அழகப்பா பல்கலைக்கழகத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மாவட்ட தடகளப் போட்டி: அமைச்சர் Dr. T.K. பிரபு துவக்கி வைத்தார்
காரைக்குடி: அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் புனர்வாழ்வு அறிவியல் துறை, அழகப்பா பல்கலைக்கழக அறிவுசார் குறைபாடு மற்றும் ஆட்டிசம் சிறப்புப் பள்ளி
மற்றும் ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ் பாரத் தமிழ்நாடு அமைப்பு இணைந்து நடத்திய சிவகங்கை மாவட்ட அளவிலான அறிவுசார் குறைபாடு உடைய மாணவர்களுக்கான தடகளப் போட்டி 10.10.2026 அன்று பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.*நிகழ்ச்சி நிரல்:*
அணிவகுப்பு, பிரார்த்தனை பாடல், ஒலிம்பிக் தீபம் ஏற்றுதல், விளையாட்டு போட்டி அறிவிப்பு, மருத்துவ முகாம், விழிப்புணர்வு பிரச்சாரம், கலை நிகழ்ச்சிகள், சிறப்பு விருந்தினர் உரை, பரிசு வழங்கல், நன்றியுரை, தேசிய கீதம்.
இவ்விழாவிற்கு அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் (பொ) மூத்த பேராசிரியர் ஜெ. ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். துறைத் தலைவர் முனைவர் ஜெ. சுஜாதாமாலினி வரவேற்புரை ஆற்றினார்.
தலைமை உரையில் துணைவேந்தர், "சிறப்பு மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தவும், தன்னம்பிக்கையுடன் முன்னேறவும் இது போன்ற போட்டிகள் அவசியம்" என்றார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு கனிம வளத்துறை அமைச்சர் Dr. T.K. பிரபு பேசுகையில், "மாற்றுத்திறனாளி மாணவர்களின் விளையாட்டுத் திறன், உற்சாகம் பாராட்டத்தக்கது. அவர்களுக்கு சம வாய்ப்பும் ஊக்கமும் வழங்குவது அரசின் கடமை" என்றார். பின்னர் அவர் ஒலிம்பிக் தீபம் ஏற்றி போட்டிகளை துவக்கி வைத்தார்.
*பங்கேற்ற 9 சிறப்புப் பள்ளிகள் (350+ மாணவர்கள்):*
1. அழகப்பா சிறப்புப் பள்ளி ID & ஆட்டிசம்
2. நம்பிக்கை சிறப்புப் பள்ளி
3. செயின்ட் ஆன்னீஸ் கருணாலயா
4. ரெசிடென்ஷியல் சிறப்புப் பள்ளி
5. நிர்மல் சிறப்புப் பள்ளி
6. செயின்ட் குவானெல்லா அன்பகம்
7. மதர் சிறப்புப் பள்ளி
8. அன்னை சாரதா சிறப்புப் பள்ளி
9. ஆற்றல் சிறப்புப் பள்ளி
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு துணைவேந்தர் மற்றும் பதிவாளர் Prof. A. செந்தில்ராஜன் பரிசுகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் ஆட்சி மன்ற உறுப்பினர்கள் பேரா. வசீகரன், பேரா. பாலமுருகன், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பேரா. எம். ஜோதி பாசு, கல்வியியல் புல முதன்மையர் பேரா. ஜி. கலையரசன், ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ் பாரத் தமிழ்நாடு செயலாளர் பிரபாகரன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
போட்டிகள் அனைத்தும் அழகப்பா பல்கலைக்கழகத்தின் ஆதரவுடன் நடைபெற்றது. அணைத்து மாணவர்களும் உற்சாகமாக கலந்து கொள்ள ஆசிரியர்கள் உதவினர், மதியம் அணைவருக்கும் பல்கலைக்கழகத்தின் சார்பாக உணவுகள் வழங்கினர்,


.jpg)
.jpg)









கருத்துகள்