தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமார் மீது 20 ஆண்டு பழமையான ஊழல் வழக்கில் விசாரணை நடத்த கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா இன்று உத்தரவிட்டுள்ளார்.
இது சட்டப்படி செல்லத்தக்கதா அல்லது அரசியல் கோமாளித்தனமா என்ற விவாதம் எழுந்துள்ளது.
*அரசு உத்தரவில் கூறப்பட்ட விபரம் என்ன?*
கேரள உள்துறை தரப்பில் இருந்து வெளியான தகவல்படி:
1. 2006-ல் உலக வங்கி நிதியுதவியுடன் ரூ.215 கோடியில் அங்கமாலி - திருவனந்தபுரம் MC சாலை புனரமைப்பு பணி நடந்தது. இதை PATI-BEL (மலேசிய PATI + பகீரதா) நிறுவனம் செய்தது.
2. இதன் தலைமை பொறியாளர் மலேசியர் லீ சீ பீன் (58). பில் தொகை ரூ.12-13 கோடியை விடுவிக்க அன்றைய PWD செயலாளர் ஞானேஷ் குமார் லஞ்சம் கேட்டதாக புகார்.
3. மனமுடைந்த லீ சீ பீன் மலேசியா திரும்பி தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவிக்கும், நிறுவன இயக்குனருக்கும் எழுதிய 2 தற்கொலை கடிதங்களில் ஞானேஷ் குமார் பெயர் தெளிவாக இருந்ததாக கேரள அரசு கூறுகிறது.
4. 2006-ல் VACB முதற்கட்ட விசாரணை நடத்தியது, ஆனால் "வெளிப்புற அழுத்தம் காரணமாக" நிறுத்தப்பட்டது. அதன் கோப்புகளை இப்போது தேடி எடுத்து விரிவாக விசாரிக்குமாறு VACB இயக்குனர் மனோஜ் ஆபிரகாமிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த புகாரை காங்கிரஸ் தலைவர் மலையின்கீழ் வேணுகோபால் நேற்று கொடுத்ததாகவும், முதல்வர் V.D.சதீசனுடன் பேசி விட்டே உத்தரவிட்டதாகவும் அமைச்சர் சென்னிதலா கூறியுள்ளார்.
*இது சட்டப்படி செல்லுமா?*
சட்ட வல்லுநர்கள் கூற்றுப்படி, இந்த உத்தரவு *Preliminary Inquiry அளவில் செல்லும்.*
காரணம், தலைமைத் தேர்தல் ஆணையர் பதவிக்கு விலக்கு (Immunity) இல்லை. 2006-ல் அவர் IAS அதிகாரி என்பதால் அப்போதைய சம்பவம் குறித்து மாநில லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கலாம்.
*ஆனால் தண்டனை வரை போகுமா? போகாது. இதுதான் கோமாளித்தனம் என்ற விமர்சனம்.*
1. FIR போடவே மத்திய அரசின் Sanction (அனுமதி) வேண்டும். Sanction இல்லாமல் கைது, ரெய்டு நடத்த முடியாது.
2. CEC-யை நேரடியாக விசாரணைக்கு அழைத்தால், அது தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தில் தலையீடு (Article 324) என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்கிவிடுவார்கள்.
3. 20 ஆண்டுகள் கழித்து, தற்போது SIR வாக்காளர் திருத்த பணி தொடர்பாக CEC மீது ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் போராட்டம் நடத்தும் நேரத்தில் மட்டும் இதை தூசி தட்டுவது அரசியல் Timing ஆக பார்க்கப்படுகிறது.
மேலும் உச்ச நீதிமன்றம் CEC-க்கு எதிரான SIR மனுக்களை அடுத்த வாரம் விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்த VACB விசாரணை ஒரு அரசியல் அழுத்தம் தானே தவிர, CEC பதவி பறிபோகாது.
*பப்ளிக் ஜஸ்டிஸ் பார்வை:* விசாரணை உத்தரவு சட்டப்படி செல்லும், ஆனால் இதனால் தேர்தல் ஆணையர் மீது நடவடிக்கை வர வாய்ப்பு மிக மிக குறைவு.

கருத்துகள்