* வாகன ஓட்டிகளுக்கு *+91 87429 02532* என்ற எண்ணில் இருந்து VehicleInfo என்ற பெயரில் வரும் WhatsApp மெசேஜ்களை நம்பி ஏமாற வேண்டாம்.
*நடந்தது என்ன?*
TNxxBX xxxx என்ற வாகனத்திற்கு "₹1000 Challan நிலுவையில் உள்ளது, CHALLAN100 Code பயன்படுத்தி ₹100 தள்ளுபடியில் கட்டுங்கள்" என்று மெசேஜ் வந்தது. ஆனால் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ *Parivahan eChallan (echallan.parivahan.gov.in)* தளத்தில் சரிபார்த்த போது *"Challan Not Found"* என்று தான் வந்தது. அதாவது எந்த அபராதமும் இல்லை.
*யார் இவர்கள்?*
இது அரசு நிறுவனம் அல்ல. இது *CARS24 நிறுவனத்தின் VehicleInfo* என்ற தனியார் App-ன் Marketing எண். WhatsApp-ல் Blue Tick இருப்பது அது ஒரு Business என்பதை மட்டுமே காட்டும், அது அரசு தகவல் என்று அர்த்தம் இல்லை.
*அரசு ஒருபோதும் Discount தராது!*
போக்குவரத்து அபராதத்திற்கு அரசு ஒருபோதும் Coupon Code, Discount தராது சார். இது தனியார் நிறுவனங்கள் தங்கள் App-ல் பணம் கட்ட வைக்க செய்யும் தந்திரம்.
*வாகன ஓட்டிகள் என்ன செய்ய வேண்டும்?*
1. அரசு பெயரில் வரும் எந்த Link-ஐயும் Click செய்யாதீர்கள்.
2. Challan-ஐ சரிபார்க்க ஒரே அதிகாரப்பூர்வ தளம்: *https://echallan.parivahan.gov.in*
3. சந்தேகமான மெசேஜ் வந்தால் 1930 என்ற Cyber Crime எண்ணில் புகார் அளிக்கவும்.
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.
---
இந்த செய்தியுடன் இரண்டு
1. VehicleInfo அனுப்பிய ₹1000 Challan மெசேஜ்
2. அரசு தளத்தில் Challan Not Found என்று வரும் படம்
இது ஆதாரத்துடன் கூடிய செய்தி



கருத்துகள்