---*சென்னை, அக்டோபர் .19:*
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு சென்னை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று (18.10.2026) முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.
இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த மருத்துவ கண்காணிப்பாளர் Dr. ஹேமலதா வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில், "அவர் நலமுடன் உள்ளார், இன்று (19.10.2026) டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பாமக தலைமை தரப்பில் வெளியிடப்பட்ட தகவலில், கடந்த சில மாதங்களாக தொடர் பொதுக்கூட்டங்கள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றதால் ஏற்பட்ட முழங்கால் வலி காரணமாக இந்த சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், மருத்துவர்கள் 2 வாரம் பிசியோதெரபி மற்றும் ஓய்வு எடுக்க அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பிய அவர் வேகமாக குணமடைந்து வருகிறார்.


கருத்துகள்