பாஸ்போர்ட் எடுப்பதற்கு முகவரி சான்று இல்லாமல் அவதிப்படுவோருக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் முக்கிய சலுகை அறிவித்துள்ளது.
மத்திய அரசின் பாஸ்போர்ட் பிரிவு (PSP Division) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ உத்தரவில் (OM No: VI/401/01/12/2013) கூறியிருப்பதாவது:
பாஸ்போர்ட் மேனுவல் 2020 விதி 4.13ன் படி, இனி அனைத்து வங்கிகளின் புகைப்படத்துடன் கூடிய சேமிப்பு கணக்கு பாஸ்புக்கும் செல்லுபடியாகும் முகவரி ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படும்.
*எந்தெந்த வங்கிகள் ஏற்கப்படும்?*
1. அனைத்து அரசு பொதுத்துறை வங்கிகள் - SBI, Indian Bank, IOB உள்பட
2. தனியார் இந்திய வங்கிகள் - ICICI, HDFC, Axis, Karur Vysya Bank உள்பட
3. கிராமப்புற வங்கிகள் (Regional Rural Banks)
இதுவரை குறிப்பிட்ட சில வங்கிகள் மட்டுமே Appendix-7 பட்டியலில் இருந்த நிலையில், புதிதாக தொடங்கப்பட்ட வங்கிகளின் பெயர்களும் இணைக்கப்பட்டு பட்டியல் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
*என்ன செய்ய வேண்டும்?*
உங்கள் வங்கி பாஸ்புக்கில் உங்கள் புகைப்படம் ஒட்டப்பட்டு, வங்கி மேலாளரின் கையொப்பம் மற்றும் முத்திரையுடன் இருக்க வேண்டும். அதில் உங்கள் தற்போதைய முகவரி இருந்தால், அதுவே பாஸ்போர்ட் சேவைக்கு போதுமானது.
இந்த உத்தரவு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள அனைத்து பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது என இணைச் செயலாளர் ஜெயந்த் N. கோப்ரகடே தெரிவித்துள்ளார்.
Passport Seva Kendra-வில் ஆதார் இல்லை என்றாலும் இனி இந்த உத்தரவை காட்டி பாஸ்போர்ட் பெறலாம்.


கருத்துகள்