சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! FCRA உரிமை அல்ல, சலுகை மட்டுமே!*
*சென்னை, அக்.07:* கொடைக்கானல் தியான மையம் வழக்கில் மத்திய அரசின் FCRA நிராகரிப்பை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
வழக்கு விவரம்:
▪️ *வழக்கு:* Kanzeon Public Charitable Trust Vs Union of India (MHA)
*நீதிமன்றம்:* சென்னை உயர் நீதிமன்றம் - மதுரை கிளை
*தேதி:* அக்டோபர் 06, 2026
*அமர்வு:* நீதிபதிகள் G.R.சுவாமிநாதன் & M.D.சுமதி
*வழக்கு வகை:* FCRA பதிவு நிராகரிப்பை எதிர்த்த மேல்முறையீடு
*வழக்கின் பின்னணி:*
கொடைக்கானலில் மாண்டிசோரி பள்ளி என்ற போர்வையில் Zen தியான மையம் நடத்தி வந்த Canzion Trust, வெளிநாட்டு நிதி பெற FCRA-க்கு விண்ணப்பித்தது. மத்திய உள்துறை அமைச்சகம் அதை நிராகரித்தது.
விசாரணையில் அதிர்ச்சி - அந்த அறக்கட்டளையின் பின்னணியில் கிறிஸ்தவ மத போதகர் இருந்ததும், புத்தர் சிலை அருகில் பெரிய சிலுவை வைக்கப்பட்டிருந்ததும் அம்பலமானது. Form FC-3A-வில் மத அடையாளத்தை மறைத்ததாக நீதிமன்றம் கண்டறிந்தது.
*நீதிபதிகள் கூறிய 4 முக்கிய கருத்துகள்:*
*"வெளிநாட்டு நிதி உரிமை அல்ல"* - FCRA பதிவு என்பது அரசு வழங்கும் சலுகை, பிறப்புரிமை அல்ல!
* "இறையாண்மைக்கு அச்சுறுத்தல்"* - மதமாற்றத்திற்கு வெளிநாட்டு நிதியை பயன்படுத்துவது நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்து!
* "இந்தியா Salad Bowl"* - இந்தியா என்பது எல்லாம் உருகும் Melting Pot அல்ல, பல கலாச்சாரங்கள் தனித்துவத்துடன் இருக்கும் Salad Bowl!
* "சட்டம் அனைவருக்கும் சமம்"* - மதமாற்றத்தை தூண்டும் எந்த அமைப்பிற்கும் FCRA கிடையாது, அது இந்து அமைப்பாக இருந்தாலும் சரி, கிறிஸ்தவ அமைப்பாக இருந்தாலும் சரி!
*நீதிமன்றத்தின் முக்கிய அவதானிப்பு:*
"Unlike Hinduism which is inclusive, the Abrahamic religions are inherently exclusive" என்று கூறி, ஆபிரகாமிய மதங்கள் இயல்பாகவே மற்றவர்களை விலக்கும் தன்மை கொண்டவை என்று சுட்டிக்காட்டியது.
இந்த தீர்ப்பு வெளிநாட்டு நிதியை தவறாக பயன்படுத்தும் அமைப்புகளுக்கு ஒரு எச்சரிக்கை மணி!
*#MadrasHC #FCRA #KanzeonTrust #PublicJustice #Breaking #GRSwaminathan #Kodaikanal*
---

கருத்துகள்