*சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.வினோத் குமாருக்கு இன்று பிரிவு உபசார விழா - நீதிமன்ற அமர்வுகள் 3.45க்கு நிறைவு*
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி *நீதியரசர் T.பரத் வினோத் குமார்* அவர்கள் தெலங்கானா உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, அவருக்கான பிரிவு உபசார விழா இன்று நடைபெற உள்ளது.
*பணியிட மாற்றம்:*
உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரையின் பேரில், மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த நீதிபதி வினோத் குமார் அவர்களை தெலங்கானா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அவருக்கு பிரிவு உபசார விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
*விழா நடைபெறும் இடம் மற்றும் நேரம்:*
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில், இரண்டாவது தளத்தில் அமைந்துள்ள *மினி ஆடிட்டோரியத்தில் நாளை (அக்டோபர் 13) மாலை 4.00 மணிக்கு* இந்த பிரிவு உபசார விழா நடைபெறும்.
இந்த விழாவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, சக நீதிபதிகள், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு நீதிபதி வினோத் குமார் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க உள்ளனர்.
*நீதிமன்ற அமர்வுகள் முன்கூட்டியே நிறைவு:*
பிரிவு உபசார விழாவை முன்னிட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தின் அனைத்து நீதிமன்ற அமர்வுகளும் இன்று *மாலை 3.45 மணிக்கு* நிறைவடையும் என பதிவாளர் (General) வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி வினோத் குமார் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள்