--- *பெருந்தன்மையில் அதிமுக! விமர்சித்த மருத்துவர் அன்புமணிக்கு எடப்பாடி கே பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து - 2029 கூட்டணிக்கான கணக்கா?*
தமிழக இடைத்தேர்தல் முடிவுகள் அதிமுகவின் எதிர்கால அரசியல் வியூகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
*நடந்தது என்ன?*
அதிமுக கூட்டணியில் இருந்த ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், தகுதிக்கு மீறி சீட்டுகள் மற்றும் மாநிலங்களவை எம்.பி பதவியை பெற்ற பிறகும், இக்கட்டான நேரத்தில் வெளிப்படையாக தவெக ஆதரவு நிலை எடுத்து வெளியேறியது.
அதேபோல அதிமுக ஆதரவில் 4 எம்.எல்.ஏ-க்களை வைத்துள்ள பாமக, இடைத்தேர்தலில் தார்மீக ஆதரவு கூட தராமல் நடுநிலை எனக்கூறி மறைமுகமாக தவெகவுக்கு வேலை செய்தது. மதுராந்தகத்தில் தவெக வெறும் 20,040 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதற்கு இதுவே காரணம் எனப்படுகிறது. தவெக வெற்றிக்கு அன்புமணியும், அன்புமணி பிறந்தநாளுக்கு விஜய்யும் வாழ்த்து பரிமாறிக் கொண்டதை சௌமியா அன்புமணி புளகாங்கிதத்துடன் பதிவிட்டார்.
இவ்வளவு நடந்தும் அதிமுக தலைமை யாரையும் வசைபாடவில்லை.
*கோயமுத்தூரில் மருத்துர் அன்புமணி ராமதாஸ் அட்வைஸ் - எடப்பாடி கே.பழனிசாமி யின் பதில் வாழ்த்து!*
இன்று கோவை விமான நிலையத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், "ஐந்து மாதத்திற்கு முன்பு வென்ற அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. அதிமுக சுய ஆய்வு செய்ய வேண்டும்" என்று அட்வைஸ் செய்தார்.
சில மணி நேரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, அன்புமணிக்கு பூங்கொத்து கொடுக்கும் படத்துடன் "நீண்ட ஆயுளுடனும் நல்ல உடல்நலத்துடனும் மக்கள் தொண்டாற்ற வாழ்த்துகிறேன்" என்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
*2029 கணக்கு என்ன?*
அரசியல் நோக்கர்கள் கூறுகையில், எடப்பாடியாரின் இந்த பெருந்தன்மை சாதாரணமானது அல்ல. வரவிருக்கும் *உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2029 நாடாளுமன்றத் தேர்தலை* மனதில் வைத்தே இந்த ராஜதந்திரம்.
இடைத்தேர்தல் தோல்வி தற்காலிகமானது. ஆனால் உள்ளாட்சியில் பாமக, தமாகா போன்ற கட்சிகளின் வாக்கு வங்கி அதிமுகவுக்கு தேவை. 2029 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்த பலமான கூட்டணி தேவை என்பதால், இப்போதே கதவை மூடாமல் திறந்து வைக்கிறார் எடப்பாடியார்.
இதுவே திமுகவாக இருந்தால் வெளியேறியவர்களுக்கு அவமானம் தான் மிஞ்சியிருக்கும். ஆனால் அதிமுக ஒரு ஜென்டில்மேன் கட்சியாக, எதிர்காலத்தை நோக்கி காத்திருக்கிறது என்கின்றனர் அதிமுகவினர். ---


கருத்துகள்