*ஈக்வடார், குவாயாகில்:*
ஈக்வடார் நாட்டின் குவாயாகில் நகரில் உள்ள *Nuestra Señora del Perpetuo Socorro* தேவாலயத்தில் திருப்பலி நடத்திக் கொண்டிருந்தபோது பெரிய மரச் சிலுவை சரிந்து விழுந்ததில் பாதிரியார் பரிதாபமாக உயிரிழந்தார்.
*நடந்தது என்ன?*
- *தேதி:* அக்டோபர் 17, 2026
- *பாதிரியார்:* பாட்ரிசியோ ஆல்ஃபிரடோ சான்செஸ் மோலினாரி (53 வயது) - Congregation of the Most Holy Redeemer அமைப்பைச் சேர்ந்தவர்
- தேவாலயத்தின் முகநூல் / சமூக ஊடக பக்கத்தில் திருப்பலி நேரலையாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. 27-வது நிமிடத்தில் பலிபீடத்தின் பின்னால் சுவரில் பொருத்தப்பட்டிருந்த கனமான மரச் சிலுவை திடீரென கழன்று பாதிரியார் மீது விழுந்தது.
*அதிர்ச்சி வார்த்தைகள்:*
திருப்பலியின் போது பாதிரியார், *"ஒரு நாள், இங்கே இருக்கும் நாம் அனைவருமே இறந்துவிடுவோம்"* என்று கூறி முடித்த சில நொடிகளிலேயே இந்த விபத்து நடந்தது என்பது பக்தர்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உடனடியாக பக்தர்கள் அவரை மீட்க முயன்றனர். ஆனால் மருத்துவக் குழுவினர் வரும் முன்பே பலத்த காயம் காரணமாக அவர் உயிரிழந்ததாக குவாயாகில் பேராயர் அலுவலகம் அக்டோபர் 18-ம் தேதி உறுதி செய்தது.
இந்த சம்பவத்தின் நேரலை வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிலுவை எதனால் கழன்று விழுந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.






கருத்துகள்