Gem Granite உரிமையாளர் R.வீரமணி வழக்கு - விசாரணை அதிகாரி மீது அதிரடி நடவடிக்கை
*சென்னை:* ஜெம் கிரானைட் தலைவர் R.வீரமணி மீதான பாலியல் புகாரை விசாரித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் C.மகேஷ் குமார், திடீரென காத்திருப்போர் பட்டியலுக்கு (Vacancy Reserve - VR) மாற்றப்பட்டுள்ளார்.
*கமிஷனர் அதிரடி உத்தரவு:*
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து சனிக்கிழமை வெளியான உத்தரவில், மீனம்பாக்கம் குற்றப்பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த C.மகேஷ் குமாரை, உடனடியாக தென் மண்டல இணை கமிஷனர் விடுவித்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு (Control Room) அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இது நிர்வாக காரணங்களுக்காக என்று கூறப்பட்டுள்ளது.
*பின்னணி என்ன?*
2025-ல் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம், ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி ஒரு சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக வீடியோ ஆதாரம் (Pen Drive) உடன் சென்னை மத்திய குற்றப்பிரிவில் (CCB) புகார் அளித்தது. பின்னர் அந்த வழக்கு ஒழுக்கக்கேடு தடுப்பு பிரிவுக்கு (Anti-Vice Squad - AVS) மாற்றப்பட்டது. அப்போது AVS இன்ஸ்பெக்டராக இருந்தவர் தான் C.மகேஷ் குமார். அவர் தான் அந்த வழக்கின் விசாரணை அதிகாரி.
*SIT விசாரணைக்கு மத்தியில் நடவடிக்கை:*
தற்போது வீரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் பல புகார்கள் வந்ததை அடுத்து, சிறப்பு புலனாய்வு குழு (SIT) விசாரணை நடந்து வருகிறது. இந்த நேரத்தில் விசாரணை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், இந்த VR நடவடிக்கைக்கும், முந்தைய விசாரணைக்கும் தொடர்பு இல்லை என்றும், நிர்வாக காரணம் மட்டுமே என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கருத்துகள்