கர்நாடகாவில் பரபரப்பு! போலி உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் ஆயுள் கைதி விடுதலை - சிறைத்துறை DIG சோமசேகர் கைது
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் நடந்த போலி உச்சநீதிமன்ற உத்தரவு வழக்கில், கர்நாடக சிறைத்துறை தற்போதைய *DIG சோமசேகர் கைது* செய்யப்பட்டுள்ளார்.
*வழக்கின் பின்னணி என்ன?*
- கர்நாடகாவை சேர்ந்த ரவுடி சங்கர் என்பவர் 2001-ம் ஆண்டு கொலை, ஆட்கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றார்.
- 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததாகவும், அதில் விடுதலை உத்தரவு வந்ததாகவும் *போலியான ஆவணம்* தயாரிக்கப்பட்டது.
- அந்த போலி உத்தரவை வைத்து *13.11.2018 அன்று சங்கர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.*
பல ஆண்டுகளுக்கு பிறகு இது பற்றி சந்தேகம் எழுந்து விசாரணை நடந்ததில், அது போலி உத்தரவு என தெரியவந்தது.
இந்த வழக்கில் 2018-ல் பரப்பன அக்ரஹாரா சிறையின் தலைமை கண்காணிப்பாளராக இருந்த சோமசேகருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவருக்கு சிறை துணை அதிகாரி ஸ்ரீகாந்த் உதவி செய்துள்ளார்.
ஏற்கனவே ஆயுள் கைதி சங்கர் மற்றும் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது DIG சோமசேகரை பரப்பன அக்ரஹாரா போலீசார் நேற்று (அக்.05) கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரு DIG அளவிலான அதிகாரியே இப்படி செய்தது கர்நாடக சிறைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ---


கருத்துகள்