நெஸ்லே டெய்ரி ஒயிட்னர் பாதுகாப்பற்றது - FSSAI !
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) இன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
டெல்லி, தி லலித் (Bharat Hotels Ltd) நட்சத்திர ஓட்டலில் இருந்து சேகரிக்கப்பட்ட நெஸ்லே லோ ஃபேட் டெய்ரி ஒயிட்னர் மாதிரி, பரிசோதனையில் பாதுகாப்பற்றது மற்றும் தரத்திற்கு பொருந்தாதது என உறுதியாகியுள்ளது.
FSS Act 2006-ன் கீழ் இந்த மாதிரி UNSAFE & SUBSTANDARD என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், தி லலித் ஓட்டலுக்கு உடனடியாக இந்த தயாரிப்பின் விற்பனையை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சந்தையில் உள்ள இருப்புகளை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என FSSAI கூறியுள்ளது.
*ஆய்வக அறிக்கை என்ன கூறுகிறது?*
ஆய்வக பகுப்பாய்வில், மாதிரியில் பாஸ்பரஸ் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக காணப்பட்டது. இதனால் தரம் குறைந்த உணவு பொருள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
*நெஸ்லே நிறுவனத்தின் தரப்பு:*
நெஸ்லே இந்தியா பதிலளித்துள்ளது. "நெஸ்லே லோ ஃபேட் டெய்ரி ஒயிட்னர் முழுமையாக பாதுகாப்பானதும், நிர்ணயிக்கப்பட்ட தரத்துக்கு இணங்கியதும் ஆகும்" என்றார்.
"பாலில் இயற்கையாகவே பாஸ்பரஸ் காணப்படுவது இயல்பு. ஆய்வகம் மொத்த பாஸ்பரஸை அளந்துள்ளது, சேர்க்கப்பட்ட பாஸ்பரஸ் அல்ல. நாங்கள் அனைத்து FSSAI வரம்புகளுக்கும் இணங்கி செயல்படுகிறோம்" என்றார்.
FSSAI உடன் முழுமையாக ஒத்துழைத்து தகுந்த விளக்கத்தை வழங்குவோம் என்றும் தெரிவித்தது.



கருத்துகள்