கினார்!


202-ல் பெண் இல்லை என கல்யாணி கஸ்தூரி 2015-ல் வென்றனர்

V.கனகா C.மரகதம் K.ராஜேஸ்வரி 3 சகோதரி ராமநாதபுரம்

S.M.சுப்பிரமணியம் 11-09-2020 தீர்ப்பு

WA 1234/2021 State vs Kanaga - M.M.சுந்தரேஷ் S.ஆனந்தி 2022 தள்ளுபடி

Article 14-ல் பெண் வாரிசு வென்றது!

முல்லையூர் குரு வளர்த்த பிள்ளை நீ!

கௌரி மாண்டு வேலு பிழைக்க காத்த பிள்ளை நீ!

வெள்ளச்சி பிரிவை தாங்கிய தாய்க்கு துணை நீ!

திருக்களம்பூரில் கட்டபொம்மன் கை பிடித்தவன் நீ!

குமாரபட்டியில் ஊமைத்துரைக்கு குடை பிடித்தவன் நீ!

ஹைதர் திப்பு நட்பை காத்தவன் நீ!

ஜம்புத் தீவில் ஜாதி கடந்தவன் நீ!

திருப்பத்தூரில் ரத்தம் சிந்தியவன் நீ!

பினாங்கு வரை விதை விதைத்தவன் நீ!


*திருமுடிவு - வேங்கைகளின் விடைபெறல்*

முல்லையூர் குருவின் மொழியில் வளர்ந்தோம்

காளையார் கோவில் கல்லில் உயர்ந்தோம்


கௌரி மாண்ட களத்தை கண்டோம்

வேலுநாச்சிக்கு வாழ்வை தந்தோம்

திருக்களம்பூரில் தோளை சேர்த்தோம்

குமாரபட்டியில் குடிலை தந்தோம்


வளரி வீசி வெள்ளையனை விரட்டினோம்

வாளை வீசி தமிழகம் காத்தோம்

ஜம்புத் தீவில் ஜாதியை மறந்தோம்

அம்புத் தீவு முழுதும் நீதி தந்தோம்


திப்பு மாண்டதில் துடித்தோம்

கட்டபொம்மன் தூக்கில் துடித்தோம்

எட்டு மனைவி அழுது நின்றார்

பிள்ளைகள் எழுவர் மாண்டு நின்றார்


திருப்பத்தூர் கழுவில் நாங்கள் தொங்கினோம்

திருப்பமுனை தந்து நாட்டை காத்தோம்

பினாங்கு வரை பிள்ளை சென்றான்

பின்னும் இங்கே புகழ் நின்றான்


இருநூற்று இருவர் இன்றும் வாழ்கின்றனர்

இருநூறு ஆண்டு புகழை காக்கின்றனர்

முக்குலத்தோர் என்று சொல்லாதீர்

முழு தமிழர் என்றே சொல்லுவீர்


மருது என்பது ஜாதி அல்ல,..... நீதி,

மருது என்பது பதவி அல்ல,..... தியாகம்,

வாழ்க மருது நாமம் ! ஓங்குக மருது புகழ் !

வாழிய வாழியவே! *பப்ளிக் ஜஸ்டிஸ்* சார்பாக  *வீரவணக்கம்*

*கவிஞர் சீ.க.புலித்தேவன் பாண்டியன்*, ஆசிரியர் 

_

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

எட்டு லட்சம் மரங்களை நட்டவர், எண்ணற்ற மனிதர்களை வளர்க்கிறார்!

 --- *புண்ணியவாசலில் புண்ணியம் செய்யும் வாசல் - அன்பாலயம்!* *பப்ளிக் ஜஸ்டிஸ் ஆசிரியர் கவிஞர் சீ.க. புலித்தேவன் பாண்டியன் பிறந்தநாள் - பசுமை நாயகன் மரம் ராஜா பங்கேற்ற நெகிழ்ச்சி விழா!* *புதுக்கோட்டை, ஆவுடையார்கோவில் புண்ணியவாசல்:* தமிழ்நாட்டில் ஆயிரம் முதியோர் இல்லங்கள் உண்டு. ஆனால் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் அருகே புண்ணியவாசலில் இயங்கும் *"மரம் அறக்கட்டளையின் அன்பாலயம் - ஆதரவற்ற முதியோர் இல்லம் (Regd No: 26/2019)"* போல ஒரு இல்லத்தை எங்கும் காண முடியாது! * காரணம் என்ன தெரியுமா? * > இங்கே சுத்தம் உண்டு, சுகாதாரம் உண்டு, > அதையும் தாண்டி அன்பு உண்டு, கருணை உண்டு, > கண்ணீரைத் துடைக்கும் பாசம் உண்டு! *இதன் ஆணிவேர் யார் தெரியுமா?* நாம் பார்த்த புகைப்படங்களின் பின்னணியில் இருக்கும் உண்மையான ஹீரோ *திரு. S.R.M. ராஜா - அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் "மரம் ராஜா"* தான்! - புதுக்கோட்டை மண்ணில் மட்டும் *8 லட்சம் மரங்களை* நட்டு, தண்ணீர் ஊற்றி தன் பிள்ளைகள் போல வளர்த்த பசுமை நாயகன்! - அந்த பசுமை நாயகன் தான் *"மரம் அறக்கட்டளை"* நிறுவனர்! - மரம் வளர்த...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...