*மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து அரசுப் பேருந்துகளிலும் இலவச பயணம் - GO எண் 18 - முழுமையான விவரம்*
*சென்னை, அக்டோபர் .27, 2026:*
தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வெளியிட்டுள்ள *அரசாணை (நிலை) எண்.18 நாள் 27.10.2026* மூலம் மாற்றுத்திறனாளிகளின் பேருந்து பயணச் சலுகை வரலாற்று அளவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அரசு செயலாளர் *திருமதி. சோ.மதுமதி* அவர்கள் கையொப்பமிட்டு வெளியிட்ட இந்த ஆணை, வெளியிடப்பட்ட நாள் முதலே அமலுக்கு வந்துள்ளது. நிதித்துறை இசைவு எண் *1793/நிதி(சநா)/2026 நாள் 27.10.2026, கூடுதல் நிதி ஒதுக்கீட்டு பேரேடு எண் 2026100759.*
*யாருக்கு இலவசம்? - முழு தகுதி:*
2016 மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின் கீழ் வரும் 21 வகை மாற்றுத்திறன்களில் *40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் (Benchmark Disability)* உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பயன்பெறலாம். மத்திய அரசு வழங்கும் *16 இலக்க தனித்துவ அடையாள அட்டை (UDID Card - TNxxxxxxxxxxxxx)* வைத்திருக்க வேண்டும்.
*எந்தெந்த பேருந்துகளில் 100% இலவசம்? (AC தவிர):*
1. மாநகர / நகர சாதாரண பேருந்துகள்
2. தாழ்தளப் பேருந்துகள் (Low Floor)
3. விரைவுப் பேருந்துகள் (Express)
4. வரையறுக்கப்பட்ட நிறுத்த பேருந்துகள் (LSS - Limited Stop Service)
5. டீலக்ஸ் பேருந்துகள் (Deluxe)
6. புறநகர் பேருந்துகள் (Mofussil)
7. மலைப்பகுதிகளில் இயங்கும் சாதாரண கட்டண பேருந்துகள்
*மலைப்பகுதிகளில் தூர வரம்பு:*
- பேருந்து வசதி உள்ள பகுதிகளில் (Served Area) - *35 கி.மீ வரை*
- பேருந்து வசதி இல்லாத பகுதிகளில் (Unserved Area) - *40 கி.மீ வரை*
- சமவெளி மற்றும் நகர பகுதிகளில் - முன்பிருந்த *100 கி.மீ வரம்பு* தொடர்கிறது.
தனியாக பயணம் செய்ய இயலாத மாற்றுத்திறனாளிகளுடன் செல்லும் *ஒரு துணையாளருக்கும் (Escort) கட்டணம் கிடையாது.* இதற்கும் UDID காட்டி Zero Ticket பெற வேண்டும்.
*UDID-ஐ காட்டினால் போதுமா? Xerox கொடுக்க வேண்டுமா?*
அரசாணையில் *"காண்பித்து"* என்று தான் உள்ளது. Original UDID Card-ஐ நடத்துநரிடம் காட்டினால் மட்டும் போதும். *Xerox நகல், Aadhaar நகல் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு கேட்பது GO-விற்கு எதிரானது.* UDID-ஐ Xerox கொடுப்பது உங்கள் தனிப்பட்ட தகவல் தவறாக பயன்படுத்த வழிவகுக்கும்.
நடத்துநர் Zero Fare பயணச்சீட்டு வழங்க வேண்டும் என்பது அரசாணையின் நிபந்தனை. இதன் மூலம் அரசு பயணங்களை கணக்கிடும்.
*75% சலுகை என்ன ஆகும்?*
ஏற்கனவே உள்ள 75% கட்டணச் சலுகை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். பழைய பேருந்து பயணச் சலுகை அட்டையும் செல்லும் என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
*நிதி ஒதுக்கீடு:*
2026-27-க்கு ஏற்கனவே ரூ.95 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், கூடுதல் விரிவாக்கத்திற்கு ரூ.19 கோடி சேர்த்து மொத்தம் ரூ.114 கோடி கோரப்பட்டது. தற்போது *ரூ.7.90 கோடி (ரூ.7,90,00,000)* முதல் கட்டமாக விடுவிப்பு. கணக்கு தலைப்பு *2235-02-101-BG-34201*. இது புது துணைப்பணி என்பதால் சட்டமன்ற ஒப்புதல் பின்னர் பெறப்படும், எதிர்பாரா செலவு நிதியில் இருந்து முன்பணம் எடுக்கப்படுகிறது.
*புகார் / தகவல் தெரிவிக்க - அனைத்து போக்குவரத்து கழக MD தொடர்பு:*
- *பொது Toll Free: 1800-599-1500 (24 மணி நேரம்)*
- *முதலமைச்சர் உதவி மையம்: 1100*
- SETC / TNSTC Commercial Email: *commercial@tnstc.org, setccomml@yahoo.com*
- TNSTC Villupuram: 04146-259256, vpmtnstc@dataone.in
- TNSTC Coimbatore: 0422-2431521, *tnstccbeho@dataone.in*
- TNSTC Salem: 0427-2317353
- TNSTC Kumbakonam: 0435-2402070
- MTC Chennai: 044-23455888
- TNSTC Madurai: 0452-2380350
- TNSTC Tirunelveli: 0462-2353131
*மாற்றுத்திறனாளிகள் என்ன செய்ய வேண்டும்?*
1. Original UDID Card எப்போதும் வைத்திருக்கவும்
2. Xerox கொடுக்க வேண்டாம், Original-ஐ மட்டும் காட்டவும்
3. நடத்துநரிடம் Zero Ticket கேட்டு பெறவும்
4. மறுத்தால் Bus No, நேரம், இடம் குறித்து 1800-599-1500-ல் புகார் செய்யவும்
இந்த அரசாணை மாற்றுத்திறனாளிகளின் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ தேவைக்கான பயணச் சுமையை பெருமளவு குறைக்கும்.





கருத்துகள்