*பழனி ரூ.100 கோடி மட நில மோசடி வழக்கில் மேலும் இருவர் கைது! -
சூடுபிடிக்கும் CBCID விசாரணை* நாம் ஏற்கனவே விரிவான வரலாற்றுத் தரவுகளுடன் வழங்கிய செய்தியின் அடிப்படையில் தொடர்ச்சி நிகழ்வுகளின் பார்வை.பழனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அருள்மிகு தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 1.4 ஏக்கர் நில மோசடி வழக்கில் சிபிசிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கை.
*கைதான இருவர் யார்?*
பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்ட *K.சிவசங்கரி* மற்றும் மோசடி ஆவணங்கள் தயாரித்துக் கொடுத்த வழக்கறிஞரும், ஆவண எழுத்தருமான விருப்பாட்சி *R.சிவக்குமார்* ஆகிய இருவரை இன்று புதன்கிழமை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
*வழக்கின் பின்னணி:*
திண்டுக்கல் மாவட்டம் பழனி பூங்கா சாலையில் உள்ள தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான பல நூறு கோடி மதிப்பிலான நிலத்தை, போலி ஆவணங்கள் தயார் செய்து முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாக புகார்.
இதில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டனர்:
1. விழுப்புரம் அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ்
2. திருப்பூர் பாப்பன்குளம் வெள்ளத்துரை (நிலத்தை வாங்கியவர்)
3. பழனி சேதுபதி
4. சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன்
5. இடைத்தரகர் ஜெயபிரகாஷ்
6. வழக்கறிஞர்
தற்போது இந்த எண்ணிக்கை *8 ஆக உயர்ந்துள்ளது.*
*இனி என்ன?*
கைது செய்யப்பட்ட சிவசங்கரி, சிவக்குமார் ஆகியோரிடம் இந்த மோசடி பின்னணியில் இன்னும் யார் யார் உள்ளனர், போலி ஆவணம் எப்படி தயாரிக்கப்பட்டது என CBCID தீவிர விசாரணை.
> HR&CE நிலங்கள் என்பது கோவில் சொத்து, மக்கள் சொத்து. இதில் கை வைப்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.


கருத்துகள்