உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறனின் இளைய மகன் மாணிக்கம் நெடுமாறன் இன்று காலை இந்திய நேரம் 8.45 மணியளவில் ஆஸ்திரேலியா மெல்போர்ன் நகரில் இயற்கை எய்தினார்.
பல ஆண்டுகளாக மெல்போர்னில் பணிபுரிந்து வந்த அவர், புத்த மதத்தைத் தழுவி புத்தமதத் துறவியாகவே வாழ்ந்து வந்தார். கடந்த ஒரு மாதமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தற்போது காலமானார்.
அவரது இறுதிச் சடங்குகள் புத்த மத முறைப்படி மெல்போர்ன் நகரிலேயே நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழ. நெடுமாறன் அவர்களின் கடவுச் சீட்டு முடக்கப்பட்டிருப்பதால் அவரும் அவரது துணைவியாரும் இறுதிச் சடங்கில் நேரில் கலந்து கொள்ள இயலாத சூழல் நிலவுகிறது.


கருத்துகள்